பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/838

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 குடல்‌-இரைப்பைக்‌ குருதிப்பெருக்கில்‌ தமனி வரைபடம்‌

818 குடல்- இரைப்பைக் குருதிப்பெருக்கில் தமனி வரைபடம் . மருத்துவம், முழு ஓய்வு, சத்துணவு, மனநோய் மருத்துவம், குடல் நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (intestinal antibiotics), கார்டிசோன், எதிர்ப்பாற்றல் குறைப்பு மருந்துகள் (immuno suppressants) போன்ற வற்றை அளித்துப் பொது மருத்துவம் செய்தால் நல்ல பலன் ஏற்படும். வாய் கார்ட்டிசோன் மருந்தை வழியாகக் கொடுக்கலாம். இதைக் குடல் கழுவுமுறை மூலம் பெருங்குடலில் தங்கச் செய்தால் நோயிருக்குமிடத் திலேயே வேலை செய்து நன்கு பலனளிக்கும். சல்பாலசின் (சாலசோபைரின்) என்னும் மருந்து இந்நோய்க்குச் சிறந்தது. இதையும் எனிமா மூலம் கொடுத்துப் பலனை அதிகமாக்கலாம். அறுவை மருத்துவம். மருந்து முறையில் குணப் படுத்த இயலாவிடில், உடல்நிலை மிகவும் சீர்கெடும் போது அறுவை மேற்கொள்ள வேண்டும். புற்று நோய் அறிகுறி இருந்தாலோ, குடல் துளை விழந் தாலோ, பெருமளவில் இரத்தப் போக்கு ஏற்பட் டாலோ அறுவை செய்ய வேண்டும். இம்முறையில் நோயுற்ற பெருங்குடல் முழுமையும் எடுத்துவிட வேண்டும். சிறுகுடல் இறுதிப் பகுதியை வயிற்றுப் பகுதியில் வெளிக்கொணர்ந்து அதன் வழியாக மலம் வெளியேறச் செய்தல் வேண்டும் (lieostomy). சிறுகுடலின் இறுதியில் ஒரு பை போன்று செய்து அதைக்கழிப்பிடத்தில் இணைத்து யற்கையாக மலம் வெளியேறச் செய்யலாம். இத் தகைய அறுவைக்குப் பிறகு எல்லோரையும் போன்று இந்நோயாளிகளும் பணியாற்ற இயலும். ஆர்.பி.சண்முகம் குடல் - இரைப்பைக் குருதிப் பெருக்கில் தமனி வரைபடம் இரைப்பைக் குடல் பகுதிகளைக் கண்டறிய, தொடைத் தமனி வழியாகச் (fermoral artery) சிறு குழா யொன்றைப் பெருந்தமனிக்குள் செலுத்தி அதிலிருந்து ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் கிளைத் தமனிகளில் கதிர்வீச்சில் வெளிப்படும் மருந்தைச் செலுத்தினால் அந்தந்த உறுப்புகளின் இரத்த ஒட்ட அமைப்பை நன்கு அறியலாம். அதைப் படமெடுத்து ஆராய்ந்து பார்க்கலாம். இதற்குத் தக்க பயிற்சியும், ஏற்ற கருவி களும் தேவைப்படுகின்றன குடல், இரைப்பையில் தமனி, சிரை அல்லது தந்துகிகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் கருதி னால் இம்முறையைச் செய்யலாம். இரத்தக்கசிவு ஏற்பட்டால் இவ்வாய்வு மூலம் எந்தப் பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். கட்டிகள் ஏற் பட்டிருந்தால் புதிய இரத்தக்குழாய்கள் தோன்றி யிருப்பதையும் அப்பகுதி இரத்தக்குழாய்கள் இடம் கட்டியால் பெயர்ந்து இருப்பதையும் பட்டிருப்பதையும் கண்டறியலாம். அழுத்தப் தமனி வரைபடத்தின் உதவியால் சில மருத்துவ முறைகளும் செய்யலாம். இரத்தக் கசிவு ஏற்படு மிடத்தையும் எந்த இரத்தக் குழாய் மூலம் இது. ஏற்படுகிறதென்பதையும் கண்டறியும்போது, அதே ஆய்வுக்குழாய் மூலம் உரிய மருந்தைச் செலுத்தி அந்த இரத்தக் குழாயை அடைத்து இரத்தக் கசிவை முடியாத நிறுத்திவிடலாம். அறுவை மூலம் எடுக்க கட்டிகளைச் செய்ய மேற்காணும் முறையைக் கையாளலாம். இரத்தக் கசிவு 0.5 மிலி/நிமிடத்தில் வெளியேறு வதைத் தமனி வரைபடம் மூலம் கண்டறிய முடியும். கசிவு ஈரல் சுருக்க நோயில், இரத்தக் உணவுக் குழாய்ச் சிரைகள் விரிவடைந்து அதனின்றும் வெளி யேறும். ஈரல் வழியாகக் குழாயைச் செலுத்தி, போர்ட்டல் சிரை வழியாக வெளிவந்து இரைப்பை இடச் சிரைக்குள் சென்றால் இரத்தச் கசிவையும் கண்டுபிடிக்கலாம். அச்சிரையைப் பலவித இரத்தம் உறையச் செய்யும் பொருள்களைச் செலுத்தி அடைத்து இரத்தக்கசிவை நிறுத்தலாம். இரைப்பைப் புண்கள் அருகிலுள்ள தமனியில் ஊடுருவி இரத்தக் கசிவு உண்டாக்கும். பொதுவாக, உள் நோக்கிக் கருவி (endoscopy) மூலம் இதை எளிதாகக் கண்ட றிந்து அதன் மூலமாகவே மின்சாரம் செலுத்தி மூலம் நிறுத்திவிட (diathermy) அல்லது வேசர் முடியும். சிறுகுடல், பெருங்குடலில் இரத்தக் கசிவைத் தமனி வரைபடத்தில்தான் எளிதாகக் கண்டறிய இயலும். வரைபடம் எடுக்க உதவும் குழாய் மூல மாகவே மருந்துகளைச் செலுத்தி இரத்தக் கசிவை நிறுத்திவிடலாம். இரைப்பையில் சிலேட்டுமப் படலம் சிதைவுற்று இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. வாசோபிரஸ்ஸின் (vasopressin) என்னும் மருந்தை இட இரைப்பைச் சிரையில் சலுத்தி இரத்தக் கசிவை நிறுத்தலாம். இம்முறை யில் இரத்தக் கசிவு நிற்கவில்லையென்றால் எந்தக் கிளைத்தமனி அல்லது சிரை வழியாக இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ அதை அடைத்து விடலாம். ஜெர் ஃபோம் தன் இரத்த உறை கட்டி (Autologus clot) திசு ஓட்டும் பசைகள், எஃகு வளையங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி இரத்தக்குழாய்களை அடைக்கலாம். இடம் தமனி வரைபடக் குறைகள், சில நேரங்களில் இரத்தக் குழாய்களில் ஊசி செலுத்திய நீண்ட நேரம் விறைப்பாக இருக்கும் அல்லது இரத்த உறைதல் ஏற்பட்டால் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படும். அதற்குக் கீழேயுள்ள நாடிகளை