குங்குமப்பூ 809
குங்குமப்பூ 809 குங்குமப்பூ இதன் தாவரவியல் பெயர் குரோகஸ் சடைவஸ் (Croeus sativus). இதன் வேறு பெயர்களாவன: ஞாழல்,கேசரி, குங்குமக் கேசரி. குங்குமப்பூ என்பது சூலக முடிகளைக் கிள்ளியெடுத்து உலர்த்திய பின் கிடைக்கும் பொருளாகும். இது இரிடேசி என்னும் ஒரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது 15-25 செ.மீ. உயரம் வரை வளரும் சிறு செடியாகும். நிலத்திற்கு அடியில் உள்ள கந்தம் (Corm) எனப் படும் இதன் தண்டு 2.5 செ.மீக்கு மேற்பட்ட குறுக்களவு கொண்டது. இக்கிழங்கின் தண்டைச் சுற்றி இலையடிச் செதில்கள் உறை போல் மூடி யிருக்கும். 6-10 இலைகள் வரை காணப்படும். லைகள் குறுகியவை, நீளமானவை. பூக்கள் சிறு கொத்துகளாகவோ தனியாகவோ தோன்றுகின்றன. பூக்களும் இலைகளும் ஏறக்குறைய சமநீள முடையவை. பூக்கள் நீலம் அல்லது ஊதா நிறமுடையவை. மகரந்தப்பைகள், மகரந்தக் கம்பி களைவிட நீளமானவை. மஞ்சள் நிறமானவை. சூலகத் தண்டு உச்சியில் மூன்று சூலக மூடிகளாகப் பிரிந்திருக்கும். சூலக முடி, கிச்சிலிச் சிவப்பு நிற மானது. சூலகத்தண்டு 2,5 செ.மீ.க்கு மேல் நீள முடையது. குங்குமப் பூச்செடி ஐரோப்பாவிற்கு உரியது. ஆசியா மைனரில் இது தோன்றியிருக்கக் கூடும் என்னும் சுருத்தும் உள்ளது. இது ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், துருக்கி, பாரசீகம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் பயிர் செய்யப்படு கிறது. இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே இது பயிராகி வருகிறது. காஷ்மீரிலும், ஸ்ரீநகருக்கு அருகில் 1590 மீ. உயரத்தில் உள்ள பம்ப்பூர் பீடபூமியிலும், ஜம்முவிலுள்ள கிஷ்ட்வார் என்னும் இடத்திலுமே குங்குமப்பூத்தாவரம் மிகுதியாக விளைகிறது. பெரும்பாலும் இச்செடியின் கிழங்குகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடப்படுகின்றன. ஒருமுறை நட்ட செடி 10-15 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கள் தோன்றும். பனி நீங்கியவுடன் பூக்களைக் கொய்து அவற்றுள் இருக்கும் சூலக முடிகளையும், சூலகத்தண்டுகளையும் கிள்ளியெடுத்துச் சூரிய ஒளி யில் அல்லது இளம் சூடான கரியடுப்பில் மிதமாக உலர்த்த வேண்டும். கிழங்குகளை நன்கு பண்படுத்தப்பட்ட வடிகால் லசதி உடைய நிலத்தில் 7.5-10 செ.மீ ஆழத்தில் புதைக்க வேண்டும். பயிரிடப்பட வேண்டிய நிலம் முற்றிலும் களிமண் அழுகும் பசுந்தழைகள் ஆகியவை யற்று இருக்க வேண்டும். குங்குமப்பூச் செடி 2 1. முழுச்செடி 2,கிழங்கு 3.பூ 4. சூல்முடி 5. மகரத்தப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பயிரிடப்பட்டால் அடுத்து வரும் இளவேனிற் காலத்திலோ லையுதிர் காலத்திலோ பூக்கும். இலையுதிர் கால இனத்தை இளவேனிற் காலத் தொடக்க நிலையில் பயிரிட வேண்டும். காயமோ சிதைவோ இல்லாத விதைக் கிழங்குகளைத் தேர்ந் தெடுப்பதன் மூலம் பூஞ்சைகளால் ஏற்படும் நோய் களைப் பரவலாகக் கட்டுப்படுத்த முடியும். அனைத்துச் சிறிய கிழங்குகளையும் ஆண்டுக்கொரு முறையோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நன்கு ஆய்வு செய்தால் புதிய சூழலுக்கு ஏற்றவாறு நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புக் கிட்டும். ஒவ்வொரு முறையும் இலைகள் முதிர்ந்து காய்ந்த பின்னரே மேற்கூறிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். புதிய கிழங்குகள் பழைய கிழங்குகளின் மேலும் நிலமட்டத்திற்கு மேலும்தோன்றும். எனவே இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நல்ல வளமான செழிப்பான கிழங்குகளை எடுத்து மறு நடவு செய்யவேண்டும். இத்தாவரத்தின் விதைகள் நிலத்தில் வீழ்ந்தால் மேலோட்டமாக முளைத்து வளர்கின்றன. இயற்கையாக முளைக்கும் காலத்திற்கு முன்பாக விதைகளை மிகு குளிர்ச்சிக்கு உட்படுத்தினால் அவை நன்றாக முளைக்கும். மூன்றாம்பருவ காலத்தில் இவை பூக்கும். சூலசுமுடிகளை மட்டும் கிள்ளியெடுத்துப்பக்குவப் படுத்திய குங்குமப்பூ. முதல் தரமாகும். சூலகத் தண்டையும் சேர்த்துத் தயாரிக்கப்படுவது இரண் டாம் தரமாகும். பூ முழுவதையும் உலர்த்தி, குச்சி