பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/834

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 குடல்‌ அடைப்பு

8/4 குடல் அடைப்பு குடல் அடைப்பு கவோ. இந்நோய் முழுமையாகவோ, அரைகுறையாகவோ, தீவிரமாகவோ, நாட்பட்டோ. எளிய வகையாக இறுக்கத்துடன் (strangulation) கூடியதாகவோ இருக்கலாம். குடல் சிக்கிக் கொண்டாலோ முறுக்கிக் கொண்டாலோ, அதன் இரத்த ஓட்டம் தடைப்படுவ தால் குடல் அடைப்பு (intestinal obstruction) படுகிறது. ஏற் காரணங்கள், குடலின் உள்துளை அடைபடும் போது அல்லது குடல் அசைவு தடைபட்டுச் செய லிழப்பு நேரும்போது குடல் அடைப்பு ஏற்படலாம். முன்னதற்கு அறுவை தேவை. பின்னதற்கு மருத் துவமே பயனளிக்கும். அனைத்து வயதிலும், ஒட்டுப் பொருள்களும், குடல் பிதுக்கங்களும், குடல் அடைப்புக்குக் காரணங் களாக அமைகின்றன. குழந்தைப்பருவத்தில், குடல் உள் செருகல் (intussusception) காணப்படுகிறது; வயது வந்தவர்களிடையே, குடல் முறுக்கம், புற்று நோய், பக்கத்தசை வளர்ச்சி ஆகியவை காரணங் களாக உள்ளன. வயது முதிர்ந்தவர்களிலும், குழந்தை களிலும், படுக்கையாக இருப்பவர்களிலும் குடலின் உள் காணப்படும் மலம் இறுகிக் கணக்கற்ற நாக்குப் பூச்சிகள், குடல் அடைப்பை உண்டாக்கலாம். மலக் வயிற்று அறுவைக்குப் பிறகு அதிர்ச்சி நிலைகளில், தண்டுவடக் காயங்களில், குறை இரத்த அழுத்த நிலையில், குடலசைவின்மை உண்டாகிச் செயலிழப் புடன் குடல் அடைப்பும் நிகழ்கிறது. மிகையான அறிகுறிகள். சுருக்கு வலி, வயிற்றிரைச்சல், மந்தமான இடைவிடாத வலி காணப்படுகிறது. நிலையான வலியுடன் தொடுவலியும் ஏற்பட்டால் குடல் இறுக்கம் எனக் கொள்ள வேண்டும். சிறு குடலின் மேற்பகுதி அடைபட்டுப் போகும்போது வாந்தி மிகையாக உண்டாகிறது. சிறுகுடலின் கீழ்ப்பகுதியோ பெருங்குடலோ அடை பட்டால் வாந்தி இராது. செயலிழப்பு அடைப்பில் சோர்ந்துள்ள நோயாளியின் வாயிலிருந்து துர் நாற்றம் கொண்ட நீர்மம் வெளிப்படும். நீடித்த குடலடைப்பில் வாந்தி பீறிட்டு அடிப்பதுடன், விட்டு விட்டும் தோன்றும். வயிற்று உப்புசம் பரவலாக இருந்தால் பெருங்குடல் அடைப்பு என்றோ செய லிழப்பு அடைப்பு என்றோ கொள்ளலாம். குடலசைவுகள், முழுமையான அடைப்பில் இல்லாமையால் மலமும் காற்றும் வெளிப்படா. சிறுகுடலின் மேற்பகுதி அடைப்பில், மலம் தானாகவே பிரியும் அல்லது இனிமா கொடுத்த பின்னரும் பிரியும். பெருங்குடலடைப்பில் சளியுடன் கூடிய பேதி ஏற்படும். தொடுவலி, வயிற்றினுள் கட்டி ஆகியவை குடலடைப்பில் காணப்படும். செயலிழப்பின் குட லடைப்பில் குடல் அசைவு ஒலிகள் கேளா. சிறு உண்டாவ குடலின் மேற்பகுதி அடைப்பால் வாந்தி தால் நீர்மங்களும், மின் உப்புகளும் (electrolytes) இழக்கப்படுகின்றன. கீழ்ப்பகுதியில் அடைப்பு இருந் தால், உப்புசமடைந்த குடல் பகுதிகளில் தேக்கம். ஏற்படுவதால், வாந்தி இல்லாமலேயே நீர்ம இழப்பு உண்டாகிறது. குளோரைடு, சோடியம், பொட்டா போன்றவை பெருமளவில் இழக்கப்படு கின்றன. வயது முதிர்ந்தவர்களில் சிறுநீரக முறிவு ஏற்படலாம். சியம் நிற்க ஆய்வுகளில் நோயாளியை வைத்தும் மல்லாந்த நிலையிலும் வெறும் வயிற்றின் எக்ஸ்-கதிர்ப் படங்கள் எடுக்க வேண்டும். நீர்ம மட்டங்களும் (fluid levels) உப்புசமடைந்த குடல் பகுதிகளும் எக்ஸ் கதிர்ப் படங்களில் காணப்படும். பேரியம் கொடுத்து எக்ஸ் கதிர்ப் படங்கள் எடுப்பதும் நோய் அறுதியிடலில் உதவும். குடல் மருத்துவம். நோய் உறுதியானவுடன், அடைப்பை அறுவை செய்து நீக்க வேண்டும். சிரை வழி நீர்மங்கள் செலுத்த வேண்டும். இறுக்கத்துடன் கூடிய குடல் பிதுக்கம் ஏற்பட்டால் உடனடியாக அறுவை செய்ய நேரிடும். சிலபோது, குடல் செருக லால் இரைப்பை, குடல் நீர்மங்களை அகற்றினாலே அடைப்பு நீங்கிவிடும். புற்றுநோயால் அடைப்பு ஏற்பட்டால் சிரை வழி இரத்தம் செலுத்த நேரிடும். இழந்த நீர்மங்களையும், மின் உப்புகளையும் ஈடு செய்வது மிகவும் இன்றியமையாததாகும். சாரதா கதிரேசன் Goorg. M. H. Sleisenger and J. S. Fordtran, Gastro intestinal Disease, Second Edition, W. B. Saunders Company, London, 1978. குடல் அலைவின்மை மனிதனின் உணவுப்பாதை தானாகவே சுருங்கி விரியும் ஆற்றல் கொண்டது. இதற்கு அலை அசைவு (peristalsis) என்று பெயர். இந்த அலை அசைவின் மூலமாக உணவுப்பொருள்கள் உணவுக்குழாயிலி ருந்து சிறிதுசிறிதாகக் குதம் வரை தள்ளப்படு கின்றன. இதனால் உணவுப்பொருள்கள் செரித்து. சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றால் சத்துகள் உறிஞ்சப்படுகின்றன. ஒரு சில நோய் நிலைகளில் இந்தக்குடல் அசைவு குறைந்து அல்லது இல்லாது போய்விடும். பெரும்