பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/831

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குசில்‌ 811

கமலா, மரமாகும். குங்கும மரம் (monkey face tree) இரு வித்திலைத் தாவரக் குடும்பமாகிய யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது தமிழில் சிந்தூரி, குங்குமம், கபிலி, கபிலா என்றும் குறிப்பிடப் படும். கமலச் சாய மரம் என்றும் இதற்குப் பெய ருண்டு. இம்மரத்தின் உயரம் நடுத்தரமானது; கள் பெரியவை; அகன்றவை. இலைகளின் அடிப் புறத்தில் சுரப்பிகள் உள்ளன. இலை முழுதும் மெல்லிய தூவிகள் அடர்ந்துள்ளன. இம்மரத்தின் கனிகள் உலர் வெடி வகையானவை. 1. செடி, 2. பழங்கள். குங்குமமரம் 3. சிளை, 4. 5-மகரந்தக் கேசரங்கள், 6, 7-கவகம் ( நீர் வெட்டுத் தோற்றம், குறுக்கு வெட்டுத் தோற்றம்) 8, 9- மலர் IN லை வெடிகனி முதிர்ந்து உலர்ந்து, மூன்றாக வெடிக் கும். கனியின் மேற்புறத்தில் செந்நிறச் சுரப்பிகள் உள்ளன இவற்றிலிருந்து கமலச் சாயம் பெறப் படுகிறது. தாவரத்தின் மரப்பட்டை சாம்பல் நிற மானது. மரக்கட்டை சாம்பல் வண்ணமாகவோ, இளஞ்சிவப்பு வண்ணமாகவோ இருக்கும். மென்மை யான இம்மரக்கட்டை சிறந்த எரிபொருளாகும். இந்தியாவில், தக்காணத்திலும், மேற்கு மலைத் தொடர்ப் பகுதிகளிலும், கர்நாடகத்தின் குன்றுப் குசில் 8/1 பகுதிகளிலும் 5000 அடி உயரம் வரை உள்ள களில், குறிப்பாக இலையுதிர் காடுகளிலும் திறந்த முட்புதர்வனப் பகுதிகளிலும் குங்கும மரம் காணப் படுகிறது. வெடிகனியிலிருந்து பெறப்படும் சாயம் ஒளிர் ஆரஞ்சு நிறமானது. ச்சாயம் தலைமுடிச் சாயத் தயாரிப்பிலும் தடவு மருந்துகளிலும் (ointments ) விரைவில் உவரும் வண்ணங்களிலும் வார்னிஷிலும் முக்கிய பொருளாக அமைந்துள்ளது. கனித்தோலில் காணப்படும் சுரப்பிகளும், தூவி களும் கசப்பானவை. இவை மருத்துவப் பண்புகளைக் கொண்டவை.குடற்புழு நீக்கியாகவும் (anthelmintic) பேதி மருந்தாகவும் பயன்படும். கனியில் ரோட் லரின், ஐசோரோட்லரின் ஆகியவற்றுடன் குறைந்த வெப்பநிலையிலும் மிகு வெப்ப நிலையிலும் உருகும் ரைசின் என்னும் மெழுகுப் பொருளும் உள்ளன. சி. முருகேசன் குசில் இப்பறவை குக்குலிபார்மீஸ் வரிசையில் குக்குவிடே குடும்பத்தைச் சேர்ந்தது. குசில் (Rhopodytes viridiro. stris) தென்னிந்தியாவிற்கு உரியது. வட இந்தியா வில் காணப்படும் (R.tristis) சிறப்பினத்தைவிட அளவில் சிறியது. வீட்டுக்காக்கை அளவுள்ள இது 20 செ.மீ. நீளமுள்ள வெள்ளை நிற முனைகளோடு கூடிய நீண்ட வால் கொண்டது. உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த சாம்பல் நிறமாகவும் மார்பு வயிறு ஆகியவை இளஞ்சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிற மாகவும் இருக்கும். பருத்த பச்சை நிற அலகும் கண் களைச் சுற்றியுள்ள நீலநிறத்திட்டும் வாலிறகுகளின் வெள்ளை விளிம்பும் இதை எளிதில் அடையாளங் கண்டுகொள்ள உதவுகின்றன. புதர் சமவெளிகள், மலையடிவாரங்கள் ஆகிய பகுதி களில் வறள் காடுகளையும் லாண்டானாப் களையும் முட்செடிகள் வளர்ந்துள்ள பகுதிகளையும் சார்ந்து தனித்தோ இணையாகவோ கிளைகளினூடே புகுந்து திரியும் இது பறக்கும் ஆற்றல் குன்றியதாகும். மிகக் கடினத்துடன் ஒரு புதரிலிருந்து மற்றொரு புதருக்குப் பறந்து செல்வதைக் காணலாம். இலை தழை, கொடிகளினூடே நுழைந்து மறைந்து தாவித் தாவி ஊர்ந்து செல்வதே இதன் வழக்கம். எப்போதும் து தரையிறங்கி இரைதேடுவதில்லை. இதன் பழக்கவழக்கங்கள் செண்பகத்தின் (Crow-pheasant ) பழக்கவழக்கங்களை ஒத்தவை. கம்பளிப் பூச்சி, வெட்டுக்கிளி. பல்லி முதலியவற்றை உணவாகக் கொள்கிறது. செண்பகம் போல் குரல் எடுத்துக் கத்தும் பழக்கம் இதனிடம் இல்லை. மார்ச் - ஜூன் முடிய உள்ள பருவத்தில் மூங்கில் மற்றும் முட்புதர் களினிடையே தரையிலிருந்து 1-2மீட்டர் உயரத்தில்