பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/853

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்துமுறை எழுதலும்‌ இறங்கலும்‌ 833

சாதாரணமாகக் கூரைகளையும் தளங்களையும் தாங்குவன,சுமையைத் தாங்கக் கூடிய சுவர்களேயா கும். பல மாடிக் கட்டடங்கள் கட்டும்போது கட்டங் கட்டமாகச் சட்டமிடுவது போலக் கற்காரைத் தூண் களையும், உத்திரங்களையும் முதலில் உருவாக்கி, பின்னர் தளங்களையும், கூரைகளையும் தடுப்புச்சுவர் களையும் இணைத்து வீடுகளாக உருவாக்குகின்றனர். தற்காலத்தில் பல நாடுகளில் வீடுகளின் அனைத் துப் பகுதிகளையும் தனித்தனியே தயார் செய்து எந்திரங்களை இணைப்பதுபோல இணைத்துக் கட் டடங்களை உருவாக்குகின்றனர். மிகப் பரவலான அரங்கங்கள் கட்டுவதற்கு, தூண்கள் இல்லாமல் நீளமான இரும்புச் சட்டங்களால் கட்டப் பட்ட கூரைக கள் அல்லது தனியாக அச்சாக வார்க் கப்பட்ட கற்காரை உத்திரங்களுடன் அமைக்கப் பட்ட கூரைகள் பயன்படுகின்றன. கட்டடங்கள், குடியிருப்பு வீடுகள் தனித்தனியாகக் கட்டப்படு வது உண்டு. இத்தகைய வீடுகள் தனிமையையும், நலவாழ்வையும், எழிலையும் தரக் கூடியவை. எந்த விதமான மறைப்பும் தடுப்பும் இல்லாமல், வீட்டின் முன்புறம் வசதியாகவும் காற்றோட்டமாகவும் வெளிச் சமாகவும் இருந்தால் பார்ப்பவர் மனத்தைக் கவரக் கூடியதாக இருக்கும். இத்தகைய தனிக் குடியிருப்பு கள் விலை மதிப்புடையவை. இரு வீடுகள் ஒரே கட்டடமாக இணைத்துக் கட்டப்படுவது இணைந்த தனிக்குடில் எனப்படும். இக் குடில்களுக்கு வாசல்படியும் தாழ்வாரமும் ஒன்றாக இருக்கும்.பாதுகாப்பிற்கு ஏற்றது; கட்டடச் செலவு சற்றுக் குறைவாக இருக்கும். மாடிக் குடியிருப்பு எனப்படுவது இணைந்த தனிக் குடியிருப்புப் போன்றதே. ஆனால் இதில் நிலத்தின் பரப்பளவு குறைவாகும். சற்று நீளமாகக் கட்டினால் மூன்று அல்லது நான்கு வீடுகள் வரிசையாகக் பயன் கட்டலாம். வீட்டின் முன் பகுதியில் உள்ள வெற்றி டங்கள், அனைத்துக் குடியிருப்புக்களுக்கும் படும் வகையில் இருக்கும். தொகுப்புக் குடில்கள் எனப்படுவன அறைகளின் தொகுப்பாகப் பல குடியிருப்புகள் கட்டப்பட்டு, தோட்டம், விளையாடுமிடம், நீச்சல் குளம் போன்றவை பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டிருக்கும். ஏறத்தாழ விடுதிகள் போலத் தோற்றம் அளிக்கும் இவ்வகைக் குடில்கள் நகரங்களில் மட்டுமே கட்டப்பட்டு வருகின்றன. இவை, இட நெருக்கடியின் காரணமாகத் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. ஏ.எஸ்.எஸ். சேகர் குடியோட்டிப் பூண்டு (சித்த மருத்துவம்) தன் பாலால் கண்கூசுதல், கண் குறுகல், கண்ணில் 853 குத்துமுறை எழுதலும் இறங்கலும் 833 நீர் வடிதல், கண்வலி, கண் சிவத்தல் ஆகியவை நீங்கும். முருங்கைப் பிசின், நெய் இவற்றை முறையே 875 மி.கிராம் எடையாக எடுத்து இவற்றுடன் பிரம தண்டின் பூவிலிருக்கும் மகரந்தப் பொடியைக் கலந்து பத்தியத்துடன் சாப்பிட்டால், தோள்களி லும், பக்கங்களிலும் உண்டாகும் வாத நோய்கள் நீங்கும். இதன் விதையைத் தூள் செய்து 3:5 கிராம் எடுத்து, தேன் அல்லது சர்க்கரை கலந்து நாளும் மூன்று வேளை கொடுத்து வர இருமல் மார்ச்சளி போகும். புகையை விதையைப் பொடித்துப் புகைத்துப் வாயில் வைத்துக்கொள்ள, பல்வலி, பல் சொத்தை தீரும். இவ்வெண்ணெயை 10-15 துளி வீதம் நாளும் 3 முறை சர்க்கரை அல்லது நீரில் கலந்து உட்கொள்ள இருமல் நீங்கும். 30 துளிச் சர்க்கரை யில் கொடுக்க நன்றாகப் பேதியாகும். ஆனால் வாந்தி உண்டாகும். தவளைச்சொறி, தலைநோய், குறைநோய், மேகப்புண்களுக்கு வெளிப்பூச்சிடலாம். இதன் வேரைப் பொடித்து 3.5 கிராம் கொடுக்க, தட்டைப் புழு விழும். குடிநீரிட்டு வேளைக்கு 42 - 84 மி. லிட்டர் வீதம் நாளும் மூன்று வேளை கொடுத்து வர இருமல் குறையும். பச்சை வேரைச் சிதைத்துத் தேள் கடிவாயில் வைத்துக்கட்ட நஞ்சு நீங்கும். O இதன் இலைச்சாறும், ஆடு தீண்டாப் பாளைச் சாறும், நெய்யும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம். நாளும் இருவேளை சாப்பிட்டு வர வெள்ளை போகும். இச்சாற்றிற்குச் சிறுநீரைப் பெருக்கும் பண்பு இருப்பதால், இதைச் சோகை, பாண்டு முதலிய நோய்களுக்குக் கொடுக்கலாம். 12 கிராம் சாற்றைக் காலைதோறும் வெறும் வயிற்றில் 40 நாள் சாப்பிட்டு வர, குறைநோய், தோலைப்பற்றிய நோய்கள் போகும். வெளியிலும் பூசலாம். பிரமதண்டுக் கிழங்குச் சூரணம், மிளகுச் சூரணம், வெள்ளைச் சர்க்கரை இவற்றை வகைக்குச் சம எடை எடுத்துக் கலந்து ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு வெருகடி அளவு 21 நாள் காலையில் சாப்பிட்டு வர இரைப்பு நீங்கும். குத்துமுறை எழுதலும் இறங்கலும் சே. பிரேமா வான ஊர்தியில் தனிப்பட்ட வகையில், குறிப்பிடத் தக்க முறையில் இயங்குவதற்கு வடிவமைக்கப்பட்ட அமைப்புகள் உள்ளன. பொதுவாக வான ஊர்தி