பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கன்றுப்‌ பராமரிப்பு

66 கன்றுப் பராமரிப்பு வளர்ப்பு முறை. பால் இறப்பதற்கு முன்பும் பின் பும் கன்றுகளைத் தாயிடம் பால் குடிக்க வைப்பதும், பின்பு கிடைக்கின்ற தீவனத்தைக் கொடுத்து வளர்ப் பதுமே நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வரு கின்றன. இம்முறையால் கன்றுகளுக்குத் யான உணவுச்சத்துகள் கிடைப்பதில்லை. தேவை அரசினர் கன்றுகளைப் பிரித்து பிரித்து வளர்த்தல். பண்ணைகளிலும், தொழில் முறையில் நடைபெறும் பால்பண்ணைகளிலும் கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்துப் பேணும் முறை கையாளப்படுகிறது. இவ் வாறு பிரித்து வளர்ப்பதால் கன்றுக்குத் தேவை யான அளவு பால் கொடுக்கலாம். பால் உற்பத்தி அளவு முறையாகக் கணக்கிடப்பட்டுப் பசுவிற்குத் தேவையான அளவு தீவனங்கள் கொடுக்க முடியும்: கன்றுகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்; கன்று இல்லாமல் பால் கறத்தல், தூய நலவாழ்வு முறைக்கு வழி வகுக்கும். கன்று பிறந்த தாயிடமிருந்தும் பால் கறக்கலாம். பால் கறக்கும் நேரத்தைக் குறைக்க வும், கன்றுகளை நல்ல முறையில் பராமரிக்கவும் இயலும். கன்றைப் பிரித்து வளர்க்க, பிறந்த உடன் கன்றைத் தாயின் பார்வை படுமுன்னரே பிரித்து விட வேண்டும். கன்றுகளின் எடைக்கு ஏற்றாற் போல் தேவையான பாலளவை, அதாவது கன்றின் எடையில் பத்தில் ஒரு பங்கை, முதல் 1 வாரத் திற்குத் தினம் 3 முறையும் பின்பு 2 முறையுமாகச் சிறிது வெதுவெதுப்பாக்கிக் கொடுப்பது நல்லது. பிரிந்த கன்றுகளுக்குப் பால்புட்டி மூலம் பால் காடுக்கலாம். ஒரு வாரத்திற்குப் பின்பு பாலை அகன்ற பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கப் பழக்கலாம். இரண்டு. மூன்று வார வயதில் கன்றுகள் பசும்புல் களையும் தீவனங்களையும் உண்ணத் தொடங்கும். . கன்றுத் தீவனம். கன்றுகளின் வளர்ச்சியையும் உடல் நலத்தையும் ஊக்குவிக்கத் தனியாகத் தயாரிக் கப்படும் தீவனமே கன்றுத் தீவனம் ஆகும். கன்றுத் தீவனத்தில் 18% நன்கு செரிக்கக்கூடிய புரதச் சத்தும், 75% செரிக்கும் உணவுச் சத்துகளும் இருக்கும். இத்துடன் தீவனத்தில் சாதாரண உப்பு, தாது உப்புக் கலவை வைட்டமின், ஆரியோமைசின் அல்லது டெட்ராமைசின் போன்றவையும் கலக்க வேண்டும். 3 வாரத்திலிருந்து கன்றுத் தீவனத்தையும் சேர்த்துக் கொடுக்கலாம். 3 வாரத்தில் 1 நாளைக்கு 10.0 கிராம் கிராம் வீதம் கொடுக்கலாம். பிறகு வாரா வாரம் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொடுக்கலாம். ஆறு மாதம் வரை கன்றுத் தீவனமும், அதற்கு மேல் பொதுத் தீவனமும் கொடுக்க வேண்டும். நல்ல முறையில் பராமரித்து வந்தால் கன்றின் நாளும் 300 அல்லது 400 கிராம் கூடும். எடை ஆறாம் மாதத்தில் பிறந்தபோது இருந்த எடையைப் போல் நான்கு மடங்காக எடை மிகும். பிற பராமரிப்பு முறைகள். கன்றுகள் வளர்க்கப் படும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும் ஒளியுடையதாகவும் தரையில் ஈரப்பசை இல்லாத உயரமான இடமாகவும் இருக்க வேண்டும். கொம்புக்குருத்தை நீக்குதல். கறவைகளுக்குக் கொம்பு தேவை இல்லாததால் கன்று பிறந்த 3 நாள் களுக்குள் கொம்புக் குருத்தை நீக்கிவிடலாம். மின் கொம்பு நீக்கி அல்லது எரி பொட்டாஷ் குச்சி கொண்டு இதைச் செய்யலாம். கன்றுகளுக்கு வரும் சில நோய்கள் சுன்றுக்கழிச்சல். இந்நோய் பாலூட்டும் கன்று சுளை மிகுதியும் தாக்கும். முதலில்காய்ச்சல் இருக்கும்; சோம்பலாகவும், பாலூட்டாமலும் இருக்கும். பிறகு கெடுநாற்றமுடன் கூடிய மஞ்சள் கலந்த வெள்ளை நிறக்கழிச்சல் இருக்கும். இதைத் தடுக்க, கன்றுகளுக்கு அளவான பால்கொடுக்க வேண்டும். சீம்பால் உறுதி யாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். சல்ஃபா மருந் துகள், நுண்ணுயிர் எதிர்மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். காளான் படைச்சொறி. இந்நோய் பூஞ்சைக் களால் ஏற்படுகிறது. கன்றின் உடம்பில் குறிப்பாக. காது, கழுத்து, கண், புருவம் முதலிய பகுதிகளில் வட்டவட்டமாக மயிர் உதிர்ந்து சொட்டையாக இருக்கும். தோல் சுருக்கத்துடன் இருக்கும்; கன்று அடிக்கடி தேய்த்துக் கொண்டும், உராய்ந்து கொண் டும் இருக்கும். இதைத் தடுக்கப் பாதிக்கப்பட்ட கன்றுகளைப் பிரித்துத் தனியாக வைக்க வேண்டும். இடநெருக்கடியைத் தவிர்க்க வேண்டும். டிஞ்சர் அயோடின், கந்தகக் களிம்பு முதலியவற்றை டலாம். குடற்புழு, கன்றுகளில் உருண்டைப்புழுப் பாதிப்பு மிகுந்தும் பாதிக்கப்பட்ட கன்றுகள் சோர்ந்தும் காணப்படும். அவை பால் ஊட்டா. பாதிக்கப் பட்டவற்றில் முதலில் கழிச்சலும், பிறகு சாண மிடுவதில் துன்பமும் இருக்கும். உடல் மெலிந்து விடும். முன் தாடையின் கீழ் வீக்கம் போல் காணப் படும். வயிறு பெருத்துக் காணப்படும். இப் பாதிப்பைத் தடுக்க, கன்றிற்குப் பத்து நாள் ஆகும் போது ஒருமுறையும் - பிறகு இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் குடற்புழு நீக்க மருந்து கொடுத்து வருதல் போதுமானதாகும். . ஈ. ஒட்டுண்ணிகள். கன்றுகளைப் பேன், உண்ணி போன்றவையும் தாக்கும். இவற்றின் பாதிப்பைத் தடுக்க, கன்றுக் கொட்டில்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கன்றின்மீது 0.5% 0.25% லோராக்ஸின் போன்ற மருந்துக் D. D.T