பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/851

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடல்‌ வால்‌ வேறுபாடுகள்‌ 831

ஓட்டை ஏற்படும். அழற்சி அடிக்கடி வருவதால் கடுமையாகவும் இருக்கும். சீழ்க்கட்டி உட்புறத்தில் வெடித்தால் மரணம் ஏற்படலாம். தக்க சமயத்தில் மருத்துவரின் உதவி பெற்றால் எளிதில் அறுவை செய்து, குடல் வாலை அகற்றிவிடலாம். சிறுவர்களுக்குத்தான் குடல் வால் அழற்சி மிகுதி யும் உண்டாகிறது. வயது முதிர்ந்தவர்களுக்குக் குடல் வாலின் வாய் அடைத்து விடுவதால், நுண்ணுயிரும் கழிவுப் பொருள்களும் உள்ளே செல்லா. அதனால் குடல் வால் அழற்சி பொதுவாக ஏற்படுவதில்லை. சிலருக்குக் குடல் வால் அழற்சி நிலை பெற்று, நார்ப் பொருள் தேர்ன்ற ஒரு குடல் வால் கட்டி யாக (appendicular mass ) மாறுகிறது. இதற்கும் நாளடைவில் அறுவை மருத்துவம் தேவைப்படும். செல்லுலோஸ் மிகுதியும் கொண்ட புரதச் சத்து உ ணன உட்கொள்வதும் இந்நோய்க்குக் காரண மாகலாம். குடல் வால் வேற்றுப் பொருள் தி.பெத்தம்மாள் காரணமாகும். ய வேற்றுப் பொருள்களால் ஏற்படும் அடைப்பே தீவிர குடல் வால் அழற்சிக்கு முக்கிய நாக்குப் பூச்சி (round worm) நூல் பூச்சி (thread worm), காய்ந்து இறுகிப்போன மலத்துண்டு ஆகிய வேற்றுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றால் அடைப்பு ஏற்படக்கூடும். இந்நிலை 2 வயதிற்கு முன்பு பெரும் பாலும் ஏற்படுவதில்லை. 2 வயதிற்குப் பிறகும், வளர்ச்சிப் பருவத்தில் மிகுதியும் காணப்படும். 20-30 வயதில் பெரும்பான்மையாக ஏற்படும் என் றாலும் இது எந்த வயதிலும் ஏற்படலாம். அடைக்கும் வேற்றுப் பொருள்கள், துளை யையோ வெடிப்பையோ ஏற்படுத்தும், தொடர்ந்தும் இதற்கு முன்னரும் நுண்ணுயிர்கள் குடல் வாலின் சுவர்ப் பகுதி வழியாக வெளியேறுவதால் அழற்சி ஏற்படலாம். மேலும் இந்த அடைப்பு அந்த இடம் அழுகி விடவும் (gangrene) காரணமாகலாம். அறிகுறிகள். ஓரிரு முறை குறைந்த அளவில் வலி ஏற்படலாம். பின் திடீரென்று ஒரு நாள் வலி மிகுதியாகித் தூக்கம் கெடும். அடைப்பு அதிகமாக இருக்குமானால் வாந்தி, வலி ஆகி ஆகியவை ஏற்படுவ தால் இது தீவிர குடல் அடைப்பைப் போலவே இருக்கும். ஆனால் சில மணி நேரங்களில் வலி, இலியக் குழிவுப் பகுதியில் (right iliac fossa) தெளி வாகத் தெரியத் தொடங்கும். வல மருத்துவம். விரைவில் அறுவை மேற்கொள்வதே சிறந்தது. குடல் வால் வேறுபாடுகள் 831 நூலோதி. Bailey and Love's, Short practice of surgery, 19th edition, ELBS, London, 1987. குடல் வால் வேறுபாடுகள் குடல் வால் 5-15 செ.மீ. நீளமுடையது. இது குடல் முட்டின் (caecum) பின் பகுதியில் உள்ள ஒரு குறுகிய.மொட்டையாக முடிவடையும் பயனில்லா உறுப்பாகும். கரு வளர்ச்சியின்போது பின் குடலில் ஏற்படும் குடல் முட்டு மொட்டிலிருந்து (caecal bud) குடல் முட்டும், குடல் வாலும் தோன்றுகின்றன. இது முதலில் கல்லீரலின் கீழ்ப் பகுதியிலிருந்து சிறிது சிறிதாகக் கீழ்நோக்கி இறங்கி, வலப்பக்கம் இடுப்புக்கு மேல் இருக்கும். மேலும் கீழே இறங்கும்போது இந்த மொட்டின் சுவர் வளர்ச்சி, வலப்பக்கம் மிகுதியாகவும். இடப் பக்கம் குறைவாகவும் இருக்கும். அதனால் குடல்வால் நடுவில் ல்லா மல் குடல் முட்டின் டப் பக்கமாக அமைகிறது. வளர்ச்சியில் இவ்வாறு பல ஏற்படுவதால் இது வேறு வேறு அமையலாம். கரு நேர் நிலை குடல் முட்டின் (சீகத்தின்) பின்பக்கம் கூபகப் பக்கம் மாற்றங்கள் டங்களிலும் 74% 21% 0.5% 1% சிறுகுடலின் (இலியத்தின்) பின்பக்கம் குடல் முட்டின் (சீகத்தின்) பக்கம் குடல் முட்டின் (சீகத்தின்) கீழ்ப்பக்கம் 1.5% பிற வேறுபாடுகள், 100,000 இல் ஒருவருக்கு ஏற்படும் குடல்வால், வளர்ச்சி அடையாமலும் இருக் கலாம். சில சமயங்களில் இரண்டு குடல் வால்கள் இருக்கலாம். கரு வளர்ச்சியின்போது ஏற்படும் குடற்சுழற்சி: வேறுபக்கம் ஏற்பட்டாலோ சுழலாமல் போனாலோ குடல் வால் இடப் பக்கமும் அமையலாம். மேலும் அனைத்து உறுப்புக்களும் இடம் வலம் மாறி அமையும் நிலையில் இது டப் பக்கம் அமைகிறது. இந்நிலை பொதுவாக ஆண்களுக்கு அதுவும் 35,000 இல் ஒருவருக்கே ஏற்படுகிறது. சுவயம்ஜோதி துரைராஜ் நூலோதி. Bailey and Love's, Short practice of அ. கதிரேசன் surgery, Nineteenth Edition, ELBS, 1987.