பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கன்று நோய்கள்‌

64 கன்று நோய்கள் எதிர்ப்பாற்றல் குறையத் தொடங்கும். பெரும்பாலும் கன்று நோய்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதாலும், உணவில் சத்துப்பொருள்கள் குறை வினாலும், சுற்றுப்புற நலக்கேட்டாலும் ஏற்படு கின்றன. ஆதலால், கன்றுகளைத் தாக்குகின்ற நோய் கள் பற்றி நன்கு அறிந்து தடுப்பு முறைகளைக் கை யாள்வதும், நோய் ஏற்பட்டால் உரிய காலத்தில் மருத்துவம் செய்து கொள்வதும் கன்று வளர்ப்பில் கவனிக்கத்தக்க கூறுகளாகும். இளங்கன்றுகளைத் தாக்கும் கொடிய நோய்கள் கொப்பூழ்க் கட்டி. கன்று ஈன்றவுடன் கொப்பூழ்க் கொடியை டிஞ்சர் அயோடினால் கழுவி 2.5செ.மீ விட்டு நூலால் கட்டிக் கத்தரியால் வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்யாவிடில், கொப்பூழ்க் கொடி வழியாகப் பலவித நுண்ணுயிர்கள் உடலினுள் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் அவை இரத் தத்தில் கலந்து கொப்பூழ் மற்றும் மூட்டுகளைத் தாக்குவது மட்டுமன்றி உடலின் உட்பகுதிகளான ஈரல், குடல், இதயத்தையும் பாதிக்கின்றன. நாளடைவில் கொப்பூழ்க் கட்டி ஏற்பட்டுச் சீழ் பிடித்து விடும். இவற்றை அறுவையால் தான் குணப்படுத்த முடியும். இந்நோய், ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. இதை, பெனிசிலின் மருந்து மூலம் குணப்படுத்தலாம். இவ் வித நோய் ஏற்படாமலிருக்க, கன்று பிறந்தவுடன் கொப்பூழ்க் கொடியை நுண்ணுயிர் எதிர் மருந்தால் கழுவித் தூய்மையாக்க வேண்டும். . கன்று வெள்ளைக் கழிச்சல் நோய். கன்று பிறந்தது முதல் ஒரு வாரம் வரை கழிச்சல் நோய் தாக்கு கிறது. கோலி என்னும் பாக்ட்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் கண்ட கன்றுகள் கடுமை யான பேதிக்குள்ளாகி வெள்ளை நிறமாகக் கழிந்து பின்னர் வலிமையிழந்து இறந்துவிடும். சாணம் நீர் போன்றோ, பிசுபிசுப்பாகவோ, இரத்தம் கலந்தோ மஞ்சள் நிறமாகவோ வெண்மை நிறமாகவோ, காணப்படும். பாதிக்கப்பட்ட கன்று, நீர் அருந்தாமல் சோம்பலாகக் கண்கள் குழி விழுந்து காணப்படும். 3-5 நாள்களில் நோயால் பாதிக்கப்பட்ட கன்றுகள் இறந்துவிடுகின்றன. அடிக்கடிக் கழிவதால் உடம்பி னுள் நீரிழப்பு (dehydration) ஏற்பட்டு மிகவிரைவில் வலிமையிழக்கின்றன. இதனால் கன்றுகள் இறந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவர்களை அணுகித் தேவையான குளுகோஸ் உப்புச்சத்துக் கொண்ட நீர்மங்களை வாய்வழியாகவோ நரம்பு வழியாகவோ கன்றின் உடலில் செலுத்தி நீரிழப்பை ஈடு வேண்டும். தவிர டெர்ராமைசின், நியோமைசின். சல்ஃபா, குளோரம்பின்கால் போன்ற மருந்துகளைக் கொடுத்து நோயைக் குணப்படுத்தலாம். செய்ய