குடசப்பாலை (சித்த மருத்துவம்) 813
அல்லியிதழ்களிலிருந்து வெளிர்சிவப்பு நிறச் சாயம் எடுக்கப்படுகிறது. இச்சாயம், பட்டுத் துணி களுக்குச் சாயமேற்றவும், உணவுப் பொருள்களுக்கு நிறமேற்றவும் பயன்படுகிறது. இதன் இதன் விதைகளி லிருந்து குசும்பா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் தூய்மை செய்யப்பட்டபின் சமையலுக்குப் பயன்படுகிறது. பம்பாய் குசும்பா விதைகளைக் கடலை, எள் இவற்றுடன் சேர்த்து எண்ணெய் எடுப் பர். இதற்கு இனிப்பு எண்ணெய் (sweet oil) என்னும் வணிகப்பெயருண்டு. சோப், வண்ணப்பூச்சு, வார்னிஷ் ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது. மேற்பரப்பில் ஒளிரும் தன்மைக்காக வண்ணப்பூச்சுகளில் குசும்பா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதை நெய்யில் கலப்படம் செய்வதுண்டு. இத்தாவரம் முழுமையான மருத்துவப்பயன் உடையது. பேதி மருந்தாகவும், வியர்வை வெளியேற்றியாகவும், நீர்க்கோவை நீக்கி யாகவும், மஞ்சள் காமாலை, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. -நா. வெங்கடேசன் குட்டனகோரைட் இயற்கையில் அரிதாகக் கிடைக்கும் இக்கனிமம் கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு ஆகிய வற்றுடன் இணைந்த கார்பனேட்டுடன் காணப்படு கிறது. இதன் வேதி மூலக்கூறு Ca (Mn, Mg, Fe) (CO). இக்கனிமம் வெண்மை, வெளிர் ஊதா, வெளிர் ரோஜா நிறங்களில் காணப்படுகிறது. ஒளி உட்புகாத்தன்மை கொண்ட இது குறைந்த அளவு ஒளி மிளிர்வையும் பெற்றுள்ளது. இது அறுகோணப் படிகத் தொகுதியைச் சார்ந்தது. இதன் மூன்று வலிமையான ஒளி விலகல் வரிசை செவ்விணை வடிவப் பக்கத்தில் 2.94 (100) ஆகவும், 1.814 (30), 1.837 (25) ஆகவும் கண்டறியப் பட்டுள்ளது. இதன் ஒளியியல் மாறிலி, ய = 1.727, 1.535.இக்கனிமம் எதிர் ஒளி சுழற்றும் பண்பைக் கொண்டுள்ளது. மோஸ் அளவுகோலின்படி, இதன் கடினத்தன்மை 3.5-4; அடர்த்தி 3.12. இக்கனி மத்தின் மேற்பிளவு (1011) பக்கத்தில் சீரானதாகவும். தெளிவாகவும் உள்ளது. கனிம முறிவு ஓரளவு குவிந்த பரப்பைக் கொண்டுள்ளது. இக்கனிமம் எளிதில் முறியும் தன்மை கொண்டது. இக்கனிமம் இயற்கையாகத் தோன்றும்போது இதன் படிக உருவ அமைப்புச் சீரற்றுச் சிதைவற்றே உருவாகிறது. மேலும், இக்கனிமத்தின் மொத்த அமைப்பு, இதன் பிளவுப் பகுதிகளின் மூலமாக எளிதில் உடையும் தன்மையைப் பெற்றுள்ளது. குட்டனகோரைட், (kutnahorite), நியூ ஜெர்ஸி குடசப்பாலை (சித்த மருத்துவம்) 8/3 யில் பிராங்ளின் என்னும் இடத்திலும், செக்கோஸ் லோவாக்கியா நாட்டிலுள்ள வாலாடிஸ், குட்ன கோரா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும். மெக்ஸிகோவில் புரோவிடினியா என்னும் இடத்தி லும், ஜப்பானிலுள்ள ரூர்ஜிமா சுரங்கப் பகுதியிலும் காணப்படுகிறது. எஸ். சுதர்சன் நூலோதி.J.Sinkankas, Mineralogy. Van Nos- trand Reinhold, East West Press, New Delhi, 1969. குடசப்பாலை (சித்த மருத்துவம்) பட்டையை முறையாகக் குடிநீரிட்டு 16 - 32. லிட்டர் வரை நாளும் மூன்று வேளை கொடுத்து வர, சுழிச்சல் வகை அனைத்தும் நீங்கும். பட்டையைப் பிழிந்து சாறெடுத்து, இஞ்சிச்சாறு ஒரு நிறை சேர்த்து, அத்துடன் சிறிது சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட வயிற்று நோய், மேகநோய் முதலியவை போகும். பட்டையைக் குடிநீரிட்டு வாய் கொப் பளிக்கப் பல்வலி தீரும். பட்டைச் சாற்றை எண்ணெ யிலிட்டுக் காய்ச்சி, கரப்பான், சொறி, சிரங்கு முதலிய நோய்களுக்குத் தடவ நன்மை தரும். பட்டை 6.10 கிராம், வில்வப்பழச் சதை 6.10 கிராம், மாதுளம் பட்டை 3.5 கிராம் இம்மூன்றையும் உலர்த்திப் பொடி. செய்து 434,5 - 875 மி.கிராம் வீதம் தேனில் சர்க்கரையில் கலந்து கொடுக்கக் சுழிச்சல்கள் நீங்கும். குடசப்பாலை இலையைப் பசும் பாலில் அரைத்து உட்கொண்டு வந்தால் எலிக்கடி, நச்சுக்கரப்பான், உடல் கரப்பு, அனைத்து நச்சு வீக்கம் இவை தீரும். பெருமரத்துப்பட்டை அதிவிடயம், முத்தக்காசு, அசமதாகம், குடசப்பாலைப் பட்டை இவற்றை ஒரு நிறையாயரைத்துத் தயிரிவாவது, காடியிலாவது கரைத்துக் கொடுக்க அதிசார பேதி தீரும். . குடசப்பாலை, அதிவிடயம், கோரைக்கிழங்கு, சாதிக்காய், சுக்கு, அபின், கஞ்சா, கழற்பருப்பு, இலவம்பிசின், சீரகம், மாங்கொட்டைப் பருப்பு, வில்வப்பழம் ஆகியவற்றை ஒரு நிறையாக எலுமிச்சம் பழச்சாற்றிலரைத்துக் குன்றிபோலுருண்டை செய்து முற்கூறிய சாற்றில் கொடுக்க அதிசாரப் பேதி தீரும். சிற்றாமுட்டிவேர், வில்வக்காய், சீந்தில்தண்டு, குடசப்பாலை, சுக்கு. முத்தக்காசு, நிலவேம்பு. கஞ்சா விதை இவற்றைச் சேர்த்துக் கஷாயஞ்செய்து கொடுக்க அதிசாரக் காய்ச்சல் தீரும். சே. பிரேமா