குத அக நோக்கி 835
பொருளால் (fibre glass) செய்யப்பட்டிருக்கும். நான்கு அலகுகள் கொண்ட இச்செலுத்திகள் உலோகச் செலுத்திகளைவிடக் கால்பங்கு எடை யளவே இருக்கும்; மேலும் மூன்று மடங்கு திண்மை யாக இருக்கும். விமான ஓட்டியின் அறையிலுள்ள கட்டுப்பாட்டு இயக்க நுட்பங்கள் இதர சாதாரண விமானங்களில் உள்ளவாறே இருக்கும். செங்குத்து எழுதல் இறங்கல் இயக்க நுட்பம் இயல்பான ஓட்டத்தின்போது விடு பட்டிருக்கும். குத்துமுறை இயக்கத்தின்போது அமைக்கப்பட்டிருக்கும் பொறிகளில் நான்கு குறுவழி அடைப்பிதழ்கள் (throttle) ஒரே சமயத்தில் இயக்கப் பட்டு ஆற்றல் இயக்க மாறுதலுக்கு ஏற்றவாறு அலகுகளின் கோணங்களும் மாற்றப்படும், அலகு களின் கோண அளவுகளும் (blade angle) ஆற்றல் மாறுதல்களும். (power change) வேசும் காக்கும் விசையமைப்பும் (governer) பழுதுபட்டால் உரிய அடைப்பிதழ்கள் கைகளால் இயக்கப்படும். ஏதேனும் ஒரு பொறியில் பழுது ஏற்பட்டாலும் செங்குத்து முறை இயங்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய வான ஊர்திகளின் முகப்பு மழுக்கப்பட்டு (blunt) ஒருவகையான சதுர மூக்குப் பகுதியுடன் (squared nose) இருக்கும். இத்தகைய வான ஊர்திகள் 800 Ibs எடையுடன் நேர்குத்தாக எழக்கூடியவை. இவ்வாறு மேலெழுந்த 300 கி.மீ. தொலைவிற்கு, 450 கி.மீ. மணி வேகத்தில் பத்து நிமிடத்திற்கும் மேலாக மிதந்து (hover) பின் இறங்கக்கூடும். இதன் இறகின் நீளம் 20 மீட்டர்; இதன் மொத்த நீளம் 17.5 மீட்டர்; உயரம் 7.2 மீட்டர் என இருக்கும். கே.ஆர்.கோவிந்தன் - நூலோதி. A.C. Kermode, Mechanics of flight, Himalayan Books, New Delhi, 1982: Bernard Etkin, Dynamics of flight stability and control, Second Edition, John Wiley & Sons, New York, 1982; Darrol stinton, The design of the Aeroplane, Granada Publishing, Great Britain, 1983. குத அக நோக்கி 835 குறிக்கப் பயன்படும் சொல் குத்துயரம் அல்லது கோணவேற்றம் என்பதாகும். விண்பொருளின் இடத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு வான ஆயங்களில் (celestial coordinates) ஒன்று குத்துயரமும் (கோணவேற்றம்), திசைவில்லும் (azimuth) இணைந்த தொகுப்பாகும். வானக் கோளத்தின் உச்சிப்புள்ளி வழியாகவும், விண்பொருள் வழியாகவும் செல்லும் நிலைக்குத்து வட்டத்தின் (vertical circle) அடிக்கும்; விண்பொருளுக்கும் இடையேயுள்ள தொலைவு (a) கோணவேற்றம் என்றும் நிலைக்குத்து வட்டத்திற்கும் உச்சிவட்டத் திற்கும் இடைப்பட்ட கோணம் திசைவில் (A) என்றும் குறிக்கப்படும். So Z A Z S M படத்தில் S என்னும் விண்பொருள் வழியே செல்லும் நிலைக்குத்துவட்டம் தொடுவானத்தை M இல் சந்திக்கிறது. குத்துயரத்தைத் தொடுவானத் திற்கும் விண்பொருளுக்குமிடையேயுள்ள தொலைவு எனவும் வரையறுக்கலாம். விண்பொருளுக்கும் உச்சிக்குமிடையேயுள்ள தொலைவு உச்சித் தொலைவு (z) எனப்படும். உச்சிக்கும் தொடுவானத்திற்கும் டையே உள்ள தொலைவு 90' ஆனதால் குத்து யரம் a. = 90 I எனக் கோண அளவில் கணக்கிடப் படுகிறது. பங்கஜம்கணேசன் குத்துயரம் (வானியல்) ஏதேனும் ஒன்றின் உயரத்தைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் சொல் குத்துயரம் (altitude) எனப்படும். காட்டாக, மனிதனின் உயரத்தை, அவன் நிற்கும் தரையிலிருந்து அளவெடுப்பது வழக்கம். மரத்தின் உயரம், ஒரு கட்டடத்தின் உயரம் என்பவை, புவியின் மேல்பரப்பிலிருந்து அளவிடப்படும். வானியலில் ஒரு விண்பொருளின் உயரத்தைக் குத அக நோக்கி கீழ்ப்பெருங்குடல் அல்லது குதத்தில் நோய்கள் இருக்கலாம் எனக் கருதும்போது. அதை உறுதி செய்யப் பயன்படும் கருவியையே குத அக நோக்கி (proctoscope) என்பர். இதன் மூலம் குதத்தையும், மலக்குடலின் 2-3 செ.மீ.நீளத்தையும் பார்க்க