குடற்புழுக்கள், இளங்கன்றுகளைத் தாக்கும் குடற் புழுக்கள் உருண்டைப் புழுக்கள் ஆகும். அஸ்காரிஸ் எனப்படும் உருண்டைப் புழுக்கள் ஏறத்தாழ 14 நீள முடையன. பிறந்த கன்றுகள் பெருமளவில் இறப் பதற்குக் காரணம் கன்றுகள் பிறப்பதற்கு முன்பே அதன் வயிற்றில் வளரும் அஸ்காரிஸ் எனும் குடற் பசுவின் புழுக்களாகும். கன்று கருக்காலத்தில் கருப்பையில் வளரும்போதே பசுவின் வயிற்றிலுள்ள இவ்வகைக் குடற்புழுக்களின் முட்டைகள் கன்றின் வயிற்றிற்குக் கொப்பூழ்க் கொடி மூலம் சென்று குடற்புழுக்களாக வளர வாய்ப்புண்டு; எனவே கன்று பிறந்த ஏழாம் நாளில் பைப்ரசின் அடிப்பேட் மருந்தை 10மிலி அளவு கொடுத்துக் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும். கன்று இரத்தக் கழிச்சல் நோய். இந்நோய் புரோட்டோசோவா எனப்படும் ஒரு செல் உயிர் அணுவால் ஏற்படுகிறது. தாக்கப்பட்ட கன்றுகளின் குடல் பாதிக்கப்படுகிறது. கழிச்சல் திடீரெனத் தொடங்கும். கன்று இரத்த பேதி கண்டு இறந்து விடும். மேலும் தாக்கப்பட்ட கன்றுகள் இரத்தச் சோகையுடனும், வலிமையற்றும், மேல்மூச்சு வாங்கிக் கொண்டும், உணவு உட்கொள்ளாமலும் இருக்கும். நைட்ரோஃபியூரசான், சல்ஃபாமெசத்தீன், ஆம்ப ரசால் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுப் பதனால் நோயைக் குணப்படுத்தலாம். மாலைக்கண் நோய். பிறந்த கன்றுகள் சீம்பாலைக் குடிப்பதன் மூலம் போதுமான வைட்டமின் A சத்தைப் பெறுகின்றன. வைட்டமின் A பற்றாக் குறையால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. மேலும் நுரையீரல், குடல், கருப்பை முதலியன பாதிக்கப்படுகின்றன. இவற்றைப் போக்கச் சினைக் காலத்தின் இறுதி இரு மாதங்களில் தாய்ப் பசுவுக்குக் கூடுதலான பச்சைப்புல் தீவனம் அளித்தல் வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட கன்றுகளுக்குத் தினமும் மீன் எண்ணெய் 5 மி.லி. அல்லது வைட்டா பிளண்ட் (மி.லி. அளித்து வர வேண்டும். நிமோனியா பெருமளவில் இந்நோய் மழைக் காலங்களிலும், குளிர்காலத்திலும் கன்றுகளில் காணப்படுகிறது. தாய் இல்லாத இளங்கன்றுகளுக்கு வாய் வழியாகப் பாலை ஊட்டும்போது, ஊட்டுபவர் களின் கவனக்குறைவால் புரையேறி நிமோனியா ஏற்படுகிறது. இச்சமயங்களில் பால் உணவுக் குழாயை அடைவதற்குப் பதிலாக மூச்சுக் குழாயினுள் சென்று விடுகிறது. எனவே புரையேறி நிமோனியா (aspira- tion pneumonia) உண்டாகிறது. கவனமாகப் பால் ஊட்டுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். மேலும் தூய்மையான கொட்டில்களில் கன்றுகளைப் பேணு வதன் மூலம் கன்றுகளை நிமோனியா தாக்காமல் பாதுகாக்கலாம். சிரங்கு. சுன்றுகளில் சிரங்கு நலவாழ்வுக் குறை வால் ஒட்டுண்ணி மூலம் பரவுகிறது. மாலத்தியான்