பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/854

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 குத்துமுறை எழுதலும்‌ இறங்கலும்‌

834 குத்துமுறை எழுதலும் இறங்கலும் வான மேலெழுந்து செல்வதற்கு, விமான நிலையத்தில் சிறிது தொலைவு ஓடியும் பிறகு படிப்படியாக மேலெழுந்தும் பறக்கும். ஆனால், சில சிறப்புத் தொழில் நுட்ப எந்திர அமைப்பின்படி, சில ஊர்திகள் தரையில் இயங்கிச் செலுத்தப்படாமல் நேரடியாகவே செங்குத்தாக (vertical) மேலெழுமாறு இருக்கும்.படிப்படியாகத் தரையை நோக்கி இறங்கி, பிறகு சிறிது தொலைவு தரையில் ஓடி நிற்கு மாறில்லாமல் இத்தகைய வான ஊர்திகள் செங் குத்தாகவே இறங்கவும் முடியும். இத்தகைய இயக் கத்திற்குச் செங்குத்துமுறை எழுதலும், இறங்கலும் (vertical take off and landing) என்று பெயர். இத் தகைய வான ஊர்திகள் இராணுவத்திலும், அவசர காலங்களிலும் பெரிதும் பயன்படும். VTOL என்று சுருக்கமாகக் குறிக்கப்படும் இத் தகைய வான ஊர்திகள் மிகு மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், போர்க் காலங்களிலும் பாதுகாப்பாக இயக்குவதற்கு ஏற்ற வகையில் இருக் கும். பல்வேறு நன்மைகளைக் கொண்டிருந்தாலும் இவற்றுள் சில இடர்ப்பாடுகளும் உள்ளன. அவற்றுள் எந்திர நுட்பச் சிக்கல்கள் நிலையான இயக்கக் கட்டுப்பாட்டுச் சிக்கல்கள் தவிர்க்க முடியாத பேரிரைச்சல் மிகுவேகத் தாரைச் செலுத்தம் {jet blast) ஆகியன குறிப்பிடத்தக்கவை. ஒருவகையான VTOL படத்தில் காட்டப்பட் டுள்ளது. இத்தகைய வான ஊர்திகள் போர்க்காலங் களில் மட்டுமன்றி, கப்பல் தளங்கள், மீட்புப்பணி கள், ஆய்வுப்பணிகள், கடல் ஆய்வாளர்களைக் கொண்டு செல்லல் போன்றவற்றிற்கும் பயன்படும். இத்தகைய வான ஊர்திகள் உயர் ஆற்றல் வாய்ந்த நான்கு வெப்ப வளிமப் பொறிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் 2850 குதிரைத் திறன் (H.P) அளவிற்கு ஆற்றல் கொண்டிருக்கும். வை மணிக்கு 500 கி.மீ. அளவிற்குப் பறக்கும் திறன் வாய்ந்தவை. இவற்றின் செலுத்திகள் (pro- pellers) கண்ணாடி நுண் இழைகளால் ஆன இழைமப் மூவழிச் செலுத்தும் பற்சக்கரம் செலுத்து உருளை மழுக்கப்பட்ட சதுர முகப்பு குறுக்கு உருள் பற்சக்கரம் நிலைவேக ஆற்றல் படம் 1. XC-142 A VTOL புரியிடைத் தொலைவு வேறுபடுத்துஞ் சுழல் விசிறித் தண்டு எண்ணெய்க் குளிர்விப்பி ஒருங்கிணைந்த பற்சக்கரப் பெட்டியும் இணைப்பியும் ஒருங்கு முறைப் பற்சக்கரம்