குடல்பால் மார்பு 827
குடல் நோய்கள் காண்க: கால்நடை நோய்கள் குடல்பால் து செரிமான வேளையில் சிறுகுடல் நிணநீர் நாளங்களில் காணப்படும் நீர்மமாகும். சற்றே கலங் கலாக, பால் போன்று வெண்மையாகவோ வெளிர் மஞ்சளாகவோ காணப்படும் இந்நீர்மம், நிண நீரோடு நுணுக்கமாகப் பால்மமாக்கப்பட்ட (emulsi- fied) கொழுப்புப் பொருள் அடங்கியது. இது உணவு செரித்தலின் விளைவாகத் தோன்றி, குடல் உறிஞ்சி களின் (villi) உள்ளடங்கிய குடல்பால் குழாய்களை (lacteals) அடைகிறது. நிலைப்படுத்தப்பட்ட பால்ம மாக உள்ள இக்கொழுப்புக் கலவை சிறுகோள வடி வுடைய கொழுமத்துக்கள்களைக் (chylomicrons) கொண்டது. சிறுகுடலின் சளிச் சவ்வு அணுக்களில் பாஸ்ஃபோ லிப்பிடோவும், புரத உறைகளில் கொழுப்பு மூலக் கூறுகளும் குவிக்கப்படுதலால் உருவாகும் கொழு மத்துகள்கள், குடல் குழாய்களின் உட்புகுந்து அங் கிருக்கும் நிண நீருடன் (lymph) கலப்பதால் குடல் பால் (chylep) தோன்றக்கூடும். . காரத் தன்மையான குடல்பால், உடலின் வெளியே எடுக்கப்பட்டால் உறையும் தன்மை யுடையது. இவ்வுறைவின் விளைவாகக் குடல்பால் ஊனீராகவும் (serum) உறைபுரதமாகவும் (fibrin) பிரியும். இவ்வாறு குடலுறிஞ்சிகளில் தோன்றும் குடல்பால், அங்கிருக்கும் குடற்குழாய்களின்று நெஞ்சு நாளத்தின் வழியாகக் காரையடிச் சிரையை (subclavian vein) அடைந்து அங்கு இரத்தத்துடன் கலக்கிறது. குடல்பால் மார்பு குடல்பால் மார்பு 827 குடல்பால் மார்பு (chylothorax) தோன்றுகிறது. உடலின் மிகப்பெரிய நிணநீர்க் குழாயான நெஞ்சு நாளம் (thoracic duct) மார்புக்கூட்டின் இடப் பகுதியில் இருப்பதால் இத்தகைய திரட்டு, பொது வாக இடப்புறத்திலேயே வரக்கூடும். மேலும், மார்புக் கூட்டின் உள்ளிருக்கும் பிற நிணநீர் நாளங்களில் உண்டாகும் கசிவுகளும் இதற்குக் காரணமாகலாம். நெஞ்சுநாளம் வல நிணப்பெருநாளம், நெஞ் சிடை நாளம் போன்ற நிணநீர் நாளங்களுக்கு ஏற் படும் தாக்கமோ தடையோ தான் குடல்பால் மார்பு நிலையைக் கூட்டுகின்றது. உள்மார்பு நிண நாளங்களுள் நெஞ்சு நாளமே பெரியதாகும். இந்நாளத்தின் தொடக்கம், வயிற்றி னுள் காணப்படுகிறது. சற்றே விரிந்து, ஒரு போல் து காணப்படுவதால், இப்பகுதி குடல்பால் எனப்படும். பை சிறுகுடலின் உட்பரப்பில் இருக்கும் விரலிகள் ஒவ்வொன்றனுள்ளும் ஒரு குடல்பால் குழல் உண்டு. செரிமானத்தின் விளைவாக உருவாகும் குடல்பால், ப்பால்குழல்களின் ஊடே பாய்ந்து. அவற்றின் கூட்டு இலக்கான குடல்பால் பையை அடையும். அங்கிருந்து புறப்படும் நெஞ்சு நாளத்தின் வழியோடிக் கழுத்துப் பகுதியில் இடக் காரையடிச் சிரையை அடைந்து இரத்தத்துடன் கலக்கும். மொத்தத்தில் உதரவிதானத்திற்குக் கீழுள்ள வயிற்றுப் பகுதியின் இருபுறங்கள் மற்றும் அவற்றின் மேலிருக்கும் நெஞ்சுக்கூட்டின் இடப்புறம் இவற்றில் உள்ள அனைத்து உடற்பகுதிகளின் நிணநீரும், கொழு நீரும் நெஞ்சு நாளத்தின் வழியாகவே பாய்கின்றன. எனவே, இந்நாளத்திற்கு ஏற்படும் சேதமே, குடல் பால் மார்பு தோன்றுவதற்கான முக்கிய காரணமா கிறது. படும் சேதமும் சுதா சேஷய்யன் இது மார்புக் கூட்டினுள்ளிருக்கும் நுரையீரல் உறை இடைவெளிகளில் (pleural spaces) கொழுநீரோ நிணநீரோ திரண்டிருப்பதைக் குறிக்கும். காரணங்கள். கொழுநீர் நிணநீர் நாளங்கள் சேதம் அடைந்தாலோ, அவற்றை நோய் தாக்கி னாலோ. அவற்றின் சுற்றோட்டம் தடைப் பட்டாலோ ஏற்படும் கசிவே இத்தகைய நிலைக்குக் காரணமாகிறது. நாளங்களிலிருந்து கசியும் நீர், ஈரலுறை இடைவெளிகளில் தேங்கித் திரளும்போது தவிர, ஏனைய உள்மார்பு நாளங்களுக்கு ஏற் இந்நோய்க்கான காரணமாகும். இவற்றின் கொள்ளளவும், பரிமாணங்களும் குறை வாகவே உள்ளமையால், இத்தகு நிகழ்ச்சி சற்று அரிதாகவே நேரிடுகின்றது. உள்மார்பு அறுவையைத்தற்காலத்தில் மிகுதியும் பயன்படுத்துவதால், அவ்வாறான அறுவை முறைகள் கையாளப்படும்போது உள்மார்பு நிணநாளங்களுக்குச் சேதம் உண்டாகும் வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. மேலும், முதுகுத் தண்டு மிகை நீட்டத்தின் (hyper extension) போதும் மேலிருந்தும், உயரத்தி லிருந்தும் கீழே விழும்போது உண்டாகும் தாக்கு தலின் போதும், வீச்சுக்காயம், வெடிகாயம், அமிழ் காயம் ஆகியவற்றில் உடலுக்கு ஏற்படும் இறுக்கத் தின் போதும், தாறுமாறான நிலைகளில் நாளங்கள் கிழிந்துவிட வாய்ப்புண்டு. .