குதிரைகளின் படிமலர்ச்சி 841
பகுதியின் மிகுந்த ஈரத்திலும் மிதமான தட்பவெப்ப நிலையிலும் செழித்து வளர்ந்த செடி கொடி வகை களும், பரந்த புல்வெளிகளும் நிறைந்த சூழ்நிலைகள் 1: 3 புவியியற் கால வரிசையில் குதிரையின் மண்டை யோட்டு அமைப்பு 1. சஹரகோத்தீரியம் (இயோஹப்பஸ்) 2. மிசோஹ்ப்பஸ் 3. மெரிகிப்பஸ் 4. ஈக்லஸ் மிகவும் உதவியாக இருந்தன. பல நூறு ஆண்டு களுக்குப் பிறகு புவியில் ஏற்பட்ட பிரளயங்களும் வேறு பல மாறுபாடுகளும் குதிரையினங்கள் பல்கிப் பெருகிப் படிமலர்ச்சியுறத் தடையாக இருந்தன. ஏறத்தாழ 30 செ.மீ. உயரமே இருந்த ஓரோஹிப்பசின் (Orohippus) தோற்றம் குதிரைப் படிமலர்ச்சியின் இரண்டாம் நிலையாகும். ஐந்தாம் விரல் எலும்பு முழுமையாக மறைந்ததும், நடுவிரல் சற்று நீண்டதும், முன் கால் வெளி விரல் சற்றுக் குட்டையானதும் கடைவாய்ப் பற்கள் மூன்று நாள் குதிரைகளின் படிமலர்ச்சி 841 காம் கடைவாய்ப் பற்கள் போல் வளர்ந்து மாறியதும் ஓரோஹிப்பசின் படிமலர்ச்சியின் சிறப்புப் பண்பு களாகும். குதிரைப்படிமலர்ச்சியின் மூன்றாம் நிலை யில் தோன்றிய எபிஹிப்பசில் (Epihippus) மூன்று நான்காம் முன் கடைவாய்ப் பற்கள் முழுமையான கடைவாய்ப்பற்களாக மாறின. முன் காலில் 4 விரல். பின் காலில் 3 விரல் இருந்தாலும், ஒவ்வொரு காலிலும் நடுவிரல் மட்டும் சற்று நீண்டு நன்கு தோற்றமளித்தது. . குதிரைப் படிமலர்ச்சியின் நான்காம் நிலையில் மீசோஹிப்பசு (Mesohippus) ஐந்தாம் நிலையில் மையோஹிப்பசு (Miohippus) தோன்றின. இயோ சீன் காலம் முடிந்து ஒலிகோசீன் (oligocene) காலத் தொடக்கத்தில் நிலவிய தட்ப வெப்பநிலை, தீடீரென ஏற்பட்ட பெரும் புவி மாற்றம், கண்டப் பெயர்ச்சி ஆகியவற்றின் விளைவால் அடர்ந்த காடுகளும், புல் வெளிகளும் மேய்ச்சல் நிலங்களும் தோன் றின. இந்நிலையில்தான் குதிரைப் படிமலர்ச்சியில் பல கிளைகள் தோன்றின. ஏறத்தாழ 60 செ.மீ. உயரமே இருந்த மீசோஹிப்பஸ், குதிரையின் உருவமைப்பைக் காண்டது. முன் காலின் வெளி விரல் முழுமையாக மறைய. ஒவ்வொரு காலிலும் மூன்று விரல்கள் நடக்க உதவியாக இருந்தன. கன்னப்பற்களின் நுனி குறைந்து தரையில் புல் மேய்வதற்கேற்ப அமைந்தது. முன் கடைவாய்ப்பற்களும், கடைவாய்ப்பற்களும் ஒத்த உருவமைப்புடன் செடி கொடிகளை நொறுக்கி அரைத்துண்ண ஏதுவாக அமைந்தன. படிமலர்ச்சியின் ஐந்தாம் நிலையில் தோன்றிய மையோஹிப்பஸ் புவியில் தோன்றிய மூன்று விரல் குதிரையின் முன்னோடியாகும். உருவத்தில் ஆட்டின் அளவே இருந்தாலும் தலை மட்டும் குதிரையைப் போன்றிருந்தது. இலை தழைகளைத் தின்பதற்கேற்ற தகவமைப்புக் கொண்டிருந்தது. பெருமூளையில் இருந்த மடிப்புகளும் வரிப்பள்ளங்களும் அதன் அறிவுக் கூர்மையைப் புலப்படுத்தின. எதிரிகளிட மிருந்து தப்பி வேகமாக ஓட நீண்ட வலிவான கால் களையும் பெற்றிருந்தது. மையோசீன் (Miocene) காலத் தொடக்கத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் ஏற்பட்ட கடும் மாறு பாடுகளின் விளைவால் குதிரைப் படிமலர்ச்சியில் பல கிளைகள் தோன்ற அவை புல்வெளிகள், தழைத்த செடி கொடிகள் இருந்த இடங்களை நாடி இடம் பெயர்ந்து வளர்ந்தன. இவ்வாறு தோன்றியவற்றில் ஆர்க்கியோ ஹிப்பஸ் (Archeohippus), ஆன்க்கித்தீரியம் (onchitherium) ஹைபோஹிப்பஸ் (hypohippus) என் பவை குறிப்பிடத்தக்கவை. ஆர்க்கியோஹிப்பஸ் என்னும் பழமை வகையில் மண்டையோட்டின் அமைப்பு மட்டும் மிகுதியாக மாறாமல், பற்களும் கால் அமைப்புகளுமே அவற்றின் மூதாதை இனமாக மையோஹிப்பஸ் போன்று அமைந்தன. ஆன்க்கித் திரியத்தின் பற்களும் கால்களும் மையோஹிப்பஸ்