பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/837

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடல்‌ அழற்சி நோய்கள்‌ 817

கருதப்படுகிறது. ஆனால் நோயுற்றவர்களில் பெரும் பாலோர் மனநிலை தாக்கப்படாதவர்களாகவே உள்ளனர். அன்றியும் அறுவை மருத்துவத்துக்குப் பின் இவர்களுக்கு முழுக் குணம் தெரிவதால் மன நிலை மாற்றங்கள் இந்நோயால் உண்டாகும் என்பதே சரியானதாகத் தோன்றுகிறது. எதிர்ப்பாற்றலால் உண்டாகும் விளைவு. உணவு. மருந்து போன்றவற்றில் உள்ள ஒவ்வாமைப் பொருள் கள், நுண்ணுயிரியால் உண்டாகும் எதிர்ப்பு அல்லது தன் எதிர்ப்புப் போன்றவற்றால் சிலேட்டுமப் படலம் அழிக்கப்பட்டு நிலையாகப் புண் உண்டாகலாம். உணவிலுள்ள சில புரதச் சத்துகள் ஒவ்வாமையை உண்டாக்கிப் பெருங்குடலைத் தாக்கக்கூடும். பெருங் குடல் புண் அழற்சி தன் எதிர்ப்பு நோயாகவும் கருதப் படுகிறது. சில நோயாளிகளின் இரத்தத்தில் பெருங் குடல் எதிர்ப்புப் பொருள் (antibody) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எல்லோரிட மும் இத்தன்மை இருப்பதைக் கண்டறிய வில்லை. இயல் இயக்கக் பெருங்குடல் புண் அழற்சி உள்ளவர்களுக்கு மூட்டு நோய் (arithritis), முதுகெலும்பு குறைபாடு (ankylosing spondylitis), தோலில் சிவப்புக் கணுக்கள் (Eaythema nodosum) உண்டாதல் அல்லது தோல் திசுக்கள் படுதல் (pyoderma gangrenosum), கண் விழிப்படல அழற்சி (iritis), ஈரல் அழற்சி (hepatitis) போன்றவையும் உண்டா கின்றன. எனவே உடலைப் பொதுவாகப் பாதிக்கும் நோயாக இது கருதப்படுகிறது. இருப்பினும் இந் நோயின் விளைவாக இவை தோன்றுவதாகவும் கருதப்படுகிற கிறது. ஏனெனில் அறுவை மூலம் பெருங் குடலை எடுத்த பின் வையனைத்தும் மறைந்து விடுகின்றன. அறிகுறி. பெருங்குடல் சிலேட்டுமப் படலம் தடித்திருக்கும். ஆங்காங்கு சிறு புண்கள் உண்டாகும். பிறகு அனைத்துப் புண்களும் ஒன்று சேர்ந்து பரவி இடையிடையே நோயுற்ற சிலேட்டுமப் படலத் தீவு களாகத் தெரியும். இச்சிலேட்டுமத் தீவுகள் வீக்கத் துடன் தனித்துக் காணப்படும். புண்கள் ஆறுவதற்கு உதவும் திசுக்கள் (granulation tissue) மிகு வளர்ச்சி யடைந்து அதன் மீது சிலேட்டுமம் படர்ந்தால் அது சிறு கட்டிகள் போன்று தெரியும். இத்தகைய கட்டி கள் பெருங்குடல் முழுதும் பர்வி யிருக்கும். சில சமயம் புண்களே உண்டாகாமல் சிலேட்டுமப் படலம் தடித்து, அதற்கு வெளிப்புறத்தி லுள்ள தசையில் ஒட்டியிருக்கும். ஆறுவதற்கு உதவும் திசுக்களும் நிரம்பியிருக்கும். பெருங்குடல் மடிப்புகள் (haustrations) நீங்கி உயிரற்ற உலோகத்தாலான குழாய் போன்றிருக்கும். சில சமயம் குடல் சுவர் மெல்லியதாகி, காற்று நிறைந்து விரிவடைந்து கேடு உண்டாக்கும். சில சம அ.