பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/844

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 குடல்‌ தாங்கிகள்‌

824 குடல் தாங்கிகள் நேரெதிராக அமைந்துள்ளமையால் இவை ஆல்சியோ நேரியாவிலிருந்து வேறுபட்டுள்ளன. மேலும் வாய்த் தட்டிற்கு அருகில் நான்கு சிற்றிடைச் சுவர்கள் உள்ளன. இவற்றின் சுருங்கும் தசைகள் ஒன்றை யொன்று நோக்கியவாறு அமைந்துள்ளன. இணைக் குடல் தாங்கிகளுக்கிடையிலுள்ள புறக்குழிகளில், ணையாக அமைந்த சிறிய குடல் தாங்கிகள் உள்ளன. மேற்கூறியவாறு கோனாக்டினியாவில் இரண்டு இணைச் சிற்றிடைச் சுவர்களும், புரோட் டாந்தியாவில் ஆறு இணைகளும், பல யிரிகளில் மிக அதிக எண்ணிக்கையிலும் ணைக் குடல் தாங்கி கள் உள்ளன. கடற்சாமந்திகளிடையே ஹால்கம்பாய்டஸ் (hal- compoides) ஒரு பொதுவான அடிப்படை அமைப்பைக் கொண்டுள்ளது. வை ஆறு ணை முழுக்குடல் தாங்கிகளைப் பெற்றுள்ளன. அவற்றுள் இரண்டு இணைகள் எதிரெதிர்க் குடல் தாங்கிகளாகும். இவற்றின் தசைகள் புறக்குழியில் உள்ளன. ஏனைய நான்கு இணைக் குடல் தாங்கிகளிலும் தசைகள் அகக்குழியில் உள்ளன. இந்த 12 குடல் தாங்கிகளுக் கும் முன் தோன்றித் (protonemes) தாங்கிகள் என்று பெயர். ஏனைய கடற் சாமந்திப் பொதுவினங்களின் புறக்குழிகளில் முழுமையற்ற சிறு குடல்தாங்கிகள் உள்ளன. அவற்றிற்குப் பின்தோன்றிய குடல்தாங்கி கள் (metanemes) என்று பெயர். ஹால்கம்பாவில் (halcompa) குறைவான ஆறு சிறு குடல் தாங்கிகளும் ஆறு இணையாக முழுமையான பெரும் குடல்தாங்கி களும் தொண்டைக் குழல் பகுதியில் இருக்கும். ஹாலோகிளாவா (holociava) என்னும் குழிக்குடலி 10 இணையான முழுமையான குடல்தாங்கிகளைப் பெற்றுள்ளது. கடற்சாமந்திகளில் பாலிலா இனப் பெருக்கம் காரணமாகவும் குடல் தாங்கிகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. கடற்சாமந்திகளில் வரிசை மாட்ரிபொரேரியா. பொதுவாக இவற்றின் தாங்கிகள் குடல் காணப்படும் அமைப்பை ஒத்துள்ளன. அக்ரோப்போராபோரைட்ஸ் ஆகியவற்றில் 12 குடல் தாங்கிகள் உள்ளன. இந்த 12 குடல் தாங்கிகளில் இரண்டு இணை எதிரெதிர் குடல் தாங்கிகளும், 4 தனித்த முழுமையான குடல் தாங்கிகளும், தனித்த குடல் தாங்கிகளுக்கு இணை யாக அமைந்த நான்கு முழுமையற்ற சிற்றிடைச் சுவர்களும் அடங்கும். ஏனைய பொது இனங்களில் புரோட்டோ தாங்கிகள் ஆறு இணைகளாக அமைந் திருக்கும். மேலும் புறக்குழிகளில் சிற்றிடைச் சுவர் கள் இணைகளாக மாறிமாறி அமைந்துள்ளன. வகைகளில் ஆறு இணைகளுக்கு மேற்பட்ட முழுமை யான சில பேரிடைச் சுவர்களும் உள்ளன. ஆக்ரோ போராவிலும் போரைட்சிலும் சிற்றிடைச் சுவர்கள் அகக்குழியிலும், பிறவற்றில் புறக்குழியிலும் வளர் கின்றன. வரிசை சூவாந்திடியா. இவ்வகை உயிரிகளில் குடல் தாங்கியின் எண்ணிக்கை ஆறு அல்லது ஆறின் பெருக்குத் தொகையில் உள்ளது. குடல் தாங்கிகள் இணையாகவும் பேரிடைச் சுவர்களும் சிற்றிடைச் சுவர்களும் தனித்தனியாகவும் ஆரங்களில் அமைந் துள்ளன. இரண்டு இணை எதிரெதிர்க் குடல் தாங்கி கள் உள்ளன. இவை வெளிப் புறச் சுருங்கும் தசை களைக் கொண்டவை. ஆனால், மேற்பக்க எதி ரெதிர்க் குடல் தாங்கிகள் சிற்றிடைச் சுவர்களாக விளங்குகின் றன. . சுவாந்தஸ் போன்றவற்றில், குடல்தாங்கிகளின் அமைப்பைக் குறளை (brachynemous) அமைப்பு என்பர். இவ்வமைப்பில் இணை ஒவ்வொன்றும் ஒரு பேரிடைச் சுவரையும், ஒரு சிற்றிடைச் சுவரை யும் கொண்டிருக்கும். மேலும் இடைச்சுவர்கள் புறக்குழிச் சுருங்கும் தசைகளைப் பெற்றுள்ளன. ஓரிணைக்கீழ் எதிரெதிர்க் குடல் தாங்கிகளே முழுமை யானவையாகும். எப்பிகுவான்தஸ் போன்ற சில சுவாந் திடுகளில், குடல் தாங்கிகளின் நீளிழை அமைப்பைக் காணலாம். இவ்வமைப்பில் மூன்று இணைகள் முழுமையானவையாக அல்லது பேரிடைச்சுவர்களாக உள்ளன. ஓரிணைக் கீழ் எதிரெதிர்க் குடல் தாங்கி களும் மேல் எதிரெதிர்க் குடல் தாங்கிகளிலிருந்து நான்கு ஐந்தாவதாக அமைந்துள்ள குடல் தாங்கிகள் ஆகியவை அனைத்தும் பேரிடைச் சுவர்களாக உள்ளன. வரிசை ஆண்ட்டிபெத்தேரியா. இவ்வகை உயிரி களில் 10 முழுமையான குடல் தாங்கிகள் உள்ளன. 6 அல்லது 12 குடல் தாங்கிகள் இணையாக அமைந் திருக்கும். இக்குடல் தாங்கிகளுள் ஆறு, முதல் நிலைக் குடல்தாங்கிகளாகும். இவற்றுள் நான்கு எதிரெதிர்க் குடல் தாங்கிகள்; எஞ்சிய இரண்டு குறுக்குவாட்டக் குடல் தாங்கிகளாகும். இக்குறுக்கு வாட்டக் குடல் தாங்கிகள் மிகவும் நீளமானவை. இவை இனப் பெருக்கச் செல்சுளையும் இழைகளையும் கொண் டுள்ளன. குடல்தாங்கித் தசைகள் நன்கு வில்லை. வளர வரிசை செரியாந்தேரியா. செரியாந்தஸ் இனத்தில் தனித்த பல அரைகுறைக் குடல்தாங்கிகள் உள்ளன. ஆனால் இவை இணைகளாக அமைந்துள்ளன. அனைத்துக் குடல் தாங்கிகளும், அவற்றின் வெளி முனைகளில் கீழ்நோக்கியவாறு அமைந்துள்ளன. மேன்மேலும் வளர்ச்சி ஏற்படும்போது புதிய குடல் தாங்கிகள் தொடர்ந்து கீழ் இடைச்சுவர்களுக்கு டைப்பட்ட பகுதியில் பெருகுகின்றன. கீழ் எதிரெதிர்க் குடல்தாங்கிகள் மிகவும் சிறியவை. இடைச்சுவர்களின் இடைவெளி கீழ்நோக்கியுள்ளது. இந்த இடைவெளிகளே ஏனைய ஆந்தோசோவாவின் சுருங்கும் தசைகளின் முகங்களுக்கு ஒத்துள்ளன . ஆல்சியோநேரியாவைப் போலவே இடைவெளி கள் சல்க்கல் குடல்தாங்கிகளை நோக்கி அமைகின்றன.