பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/857

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்‌ 837

பேதியைக் கட்டுப்படுத்துதல். அட்ரோப்பின் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அட் ரோபின் மருந்துகளை உட்கொள்ளலாம். கஞ்சாச் செடியிலிருந்து எடுக்கும் கஞ்சாவை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ளலாம். பேதியில் வெளிப்பட்ட சோடியம், பொட்டாசியம், உப்புச்சத்து இவற்றை ஈடுசெய்ய ஊசி மூலமாகவோ,வாய் வழியாகவோ நீர்மங்களைக் கொடுக்கலாம். கார்ட்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள், மனநிலைச் சீராக்கு மருந்துகள் ஆகியவை இந்நோய்க்குச் சிறந் தவை. அடிக்கடி வரும் பேதியைக் கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள் கட்டுப்படுத்தும். இம்மருந்தை இரு வழிகளில் உடலில் செலுத்தலாம். வாய் வழியாக 60-100 மில்லி கிராம் வரை நாள்தோறும் பேதி நிற்கும் வரையில் கொடுத்து வர வேண்டும். இந்த மருந்தை லேசான வெந்நீரில் கரைத்துக் குதத்திற்குள் 8-10 அவுன்ஸ் வரை செலுத்தி, புட்டத்தைத் தூக்கி வைத்து 3-4 மணி நேரம் இருக்க வேண்டும் (retensi - on enema ). இந்த இரண்டு முறையிலும் முற்றிலும் குணம் தெரியும். முறைகளில் அறுவை மருத்துவம். மேற்கூறிய நோய் குணமடையாவிட்டால் அறுவையே சிறந்தது. புண் இருக்கும் குடலை வெட்டி எடுத்துத் தையல் போட்டால் நோய் குணமடையும். சொ. நடராசன் குதப்பிளவு குதத்தில் ஏற்படும் நீண்ட கீறிய காயத்திற்குக் குதப்பிளவு என்று பெயர். பெரும்பாலும் குதத்தின் பின் சுவரின் நடுப்பகுதியிலும் முன் சுவரின் நடுப்பகுதி யிலும் இது தோன்றும். பெரும்பாலும் மலக் குடலும் (rectum) குதமும் (anal canal) ஒரு கோணத்தில் ஒன்றோடு ஒன்று இணைவதால் இறுகிய மலம் வெளிப்படும்போது பலவீனமான பகுதியில் காயம் ஏற்படுகிறது. பல குழந்தைகளைப் பெற்ற பெண் களுக்கு, தசைகள் நலிந்து காணப்படுவதால் இது முன் சுவரின் நடுப்பகுதியில் ஏற்படுகிறது. மேலும் மூல நோய் உள்ளவர்களுக்கு உரிய அறுவை செய்யும் போது, மிகுதியான தோலை எடுத்து விடுவதால் வாய்ப்புறம் சுருங்க, குதப் பிளவு ஏற்படக்கூடும். அறிகுறி. அதிகமாக வலி தெரியக்கூடிய வளர்ச்சி யாக இது குதக் குடலின் கீழ்ப் பகுதியில் தோன்றும். தீவிர வலி நிலையில், ஆழமான காயம் ஏற்படுவதால் குதவாயின் சுருங்கு தசை விரைவாக மூடிக் கொள் கிறது. தீவிரமற்ற நிலையில் அழற்சி, கடினமான விளிம்பு, வடுக்காயம் ஆகியவை ஏற்படுகின்றன. காபமான பகுதி முக்கோணமாக இருக்கும். வீக்கமடைந்த குதம் 837 தசை குதவாய் வழி யாகத் தொங்கிக் காணப்படும். இந்த நிலையை அடுத்து கட்டி ஏற்படுதல், புரையோடிய புண் ஏற்படுதல் (fistula) ஆகியவை நேரலாம். பால் வினை நோய்களால் ஏற்படும் குதப்பிளவில் காயத்தைவிட வலி குறைவாகவே இருக்கும். இது நடுவயதினருக்குச் சாதாரணமாக ஏற்படுகிறது. மேலும் சிறுவர். குழந்தைகளுக்கும் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும்போது விரிந்த பெருங்குடல் (megacolon) என்னும் நிலையை உண்டாக்கும். அறிகுறிகள். மலப்போக்கின் ஒவ்வொரு முறை யிலும் தொடர்ந்து சில மணி நேரத்திற்கு வலி அதிகமாக இருக்கும். மறு முறை மலப்போக்கு ஏற் படும் வரை வலி இராது. மேலும் மலம் இரத்தக் கீறலுடன் வெளி வரலாம். குதப் பிளவிலிருந்து ஒரு வகைக் கசிவும் ஏற்படலாம். ஆய்வும் நோயும். வெளியே நீட்டிக் கொண்டிருக் கும் மூலத்தைக் (sentinal pile) கொண்டு இதை அடையாளம் காணலாம். தீவிர நிலையில் விரல் விட்டு ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். குதவாய் மரத்துப் போக 5% சைலோகேன் (5% xylocaine ) களிம்பைத் தடவிய பிறகு விரல் ஆய்வோ. மலக்குடல் உள்நோக்கி (proctoscopy) ஆய்வோ செய்து குதப் பிளவைக் கண்டுபிடிக்கலாம். . . குதப்பிளவை ஒத்த பிற நிலைகள். குதப்புற்று. அரிப்பாலும் அழற்சியாலும் ஏற்படும் குதப் பிளவு பால்வினை நோய்களால் ஏற்படும் பிளவு, காச நோயால் ஏற்படும் பிளவு ஆகியவை குதப்பிளவைப் போலவே காணப்படும். மருத்துவம்.5% சைலோகேன் களிம்பு தடவுதல், குதவாயை விரிவுபடுத்துதல், மலச்சிக்கலைத் தவிர்த் தல் ஆகியவை நோய்க்கு நலமளிக்கக் கூடும். மேலும் மயக்கமருந்து கொடுத்து விரல்களால் குதவாயை விரிவுபடுத்துதல், அறுவை மூலம் குதவாய்ச் சுருங்கு தசையை வெட்டி விடுதல், குதப்பிளவை அறுத்து எடுத்தல் ஆகியவை செய்தும் நோயைக் குணப் படுத்தலாம். சுவயம்ஜோதி துரைராஜ் நூலோதி. Bailey and Loves Short practice of surgery, ELBS, 19th Edn, London, 1987. குதம் குதக்குடல் என்பது செரிமான மண்டலத்தின் கீழ் வாயாகும். நேர்குடல், லிவோடர் ஏனைத்தசை யுடன் முடிய, குதம் தொடங்கிப் புட்டப் பகுதியில்