பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்று நோய்கள்‌ 63

கன்று ஈனமுடியாமையில் உடனடி நடவடிக்கைகன். தாய்ப்பசு அல்லது எருமை மடி இறங்கி, கருப்பையின் வெளித்துளை வீங்கி, பசை போன்ற பொருள் வெளி வரத் தொடங்கியதும் கன்று ஈனும் தருணம் அடைந்து விட்டதாகக் கருதி, தனியே பிரித்து வைத்தல் வேண்டும். பனிக்குடம் எனப்படும் கருப்பையில் கன்றைச் சுற்றியுள்ள நீர்மப்பை உடைந்து வெளிவந்தபின் தாயை மிகுந்த கவனத்துடன் நோக்க வேண்டும். அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் கன்று வெளி வரத் தாய் முயற்சிக்கிறதா இல்லையா எனக் கவனித்தல் வேண்டும். கன்று ஈனும் அறிகுறிகள் கண்ட 18 மணி வெளிவர நேரத்திற்குள் கன்று வேண்டும். ல்லையெனில், கால்நடை மருத்து வரை அணுகி, மாட்டைக் சுவனிக்கச்செய்தல் வேண்டும். சிறிது காலந்தாழ்த்தினாலும் அறுவை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்; கால்நடை மருத்துவரைத் தவிர, பிறரைக் கொண்டு மருத்துவம் செய்ய முற்படுவதாலும், தாய், கன்று ஆகியவற்றின் உயிருக்குக் கேடு ஏற்படக்கூடும். ஈனும் இவை தவிர, பொதுவாகக் கன்று தருணத்தில் ஆரோக்கிய நிலை, சோகை இல்லாமை போன்றவற்றைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். கன்று ஈனும் நிலையில் (parturition) முதல் நிலை 6-8 மணி நேரமும், இரண்டாம் நிலை 30.60 நிமிடமும் ஆகும். இதை அடுத்து நேரம் மிகுதி யானால் ஏதேனும் ஒரு காரணத்தால் கன்று ஈன முடியாமை வந்துள்ளதாகக் கருதிக் காலம் தாழ்த் தாமல் கால்நடை வேண்டும். மருத்துவரை அணுகுதல் மருத்துவம். மருத்துவம் அளிப்பதற்கு முன் எந்தக் காரணத்தினால் கன்று ஈனமுடியாமை ஏற்பட்டது என அறிதல் வேண்டும். அத்தகைய காரணத்தைக் கண்டுபிடித்து அக்குறையை நீக்கி, பிறகு கன்றினை வெளியே இழுத்தல் முறையாகும். எ.கா: தாயின் மூலம் முன்னர்க் குறிப்பிட்ட காரணங்களால் கன்று ஈன முடியாமை ஏற்படின் அதற்குத் தகுந்த மருத்துவம் அளித்தல் வேண்டும். கன்றின் மாறுபட்ட அமைப்பு இருக்கைக் கால்களின் அமைப்பு, தலை கழுத்து ஆகியவை முடிந்தும், மாறுபட்டும் இருக்கும்போது அவற்றைக் கால்நடை மருத்துவர் மூலம் சரிசெய்து, இயற்கையாகக் கன்று இருக்கும் அமைப்பைக் கருப்பையில் கொணர்ந்து அதன்பின் கன்றை வெளியே இழுத்தல் வேண்டும். கன்றை வெளியே எடுக்கும் முறைகள் உள்ளே தள்ளுதல் (repulsion). இம்முறையில் கன்றைச் சிறிது அழுத்திக் கருப்பையின் உள்ளே கன்று நோய்கள் 63 தள்ளுவதால் மாறுபட்ட மடங்கிய கால், கழுத்து, தலை குறுக்காகவோ, கீழ்ப்புறமாகவோ, பக்க வாட்டிலோ நோக்கி இருக்குமாறு கன்றைச் சரி செய்ய இடவசதி கிடைக்கிறது. சுற்றுதல் (rotation). கன்றை அதன் நீள் அச்சில் சுற்றுவதால் முன்பே சுற்றி அமைந்து இருக்கும் கன்றை இயற்கை அமைப்பில் கொணர முடியும். குறுக்காகச் சுற்றுதல். கன்றைக் குறுக்கு அச்சில் சுற்றுவதால் இயற்கை அமைப்புக்குக் கொண்டு வர முடியும். கால், தலை இவற்றைச் சரிசெய்து இயற்கை அமைப் வெளியே புக்குக் கொண்டு வருதல். கன்றினை இழுத்தல் (forced extraction), செயற்கை ஆற்றலின் உதவி (மனிதபலம் மற்றும் கயிறு, கொக்கி போட்டு இழுத்தல்). . கவனிக்க வேண்டியவை, தகுந்த பாதுகாப்போடு கவனத்துடன் ஒரே அளவு விசையுடன் இழுத்தல் வேண்டும்; கன்று வெளிவரும் பாதையை நன்கு வழ வழப்பாக அமைத்தல் வேண்டும்; கால்நடை மருத் துவர் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது; மிசு அதிக அளவுள்ள கன்றினை விசைமூலம் கூடாது. எடுத்தல் கருப்பையில் இயற்கையான அமைப்பு இருக்கைக்குக் கொண்டுவாராமல் விசையின் மூலம் வெளியே எடுக்கக்கூடாது. இதனால் கருப்பை கிழிந்து விடக்கூடும். இரத்தப் பெருக்கு ஏற்பட்டு உயிருக்கே கேடு வரும். உண தடுக்கும் முறைகளும் பாதுகாத்தலும் நிறைசினை மாடுகளைத் தனியே கட்டிவைத்து எளிய வுடன் நீர் அதிக அளவு கொடுத்துப் பாதுகாக்க லாம். எருமைகளை நீரில் புரளவிடாமல் தடுப்புகள் மூலம் கருப்பைச் சுழற்சியைத் தவிர்க்கலாம். நிறை சினை மாடுகளை அடிக்கடிக் கால்நடை மருத்துவர் மூலம் கண்காணிக்கச் செய்து தடுக்கலாம். ஆனால் மரபியல் கோளாறுகளுக்கு, கருப்பையில் மாறுபட்ட அமைப்பு உடைய கன்றுகளை ஈனும் காலத்தில் கால் நடை மருத்துவர் கண்காணிப்பிலேயே கன்றை வெளியே எடுக்க வேண்டும். கன்று நோய்கள் ஆர். பாலகிருஷ்ணன் பல சன்று பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் வரை நோய்களால் எளிதில் தாக்கப்பட்டு இறந்துவிட வாய்ப்பு உண்டு. ஈன்ற கன்று ஒரு மணி நேரத்திற்குள் தாயிடமிருந்து சீம்பால் அருந்த வேண்டும். இல்லாவிடில் கன்றின் உடலில் நோய்