பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/835

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடல்‌ அழற்சி 815

பாலும் நரம்பு - தசை அமைப்பு ஒடுக்கப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. சாதாரணமாக, வயிற்று அறுவை மருத்துவத் திற்குப் பிறகு (abdominal surgery) குடல் அலை வின்மை காணப்படும். பொதுவாக அறுவை மருத்துவம் முடிந்து சிறுகுடல், இரைப்பை, பெருங் குடல் ஆகியவை முறையே 24 - 48 மணி 3-5 நாள்களுக்குப் பிறகே குடல் அலைவை மீண்டும் பெறுகின்றன. சில சமயங்களில் நீண்ட நேரம் நீடிப்பதால் நோய் உண்டாகிறது. கணைய காரணங்கள். சிறுகுடல் வால் அழற்சி (appen dicitis) முனைப்புடைய அழற்சி (acute pancreatitis) தண்டுவட எலும்பு முறிவு (fracture of spine), சிறுநீர் நாள வலி (ureteric colic), நுரையீரல் அழற்சி விலாஎலும்பு முறிவு (pneumonia fracture ribs), வயிற்றறைப் பின்புற இரத்தக்கட்டி (retroperitoneal haematocels இரத்த நச்சுப் பொருள் (septicae- mia), இரத்தச் சோடிய மற்றும் பொட்டாசியக் குறைவு (hyponatraelmia, hypokalaemia) ஆகியவை குடல் அலைவின்மைக்குக் காரணங்களாகும். B நோய் அறிகுறி. காற்றுப் பிரியாமை, பசியின்மை, வயிறு வீக்கம், காய்ச்சல், வாந்தி, மயக்கம், அயர்ச்சி போன்றவை இருக்கும். சில நேரங்களில் இரத்த ஓட்டச் சீர்குலைவு, மயக்கம், தன் உணர்வு இழத்தல் ஆகியவை நேரக்கூடும். சரியான நேரத்தில் மருத்துவம் செய்யாவிட்டால் இதயமும் செயலிழந்து விடக்கூடும். மருத்துவம் 1.பொது மருத்துவம். இந்நோய்க்கான காரணங் களை முதலில் கண்டுபிடித்து அவற்றுக்கேற்ப மருத்துவம் தர வேண்டும். அறுவை மருத்துவம் செய்திருந்தால் அதனால் உண்டாகும் இரத்தக்கசிவு. சீழ்க்கட்டி போன்றவற்றைச் சரி செய்யவேண்டும். இரத்தத்தில் சில உப்புகள் குறைந்திருந்தால் அவற்றைச் சிரை வழியே செலுத்தலாம். குடலில் சுரந்திருக்கும் மிகுதியான நீர்ச் சுரப்பை வாயில் ஒரு குழாய் செலுத்தி வெளியேற்ற வேண்டும். சிரை மூலம் உடலுக்கு வேண்டிய நீரைச் செலுத்துவதால் இரத்த அழுத்தத்தை உயர்த்த இயலும். குடல் 2. மருந்து, பொதுவாக, இரைப்பை, ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் (spasmodic drugs) மருந்து வகைகளையும் துணைப்பரிவு மண்டல மருந்துகளையும் கொடுக்கக் கூடாது. இவற்றால் குடல்புண், குடல் துளை ஆகி கியவை ஏற்படக்கூடும். ஆனால், இவ்வகை மருந்துகளைப் பரிவு மண்டலத் தைச் செயலிழக்கச் செய்துவிட்டுப் பயன்படுத்த லாம். அறுவை மருத்துவம், குடலில் இருக்கும் காற்ற ழுத்தம், நீர்ம அழுத்தத்தை அறுவை செய்து நீர்மம், குடல் அழற்சி 8/5 காற்று ஆகியவற்றைச் சிறிது சிறிதாக வெளியேற்ற லாம். இதனால் நோயாளிக்கு வலியும் வயிற்றுச் சுமையும் குறையும். பெருங்குடலின் ஒரு பகுதியில் துளையிட்டுக் குடல் அழுத்தத்தைக் குறைக்கலாம். குடலில் அடைப்பு ஏதாவது இருந்தால் சரி செய்ய லாம். -ச.ஆதித்தன் குடல் அழற்சி இது சிறுகுடலில் ஏற்படும் அழற்சி நோய்களைக் குறிப்பிடுகிறது. நுண்ணுயிர்கள், உணவில் சில ஒவ்வாமைப் பொருள்கள் கலப்பது, காரணமறியா நோய்கள். குரோன் நோய் போன்ற பல காரணங் களால் அழற்சி வரக்கூடும். பலவகை நுண்ணுயிர்களால் குடல் அழற்சி ஏற் படலாம். நுண்ணுயிர்களின் நச்சு,குடலின் உட்புறச் சுவரில் அழற்சியை உண்டாக்குகிறது. அழற்சியால் குடற் பரப்பின் மீது சிவந்த நிறமாற்றம் ஏற்படுகிறது. நுண்ணோக்கி வழியே அந்த இடத்தைப் பார்த்தால், வெள்ளையணுக்கள் (எல்லா வகைகளோடும்) அங்கே சூழ்ந்திருப்பதைக் காணலாம். இரத்த நாளங் களும் நீரைச் சுரக்கின்றன. இந்த மாற்றங்களையே அழற்சி என்பர். பல நுண்ணுயிர்களில் டைஃபாய்டு நுண்ணுயிர்கள். பேதி உண்டாக்கும் நுண்ணுயிர்களுடன், எக்சினியா கியூடோ டியுபெர்குலோசிஸ் என்னும் நுண்ணுயிரியும் பங்கேற்கும். மேலும் கீரைஸ்ட்ரிடியம், பெர்ப்ரின் ஜென் என்பவையும் முக்கியமான நுண்ணுயிர்கள் ஆகும். இறைச்சியில் இந்நுண்ணுயிர்கள் கலந்து, உண வாகச் சமைக்கப்படும்போது, சமையல் சூட்டி லிருந்து தப்பி, பின்னர் அந்த உணவு சில மணி நேரம் குளிர்விக்கப்பட்ட பிறகு பரிமாறப்பட்டால், அந்த நுண்ணுயிரிகள் பலவாகப் பெருகி, சாப்பிடுபவரின் குடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வாந்தி, பேதி, வயிற்று வலி போன்றவை தோன்றுகின்றன. இவ்வகையிலேயே மிகத் தீவிர மான பாதிப்புக்கு உள்ளாக்கும் நோய் உள்ளது. இது குடல் அழற்சி அழுகிப் போதல் எனக் குறிக்கப்படும். உலகப் ஜெர்மனியில், இரண்டாம் போருக்குப் பிறகு இந்நோய் பெரும் பான்மையாகக் காணப்பட்டது. குடல் உட்சுவர் முழுதும் சிவந்து இரத்தக் கசி வால் குடற் பரப்பு அழுகி அழியத் தொடங்கும். நோயாளியின் நிலை மிகவும் சீர்கெட்டு இறந்து விடவும் நேரிடலாம். மற்றொரு வகை அழற்சிக்கு,