க.8-52 குடல் அழற்சி நோய்கள் 817 யங்களில் குடலில் சுருக்கமும் அடைப்பும் உண்டாகும். இந்நிலை புற்றுநோய் உண்டாகவும் வகை செய்யும். நுண்ணோக்கி வழியாகப் பெருங்குடலில் திசுத் துணித்தாய்வு (tissue biopsy) செய்து பார்த்தால் உறுதியாக நோயைப் பற்றி அறியலாம். நோயால் சிலேட்டுமத்திலும், சிலேட்டும் அடிப்பகுதியிலும் (sub mucosa) மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இங்கு வட்டச்செல்கள் (round cells) பிளாஸ்மா செல்கள். ஈயோசினோஃபில்கள், மாக்ரோஃபாஜஸ் முதலியவை ஊடுருவியிருக்கும். அரிதாக இத்தகைய செல்கள் தசைக்குள்ளும் ஊடுருவும். புண் ஆற்றும் திசுக்க ளிருக்குமிடத்தில் சிலேட்டுமச் சுரப்பிகளின் கீழே மறைவான சீழ்க்கட்டிகள் (cryptabscesses) வாகும். பல சீழ்க்கட்டிகள் ஒன்று சேர்ந்து சிலேட்டு மத்தைச் சிதைத்துப் பெரிய புண்ணை உண்டாக்கும். உரு பெருங்குடலில் இந்நோய் உண்டானபின் நோயின் தன்மை குறைந்து புண்கள் முழுதும் ஆறி எபித்தீலியல் செல்கள் மீண்டும் வளர்ந்து இயல்நிலை தோன்றும், ஆனால் இது நிலையானதன்று. நோய் மீண்டும் தோன்றிய சிலேட்டுமத்தில் அனைத்து மாற்றங்களும் மீண்டும் உண்டாகலாம். தசைகளிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். தசைகள் தடித்தும் சில இடங்களில் சுருங்கியும் அடைப்பு ஏற்பட வழி செய்யும். அறிகுறி. பேதியாதல், இரத்தப்போக்கு, சீதம் கலந்த மலம் கழித்தல் போன்ற நோய்க் குறிகள் உண்டாகும். இதில் முக்கியமானது இரத்தப் போக்கு. து இல்லையென்றால் பெருங்குடல் புண் அழற்சி நோயாக இருக்காது. வயிற்றில் வலியுண்டாகும். விட்டுவிட்டு வலியுண்டாதல் சாதாரணமாக ருக்கும். நோய் முற்றினால் தொடர்ச்சியான வலி இருந்துகொண்டே இருக்கும். உடல் குறைதல், எடை குறைந்து மெலிதல், சோகை முதலியவை தொடரும். ஆற்றல் ரத்தச் மூட்டுநோய் (arthritis), விழிப்படல அழற்சி தோல் புண் (pyoderma gangrenosum),ஈரல் அழற்சி, முதுகெலும்பு முடக்குவாத அழற்சி (ankylosing spondylitis) போன்றவற்றில் ஒன்றிரண்டோ அனைத்துமோ இருக்கலாம். நோயைக் கண்டறிதல். நோயாளியை ஆய்தல், கதிர்வீச்சுப் படங்கள், பெருங்குடல் உள்நோக்கிக் கருவி இவற்றின் மூலம் கண்டறிதலோடு திசுத் துணித்தாய்வு செய்தலும் நோயை உறுதிப்படுத்தும். பெருங்குடல் புண் அழற்சியால் உண்டாகும் நோய் கள். பெருங்குடலில் துளைவிழுதல், வரம்பின்றி விரிவடைதல் (toxic megacolon), மிகை இரத்தப் போக்கு, குடல் சுருக்கம், அழற்சிக் கட்டிகள், ஆசன வாய் வெடிப்பு (anal fissure), சீழ்க்கட்டி, ஆசனப் பக்கத்துளை (anal fistula), புற்றுநோய் முதலியன.