பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/862

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 குதிரைகளின் படிமலர்ச்சி

842 குதிரைகளின் படிமலர்ச்சி இனத்தைப் போலவே இருந்தாலும் உருவமைப்பில் ஓர் ஏற்றம் இருந்தது. இவ்வினத்திலிருந்தே ஹைபோ ஹிப்பஸ் தோன்றியிருக்க வேண்டும். இயோசின் ஒலிகோசீன் மையோசீன் பிளையோசீன் அண்மைக்காலம் தென் அமெரிக்கா பழைய வட அமெரிக்கா ஈக்வஸ் பாராஹிப்பஸ். மீசோஹிப்பஸ் குதிரைக் குடும்பத்தின் படிமலர்ச்சி பாராஹிப்பஸ் உலகம் மேற்கூறிய பழமைக்கிளை இனங்களின் நேரான படிமலர்ச்சி மூலம் (parahippus) இனம் தோன்றியது. இதில் பல்லிடைவெளி (diastema) நன்கு வளர்ந்து கடைவாய்ப்பற்கள் மேலும் நீண்டு உறுதியாக அமைந்திருந்தன. மையோஹிப்பஸைவிட முன் தலைப்பகுதி நீண்டு. கண்கள் மிகவும் பின்புறமாக அமைந்திருந்தன. நீண்ட வலிவான கால்களின் மூன்றாம் விரல் மூதாதை இனத்திலிருந்ததைவிட நன்கு வளர்ந் திருந்தது. மூளை வளர்ச்சி, நேர் முதுகு, வேகமாக ஓடு வதற்கேற்ற கால் அமைப்பு, சிமெண்ட்டினால் வலிவூட்டப்பட்ட பற்களின் நுனியும் முகடும் கூடுதல் என்பன பாராஹிப்பஸின் படிமலர்ச்சியில் சிறப்பியல்பு களாகத் திகழ்ந்தன. பாராஹிப்பளில் காணப்பட்ட குறிகள் புவியியல் வரலாற்றில் ஹிப்சோடாண்ட் குதிரைகள் தோன்றிப் படிமலர்ச்சியுறக் காரணமாக அமைந்தன. பாராஹிப்பஸ் வழியில் அடுத்துத் தோன்றிய மெரிக்ஹிப்பஸ் (merychippus) உண்மையான முதல் குதிரையாகும். புல்லையரைத்து உண்பதற்கேற்ற வாறு பற்களின் அமைப்புச் சிறப்புற்றிருந்தது; ஒரு மீட்டர் உயரமிருந்த அக்குதிரை அண்மைக்கால மட்டக்குதிரையை (pony) ஒத்திருந்தது. நீண்ட வலிவான கால்கள், ஏனைய விரல்சுளைவிடப் பெரி தான மூன்றாம் கால் விரல், நீண்ட கண், முன்பகுதி யுடைய மண்டையோடு, உயர்ந்த நுனியுடைய கடை வாய்ப்பற்கள் ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டி ருந்தது. R மெரிக் பிளையோசீன் (pliocene) காலத்தில் ஹிப்பச்சிலிருந்து தோன்றிய பேரினங்களில் பல டெர்சியரி (tertiary) காலத்தின் இறுதியில் மறைந்து போயின. இக்காலத்தில் பிளையோஹிப்பஸ் (pliahippus) என்னும் சிறப்பினம் தோன்றி நன்கு படி மலர்ச்சியடை ந்தது. ஹிப்பேரியான் (hipparian) நியோஹிப்பேரியான் (neohipparian), நான்னிப்பஸ் (nannipus), கேலிப்பஸ் (calippus) ஆகியவை பக்கக் கிளை இனங்களாகத் தோன்றின. அனைத்து இனங் சுளும் காலில் 3 விரல்களை மட்டுமே கொண்டி ருந்தன. தற்காலத்தில் வாழும் குதிரையும், ஹிப்பிடி யான் (hippidion) என்னும் குதிரையினமும் பிளையோ ஹிப்பசிலிருந்தே தோன்றின என்பதற்கு வலிவான சான்றுகள் உள்ளன. பிளீஸ்டோசீன் (pleistocene) காலத்தில் நன்கு படிமலர்ச்சியற்ற ஹிப்பிடியான் தென் அமெரிக்கா முழுதும் சென்று சிறந்த தக வமைப்புப் பரவல் பெற்று வாழ்ந்தது. மையோசீன், பிளையோசீன் காலப் பிற்பகுதி களின் தோன்றிய பிளையோஹிப்பஸ் ஒற்றை விரலுடைய குதிரைக்கு முன்னோடியாகும். இதன் ஒவ்வொரு காலிலும் ஒரு விரல் மட்டும் நன்கு வளர்ந்திருந்தது. இரண்டு, நான்காம் விரல்கள் சிற்றெலும்புகளாக இருந்தன. மேல் பற்கள் தற்காலக் குதிரையிலுள்ளவாறே இருந்தன. இதன் உயரம் ஏறத்தாழ 1 மீட்டராகும். கடைவாய்ப் பிளீஸ்டோசீன் காலம் தொடங்கி அண்மைக் காலம் வரை தோன்றிய தற்காலக் குதிரையில் முதல் ஐந்தாம் விரல்கள் முழுமையாக மறைய, இரண்டு நான்காம் விரல்கள் (splint) எலும்புகளாக உள்ளன. கடைவாய்ப்பற்கள் மேலும் சிறப்புற வளர்ந்துள்ளன. மூளையின் பெருவளர்ச்சிக்கேற்ப மண்ைேடயோடும் பெருத்து முன் பக்கம் நீண்டுள் ளது. இதன் உயரம் ஏறத்தாழ 1.6 மீட்டராகும். இயோஹிப்பஸிலிருந்து படிமலர்ச்சி பெற்ற அண்மைக் கால ஈக்வஸ் அல்லது தற்காலக் குதிரை வரை நடந்