846 குதிரைவாலி
846 குதிரைவாலி குதிரைவாலி இதைக் கிட்டினவாலி என்றும் கூறுவதுண்டு. குதிரை வாலி வறட்சியைத் தாங்கி வளரும் தானியப் பயிர். இதை ஆங்கிலத்தில் பார்ன் யார்ட் மில்லெட் ( Barn yard millet) என்றும் ஜப்பானில் மில்லெட் என்றும் கூறுவர். இதன் தாவரப் பெயர் எக்கினோகுளோயா ஃபுரூமெண்டேசியா ஆகும். இதன் இணை தாவரப் பெயர் எ. காலனம் வகை ஃபுரூமெண்டேசியா என்ப தாகும். இத்தாவரம் போயேசி (poaceae) குடும் பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் மத்திய ஆசியா. இப்பகுதியிலிருந்து ஐரோப்பா, அமெரிக்காவிற்குக் குதிரைவாலி பரவியது. இப்பயிர் இந்தியா, சீனா. ஜப்பான். மலேசியா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. சீன, ஜப்பானிய மக்கள். அரிசி உற்பத்தி போதியளவு இல்லாதபோது குதிரைவாலியை உணவாக உண்பர். ஆஃபிரிக்கா போன்ற நாடுகளில் சிறிய பரப்புகளில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தியாவில் இதை உற்பத்தி செய்யும் மாநிலங்களுள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், பீகார், உத்தரப்பிரதேசம். மத்திய பிரதேசம் ஆகியவை முக்கியமானவை. செடி. இது ஓரளவு கிளைக்கும் தன்மையுள்ள ஒருபருவச் செடியாகும். இது 60-120 செ.மீ. வரை உயரமாக வளரும். வேர்கள் ஆழமற்றவை. இலைகள் குறுகலானவை; தட்டையானவை; ஓரளவு சிறு மயிர்களால் போர்த்தப்பட்டு இருக்கும் அல்லது பளபளப்பாக இருக்கும். மஞ்சரி கதிர் வடிவமாக (panicle) இருக்கும். கதிர்க்காம்பு முப்பட்டை யுடையது. சிறு கதிர்கள் முட்டை, ஈட்டி வடிவில் நீள்சதுரமாக இருக்கும். இவை 3-5 வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். குளூம் வெள்ளை, சிவப்பு நிற மாக இருக்கும். உயி சவ்வு போன்றது; சமமாக இருக்காது. லெம்மாக்கள் சமமற்றவை. லாடிக்கியூல் கள் இரண்டு; மசுரந்ததாள் மூன்று. தானியம் ஒரு புறம் தட்டையாகவும் மறுபுறம் குவிந்துமிருக்கும். தானியத்தின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளை யாகும். ஏற்ற சூழ்நிலை. குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளரும் தானியப் பயிர்களுள் குறிப்பிடத் தக்கது. இதன் உற்பத்திக்குக் குறைந்த அளவே நீர் தேவைப்படுவதால் மானாவாரிப் பயிராகவே சாகு படி செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரமுள்ள மலைப்பகுதி வரை உ இதைச் சாதபடி செய்யலாம். மித வெப்பமான காற்றும் ஈரப்பசையுடைய சூழ்நிலையும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றவை. நீர் தேங்கி நின்றாலும் இப்பயிர் நன்றாக வளர்ந்து விளைச்சலைத் தரும். வளமில்லாத நிலத்தில் வளரும் தன்மை கொண்ட இதைப் பருவ மழை பெய்ததும் விதைப்பர். போதுமான அளவு கரிமப் பொருள் செறிந்த மணல்கலந்த நிலம் இதன் வளர்ச்சிக்கு நன்கு உதவும். ஆற்றங்கரை ஓரங்களிலும் சாகுபடி செய்வர். பொதுவாக, பருவமழைக்குப்பின் ஜூன் மாதத்தில் குதிரைவாலி விதைக்கப்படுகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் சில பகுதிகளில் இப்பயிரை விதைப்பர். விதைப்பிற்கேற்றவாறு செப்டம்பர் அல்லது ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. சாகுபடி முறை. பொதுவாக நிலத்தை ஓரிரு முறை உழுது பண்படுத்தவேண்டும். விதைகளைத் தூவியோ விதைக்கும் கருவியின் மூலமோ விதைக் கலாம்.ஹெக்டேருக்கு 8-10 கிலோ விதை போதும். எல்லாப் பகுதியிலும் நேரடியாக விதைத்த போதும் மகாராஷ்டிரத்தில் இதை நாற்றுவிட்டு நடுகின்றனர். இதைத் தனிப்பயிராகவும் கலப்புப் பயிராகப் பருத்தி, துவரை, மொச்சை ஆகிய சில குறுகிய காலப் பயறு வகைகளுடனும் சாகுபடி செய்வதுண்டு. பயிர்ச் சுழற்சியில் குதிரைவாலி கொண்டைக்கடலை, குதிரைவாலி - பட்டாணி, குதிரைவாலி-ஆலிவ்விதை (Linseed), குதிரைவாலி-பார்லி என்று பயிரிடப்படும். பொதுவாக இப்பயிருக்கு உரமிடுவதில்லை. இறுதி உழவில் ஹெக்டேருக்கு 5-10 டன் தொழு உரம் இடப்படும். விதைக்கும்போது அடியுரமாக ஹெக்டே ருக்கு 40 கிலோ தழைச்சத்து. 30 கிலோ மணிச் சத்து, 20 கிலோ சாம்பல்சத்து இட்டு மிகு விளைச் சலைப் பெறலாம். பாசன வசதி இருக்கும் பகுதி களில் விதைத்த 25-30 நாளில் பாதியளவு தழைச் சத்தை மேலுரமாக இடலாம். பொதுவாக இப்பயிர் மானாவாரியாகப் பயிரிடப் பட்ட போதும் கதிர் உருவாகியிருக்கும்போது ஓரிரு முறை நீர் பாய்ச்சினால் விளைச்சல் கூடும். களைக் கொட்டின் உதவியால் விதைத்த 25-30 ஆம் நாள்