826 குடல் நடுக்கம்
826 குடல் நடுக்கம் ருவும் காயங்கள், துளைக்கும் காயங்கள், அறுவை மருத்துவத்தின் போது ஏற்படும் விபத்து போன்றவை யும் இத்துளை ஏற்படக் காரணமாகலாம். குடலில் அறிகுறி. குடல் துளை வழியாகக் உள்ளவை வெளிப்பட்டு, உதரவுறை (peritoneum) அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் துடிதுடிக் கும் அளவிற்கு வலி ஏற்படுகிறது. பிறகு அழற்சியால் நீர்ச் சுரப்பு அதிகரித்து வயிற்றில் நீர்த்தேக்கம் (ascitis) ஏற்படுகிறது. பிறகு நுண்ணுயிரிகள் அழற் சியை மிகுதிப்படுத்தும். நோயின் நடைமுறையும் அறிகுறிகளும் உதரவுறை அழற்சிக் கட்டம். நோயாளி அசைய முடியாமல் வலியால் வெளிறியும் வயிற்றைத் தொட்டாலே துடித்துப் போகும் நிலையிலும் காணப்படுவார். மேலும் வயிறு அசைவற்று இறுகி யும், உடலின் வெப்பநிலை குறைந்தும், நாடித் துடிப்பு ஓரளவு அதிகரித்தும் (80-90) காணப்படும். உருவெளித் தோற்ற நிலை. அடுத்து 3 மணி முதல் 6 மணி நேரம் வரை தொட்டால் துடிக்கும் வலி, இறுக்கம் ஆகியவை ஓரளவு குறைந்துவிடும். உடல் வெப்ப நிலையும் நாடித்துடிப்பும் மிகலாம். பரவலான அழற்சி நிலை. 6 மணிநேரத்திற்குப் பிறகு பரவலான அழற்சி நிலையில் குடல் அசைவும் ஒலியும் அடங்கிவிடுகின்றன. நாடித் துடிப்பு மேலும் அதிகரித்து வயிற்றில் நீர் தேங்கி நோயாளியின் நிலை நலிவுறத் தொடங்கும். நோய் தீவிரமற்ற நிலையில் மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் மந்த மாகத் தெரியும். நோய்க் கண்டுபிடிப்பு. கதிர்வீச்சு நிழற்படத்தில் நின்ற நிலையில் வயிற்றின் வலப் பக்கம் உதரவிதா னத்தின் கீழே காற்றுத் தெரியும். பித்தம் கலந்த நீரை, ஊசி மூலம் வெளிப்படுத்திய பின் முடிவுக்கு வரலாம். எக்ஸ் கதிர் மார்பின் படத்தில் இரண்டு உதர விதானங்களுக்கு அடியில் வளிமம்தேங்கியிருக்கும்.இது குடல் துளையின் விளைவாகும். குடல் துளையில் வெளிப்படும் வளிமம், இரண்டு உதரவிதானங்களுக்கு அடியிலும் காணப்படும். ஊசி மருத்துவம். அறுவைக்கு முன் மார்பில் ஏற்ற வேண்டும். வயிற்றைத் திறந்து, துளை ஏற் பட்ட இடத்தைக் கண்டு அதை அகற்றி, இணைத்து இரைப்பையின் பெரிய சவ்வை (greater omentum) அந்த இடத்திற்குப் போர்வையாக்க வேண்டும். உதரவுறையை நன்றாகக் கழுவி விட வேண்டும். வடியும் நீரை வெளிப்படுத்த ஒரு ரப்பர் துண்டை வைத்துத் தைக்க வேண்டும். வேண்டிய தடுப்பு . மருந்துகள் கொடுக்க வேண்டும். சுவாச, உடற் பயிற்சியை அளிக்க வேண்டும். சிக்கல்கள். 40 சதவிகிதத்தினர்க்கு இந்நிலை ஓர் ஆண்டிற்குள் மீண்டும் ஏற்படலாம். மேலும் ஐந்து ஆண்டிற்குள் 70 சதவிகிதத்தினர்க்கு இந்நிலை ஏற் படலாம். சில சமயங்களில் கட்டிகள் ஏற்படக் கூடும். சுவயம்ஜோதி துரைராஜ் நூலோதி. H. David Ritchie, Bailey & Love's Short practice of Surgery, 17th Edition; ELBS, London, 1979. குடல் நடுக்கம் . குழந்தைகளின் குரல்வளை சிறியது. நிணநீர் அதிக முடையது; தசையும் நரம்பும் எளிதில் தூண்டப் படுவன; ஆகவே சிறிதே குரல்வளை அழற்சித்தோன்றி னாலும் தாக்கம் மிகையாகும். முதலில் சிறு தொண்டைப்புண்ணாகத் தோன்றிப் பின்னர் இருமல், காய்ச்சலுடன் குரல் கம்மிவிடும். இருமினாலும் சளியை வெளியேற்றக் குழந்தைக்குத் தெரியாது. விரைவில் குரல் நாண்கள் சிவந்து, வீங்கி மூச்சு விடு வதில் துன்பம் தோன்றும். குரல் நாண்களில் இசிவு ஏற்பட்டுக் காற்று உள்ளே வரவும் வெளியேறவும் முடியாமல் குழந்தை துன்பப்படும். மூச்சுவிடும் போதெல்லாம் கழுத்திலும் மார்பிலும் குழியாகத் தோன்றும். டிஃப்தீரியரிவா அல்லது குரல்வளையில் வேற்றுப் பொருள் சிக்கியுள்ளதா என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். குரல் நடுக்கம் காய்ச்சலில்லாமலேயே ஏறக்குறைய 4-10 வயதுக் குழந்தையிடம் தோன்றும். சத்துணவில்லாத,உடல் நலம் குன்றிய, வைட்ட மின் சத்துக் குறைந்த குழந்தைகளிடம் இதைப் பெரும்பான்மையாகக் காணலாம். இரத்தத்தில் கால்சியம் குறைந்திருப்பதால் குரல் நாண்கள் இசிவு அடைகின்றன. இதற்குக் கால்சியமும் வைட்டமின் D யும் குறைவே காரணங்கள். குரல்வளை விறைப் பின்றித் தொய்வாக இருந்தாலும் குரல் நாண்கள் உள்ளே உறிஞ்சப்படுவதாலும் குரல் நடுக்கம் வரலாம். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீ ரன்று காகம் கரைவது போன்ற சத்தத்துடன் மூச்சுத் திணறலுடன் எழுந்து உட்கார்ந்து துன்புறும்.உடல் நீலமாக மாறும். கை, கால் விரல்கள் விறைத்து நிற்கும். முதலுதவியாக முகத்தில் குளிர்ந்த நீரை அழுந்தத் தெளித்து நாக்கை வெளியே இழுத்து, உடலெங்கும் நன்றாகத் தடவ வேண்டும். பிறகு கால் சியம், வைட்டமின்கள் கொடுக்க வேண்டும். டி.எம். பரமேஸ்வரன்