836 குதக் குடல் அழற்சி
836 குதக் குடல் அழற்சி முடியும். மலக் குடலில் மலம் நிரம்பியிருந்தால், இனீமா கொடுத்த பின்னர் உள் நோக்கியைப் பயன் படுத்தலாம். குத அக நோக்கியைக் கையாளும் போது, நோயாளி முழங்கால் முழங்கை மடித்த நிலையில் இருக்க வேண்டும் அல்லது இடப்புறமாகப் படுத்துக்கொண்டு, கால்களை மடக்கிக் கொள்ள வேண்டும். உள் நோக்கி மூலம் பார்க்கும் முன்னர். கைவிரல்களை உள்ளே செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். குத அக நோக்கி. வெதுவெதுப்பாக இருப்பதுடன், நன்றாக மசகிடப்பட்டும் இருக்க வேண்டும். இந்தக் கருவி மூலம் குதத்தின் உள்ளே உள்ள மூல நோய்களைக் (piles) கண்டு, மருத்துவ மாக ஊசியும் போடலாம். சிலபோது புற்று நோயும் கண்டுபிடிக்கப்படுகிறது. குதக் குடல் அழற்சி அ. கதிரேசன் வயிற்றில் பெருங்குடலில் அழற்சி ஏற்பட மலம், நீர் போலப் போகும். சமயம் இரத்தமும் சில கலந்து போகும். குடலில் புண் உண்டாகும். இந் நோயின் காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. பல காரணம் குறிப்பிடப்பட்டாலும் அவற்றில் ஒன்றும் அறுதியிடப்படவில்லை. குதக் அழற்சி 20-50 (procto colitis) குடல் உள்ளவர்களுக்கு வர வாய்ப்பு உண்டு. வயது பெருங்குடலில் உள்ள சிலேட்டுமப்படலம் (mucous membrane) அழற்சி அடைந்து, சிறு புண்கள் உண்டாகின்றன. நாளடைவில் புண்கள் ஆறித் தடித்துப் பெருங்குடல் மூங்கில் குழாய் போன்று தோற்றமளிக்கிறது. அதனால் மலம் இறுகிப் போகாமல் நீர் போலப் போகிறது. அழற்சியால் இரத்தமும் வெளிவருகிறது. இந்நோயின் அறிகுறி களை வரைபடம் மூலம் அறியலாம். இந்நோய் எப்போது வரும் எனக் குறிப்பிட முடியாது. திடீரென வரலாம். வந்தால் 12-18 வாரங்களுக்கு இருக்கும். பிறகு குறைந்துவிடும். சிலருக்கு மனநிலை மாறுபட்டிருக்கும். இந்நோய் வயிற்றுப் போக்கு நோயைப் போல இருக்கும். எ.கா.அமீபா நோய், நுண்ணுயிர்ப்பேதி நோய், ஒவ்வாமைப் பேதி நோய் முதலியன. இந்நோய் சாதாரண பேதி எதிர் மருந்துகளால் குணமடை யாமல், 15 நாள் வரை நீடித்தால் அதைத் குத குடல் அழற்சி எனக் கொள்ளலாம். மலத்தை ஆய்வு செய்தல், வளர்களம் கொண் தட்டுகளில் இடுதல், நெளிகுடல் உள் நோக்கி (sigmoidoscopy) ஆகியவற்றால் நோயைக் கண்டு பிடிக்கலாம். மேலும் குடலுக்குள் குதம் வழியாக, ஒரு குழாயைச் செலுத்தி, கண்ணாடி வழியாக அழற்சி யைக் கண்டுபிடித்துப் புண்களையும் அழற்சியை காணலாம். எக்ஸ் கதிர் நீரைக் குத வாய் வழியாகச் செலுத்திப் படம் எடுத்துப் பார்த்தால், குடல் சுருங்கியோ விரிவடைந்தோ புண் தெரியும். நோய் அறிகுறிகளைக் குறைக்க மருந்துகள், அறுவை, உணவுக் கட்டுப்பாடு என்பன பயன்படும். யும் நோய்நாடல் சோகை. இரத்தச் சோகைக்கு இரும்புச் சத்தை ஊசி மூலம் செலுத்தலாம். பேதி - வயிற்றுப் போக்கு இரத்தமும் சளியும் வெளிப்படல், குத அரிப்பு காய்ச்சல் வயிற்றுவலி பசியின்மை, செரிமானக்குறை சோர்வு, பலவீனம், சோகை பலவகைகள் மிகவும் ஆபத்தான நிலை 20% குடல் விட்டு விட்டு வருவது 37% தொடர்ந்து வருவது 25% அழற்சி ஒரு முறை மட்டும் வருவது 18% குடலில் வரும் அழற்சி முழுப் பெருங்குடல் 50% மலக்குடல் இடப்புறப் பெருங்குடல் நெளி குடல்