820 குடல் கழுவல்
820 குடல் கழுவல் நாட்பட்ட கணைய அழற்சிக் கொண்ட நோயாளி களில் 30% கிரகிப்பு செரிமானக் குறைபாடுகளால் துன்பமடைகின்றனர். உருப்பெருக்காடியில் காணும் போது மலத்தில் எண்ணெய்த் துளிகளைக் கண்டால், கணைய நோய் உறுதியாகும். அவற்றில் கணையத் தலையின் புற்று நோய், நாட்பட்ட கணைய அழற்சி கணையக் கற்கள் நோய், கணைய நார்ப்பொருள்கள், நீர்ப்பை நோய் (fibro cystic disease) சோலிங்கர் எல்லிசன் கூட்டியம் போன்றவை அடங்கும். பித்த உப்புக் குறைபாடுகள். கொழுப்புப் பொருள் உட்கவரப்படுவதைப் பித்த உப்புகள் ஊக்குவிக் கின்றன. குறைந்த அளவில் பித்த உப்புகள் உருவாதல், வெளியேற்றப்படுதல், குறைந்த அளவில் சிறுகுடலில் மறு உட்கவர்தல், கல்வீரல் சுருக்கம், கல்லீரல் அழற்சி, கல்லீரல் உள் பித்தநீர்த் தேக்கம், கற்கள் புற்று நோய்ச் சுருக்கம் போன்றவற்றில் பித்த நாளம் அடைபடுதல், சிறுகுடலில் நுண்ணுயிரிகளின் மிகை வளர்ச்சி, சிறுகுடல் அழற்சி, காசநோய், குரோன் நோய், இலியம் அகற்றப்படுதல் போன்ற நோய் நிலைகளில் உண்டாகின்றன. மருந்துகள். நியோமைசீன், கோல்ச்சிசின், ஃபினைடாயின் (டைலாண்டின்) போன்றவை. இரத்த நிணநாளங்கள். குடல் இணைச் சவ்வு அடைப்பு, சிறுகுடல் நிணநாள் நிணநாளவிரிவு, அடைப்பு. பிற காரணங்கள். கியார்டியா பூச்சி நோய், புரத ஊட்டமின்மை, புரதம் இழக்கும் இரைப்பைச் சிறுகுடல் நோய், எக்ஸ் கதிர் வீச்சு. குடல் கழுவல் அ. கதிரேசன் குதம் வழியாக நீர் ஏற்றி, பெருங்குடலின் இறுதிப் பகுதியைத் தூய்மை செய்தலுக்குக் குடல் கழுவல் (enema) என்று பெயர். மலச்சிக்கலின் போது பெருங்குடலைத் தூய்மைப் படுத்தவும்,மருந்துகள், படுத்தவும், மருந்துகள் உடலுக்கு வேண்டிய நீர்மம் ஆகியவற்றை உட்செலுத்திக் குடலில் தங்க வைக்க வும் நோய் நிர்ணயத்திற்கு உதவவும் குடல் கழுவல் முறை பலலா றாகப் பயன்படும். இதற்குப் பேரியம் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. குடல் கழுவல் முறை. இம் முறையில் நோயாளி இடக் காலை மடித்து ஒருக்களித்துப் படுத்திருக்க வேண்டும். அந்நிலையில் வயிற்றுத் தசைகள் தளர்ந்த நிலையில் இருப்பதால் எளிதில் குடல் கழுவலுக்கு வேண்டிய குழாயை குதம் வழியாக மெள்ளச் A செலுத்தலாம். குடல் கழுவல் நீர்மம் உப்பு நீரா கிளிசரைனாகவோ கவோ, சோப்பு நீராகவோ. இருக்கலாம். குடல் கழுவலின் விளக்கம். ஏறத்தாழ 1 லிட்டர் (500-2000 க.செ.மீ) நீர்மம் தேவைப்படுகிறது. இது வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். இதை 25 செ.மீ. உயரத்திலிருந்து மெதுவாகப் பாயும்படிச் செய்ய வேண்டும். இவ்வாறு குடல் கழுவல் செய்யும் போது அருகில் ஒருவர் இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் சோர்வால் ஒரு சிலருக்கு மயக்கமும் ஏற் படலாம். சுவயம் ஜோதி குடல் சுரப்பிகள் இந்தச் சுரப்பிகள் குடலின் சிலேட்டுமப் படலத்திலும், சிலேட்டுமப் படல அடியிலும் அமைந்துள்ளன. சிறு குடல் சுரப்பிகள், மொட்டைப்பைச் சுரப்பிகள் (crypts of liberkuhn) எனப்படுகின்றன. எளிமை யான குழாய் வடிவமுடைய இந்தச் சுரப்பிகளின் நாளங்கள், சிறுகுடலுள் திறக்கின்றன. இவற்றின் வட்ட வடிவமான கண்ணுக்குப் படுவதில்லை. இச்சுரப்பிகளில் உள்ளன. அவை: வாய்கள், மூன்று விதமான புலப் செல்கள் தரம் பிரிக்கப்படாத செல்கள் (undifferentiated cells). இந்தச் செல்கள் எண்ணிக்கையில் பெருகி, மேல் நோக்கி நகர்ந்து தரம் பிரிக்கப்படுகின்றன. இறுதியாக அவை உதிர்ந்து விடுகின்றன. இம்முறை யில் சிலேட்டுமப் படலத்தின் மேல்தோல் தொடர்ச்சி யாகப் புதுப்பிக்கப்படுகிறது. சைமோஜெனிக் செல்கள் (zymogenic cells of paneth). எண்ணிக்கையில் மிகுந்த இவை சுரப்பி களின் உட்புறத்தில் காணப்படுகின்றன. இந்தச் செல் களில் சிறு துகள்கள் உள்ளன. இந்தச் செல்களே செரிமான நீரின், செரிமானப் பொருள்கள் டாகக் காரணமானவை. உண் அர்ஜன்டாபின் செல்கள் (argentaffin cells). இந்தச் செல்களில் உள்ள சிறு துகள்கள் வெள்ளி உப்பைக் சுவரும் தன்மை பெற்றவை. வெள்ளி உப்புடன் சேர்ந்து கறுப்பு நிறம் அடையும். இந்தச் செல்களின் உண்மையான தன்மையும். பணியும் இதுவரை முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை. பகுதியான முன் சிறு சிறு குடலின் முதல் குடலில் (duodenum) இந்தச் சுரப்பிகளைப் பிரன்