பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/864

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 குதிரை மசால்‌

844 குதிரை மசால் சாகுபடி முறை. குதிரைமசால் செடியைத் தொடர்ந்து நிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு வைத் திருக்கலாம். சமவெளிப் பகுதியில் நன்கு விளையும். மலைப்பகுதிகளில் 2400 மீட்டர் வரை வளரும். இது வடஇந்தியப் பகுதியில் காணப்படும் 40.6-43.2 C வெப்பத்தையும் தாங்கும். ஓரளவு குறைந்த வெப்பத் தையும் தாங்கும். வெப்பமும் காற்றின் ஈரப்பசையும் ஒருங்கே மிகுதியாக இருப்பது இச்செடியின் வளர் சிக்குக் கேடு செய்யும். இச்செடியின் சாகுபடிக்கு 500-550 மி.மீ மழையளவு மிகவும் தேவை. ஆனால் 350 மி.மீ மழையுள்ள இடங்களிலும் 1000 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்யும் இடங்களிலும் இதை வளர்ப்பதுண்டு. பலவகையான மண்வகை களிலும் வளரும் செடி அமில, களிமண் பகுதி களில் நன்கு வளர்வதில்லை. இதற்கு வடிகால் வசதி யுள்ள வளமான களிச்சேற்று வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில் அமில கார நிலை (pH) 6.5-7.2 இருத்தல் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. நிலத்தை நான்கு அல்லது ஐந்து முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். விதைப்பிற்கு முன்நிலத்திற்குச் சுண்ணாம்பு இடுவதும் வழக்கம். அடியுரமாக ஹெக்டேருக்கு 25 கி.கி நைட்ரஜன், 120 கி.கி பாஸ்ஃபரஸ், 40 கி.கி பொட்டாசியம் (உரம்) இடவேண்டும். ஒவ்வோர் ஆண்டும் சூப்பர்பாஸ் பேட்டும் தொழு உரமும் இடவேண்டும். இதற்குப் பதில் அம்மோனியம் பாஸ்ஃபேட், எலும்புத்தூள், மீன்கழிவு போன்றவற்றையும் பயன்படுத்தலாம். குதிரை மசால் விதை மூலமாக இனப்பெருக்கம் செய் கிறது. விதைத்தோல் கடினமானதாகையால் நீரில் ஊறலைத்துப் பின் விதைக்க வேண்டும். அறுவடை செய்த விதைகளை உடனே விதைத்தால் நன்கு முளைப்பதில்லை. பொதுவாக அறுவடை செய்து 2-3 ஆண்டுகள் சேமித்து வைத்திருக்கும் விதை கள் நன்றாக முளைக்கின்றன. தனிப் பயிராகவோ கினியாப்புல் மற்றும் கடுகுடன் கலப்புப் பயிராகவோ தனை வளர்ப்பதுண்டு. விதைகளை ரைசோபிய நுண்ணுயிர்களுடன் விதைகளைப் கலந்து விதைக்க வேண்டும். இதன் பரவலாகத் தெளித்தோ, பாத்திகளிலோ பார் முறை யிலோ வரிசையாக ஊன்றிச் சாகுபடி செய்வதுண்டு. அறுபது செ.மீ. இடை வெளியில் அமைந்துள்ள வரப்பு களின் அடிப்பகுதியில் குத்துக்கு 3 அல்லது 4 விதை கள் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றப்படுகின்றன. பாத்திகளில் 25 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்திற்குக் கோடுகளை இழுத்து 3 செ.மீ. மண் ணால் மூடி அதில் விதைகளை 5 செ.மீ. இடை வெளியில் விதைத்து மூடவேண்டும். விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். வி தைத்த மூன்றாம் நாளும் பின்பு வாரம் ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். பெரும்பாலும் இது இறைவைப் பயிராகப் பயிரிடப் படுகிறது. விதைத்த பிறகு மாதம் ஒருமுறை என்னும் கணக்கில் களையெடுத்தல் வேண்டும். விதைத்த 60-75 நாள் முதல் தழை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் தழை குறைவாகவே கிடைக்கும். பின்பு 30-45 நாள் இடைவெளியில் தழைகளை அறுவடை செய்யலாம். இவ்வாறு 8-12 முறை தழையை வெட்டலாம். ஒருஹெக்டேரில் ஆண்டொன்றுக்கு 70-80 டன் பசுந்தழையைப் பெறலாம். இவ்வாறு குதிரைமசால் செடியிலிருந்து தொடர்ந்து 6-7 ஆண்டுகளுக்குத் தழையைப் பெறமுடியும். பின்பு செடிகளை நீக்கிவிட்டு நன்கு உழுது மீண்டும் விதைக்க வேண்டும். செடி 10-15% பூத்திருக்கும்போது அறுவடை செய்தால் தழை விளைச்சல் கூடுகிறது. விதை உற்பத்தி, தழைக்காகச் சாகுபடி செய்யப் பட்ட பயிரில் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குத் தழையை அறுவடை செய்து கொண்ட பின்பு அப் பயிரை வெட்டாமல் விட்டு வைத்து விதைகளைப் பெறலாம். நெற்றுகள் பழுப்பான பின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செடியை அறுவடை செய்து கட்டி எடுத்துச் சென்று களத்தில் உலர்த்திக் குச்சி யால் அடித்து விதைகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு ஹெக்டேரில் சராசரியாக 200-300 கி.கி, விதை யைப் பெறலாம். நோய்களும் பூச்சிகளும். இந்தியாவில் குதிரை மசாலில் தோன்றும் முக்கிய நோய்களில் சுயூடோ பெசிசா மெடிகாஜெனிஸ் (Pseudopeziza medicaginis) பூசணம் ஏற்படுத்தும் இலைப்புள்ளியும் ஒன்றாகும். இந்தியா நீங்க, குதிரைமசால் பயிராகும் அனைத்து நாடுகளிலும் இதைக் காணலாம். இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான செடியின் அடிப்பகுதியில் இலைகள் உதிர்ந்து விடுகின்றன. சிற்றிலைகளில் சிறிய பழுப்புநிறப் புள்ளிகளைக் காணலாம். புள்ளி களின் மையத்தில் அடர்பழுப்பு -கறுப்பு நிற அபோத்தீசியங்களைக் (apothecia) காணலாம். செழுமையான தண்டின் மீது சிறிய நீள்வட்ட வடிவப் புள்ளிகளைக் காணலாம். ஆனால் தண்டில் உள்ள புள்ளிகளில் அபோத்தீசியங்கள் காணப்படா. போதிய அளவு உரமிட்டும் நோயுற்ற செடிகளை அழித்தும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இதில் தோன்றும் மற்றொரு நோய் துருநோய். இதை யுரோமைசெஸ் ஸ்ட்ரையேட்டஸ் மெடிகாஜினிஸ் (Uromyces striatus medicaginis) என்னும் தோற்றுவிக்கிறது. பூசணம் துருப்பூசணத்தில் யுரிடியா, டீலியா நிலைகளைக் குதிரைமசால் இலைகளில் காணலாம். யுரிடியா செம் பழுப்பு நிறமானது. பின்பு உண்டாகும் டீலியா நிலை