பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்று வளர்ப்பு 67

கலவையைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளித்துக் குணப்படுத்தலாம். காக்சிடியோசிஸ். இது இளம் கன்றுகளைத் தாக் கும் நோயாகும். பாதிக்கப்பட்ட சுன்றுகளில் இரத் தம் கலந்த கழிச்சல் இருக்கும். அவை மிகவும் சோர்ந் திருக்கும். பாதிக்கப்பட்ட கன்றுகளைத் தனியாகப் பிரித்து மருத்துவம் அளித்தல் வேண்டும். கன்று டிப்தீரியா. இது ஆறு மாத வயதிற்குட்பட்டட கன்றுகளைப் பெரிதும் பாதிக்கும். வாய், நாக்கு, உதடு முதலிய உறுப்புகளில் புண் தோன்றும். மூச்சு உறுப்புகள் பாதிக்கப்படும். தொண்டைச் சதை வீங்கி மஞ்சள் நிறமாக இருக்கும். பாதிக்கப்பட்டவற்றைப் பிரித்து உடனடி மருத்துவம் அளித்தல் வேண்டும். ஆறு மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு உரிய காலத்தில் கருச்சிதைவு நோய்த் தடுப்பூசி, சாண நோய்த்தடுப்பூசி, வெக்கை நோய்த் தடுப்பூசி. தொண்டை அடைப்பான் தடுப்பூசி, பிற தடுப்பூசி கள் போடவேண்டும். கன்று வளர்ப்பு . - பி. தங்கவேலு பிறந்த கன்றுகள் வெளிச்சூழ்நிலையில் பல நோய் களுக்கு உட்படுவதால் ஒழுங்கான பராமரிப்பு முறைகளால் மட்டுமே அவற்றை நோயினின்றும் பாது காக்க முடியும். பிறந்த கன்றுகளில் பின்வரும் பரா மரிப்பு முறைகளைக் கையாளுதல் தேவை. கன்று கள் பிறந்தவுடன் ஒழுங்காகச் சுவாசிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தி மூக்கு வாய், கண் மற்றும் உடல் மேலுள்ள சளி போன்ற நீர்மத்தைத் தூய்மையான துணி கொண்டு துடைக்க வேண்டும். இலேசாக மார்புப் பகுதியை அழுத்தி விடுவதன் மூலமோ கன்றுகளைத் தலைகீழாகத் தூக்கிப் பிடிப்பதன் மூலமோ செயற்கை முறையில் மூச்சு விடுமாறு செய்யலாம். காலில் உள்ள வழவழப்பான குளம்புப் பகுதியைக் கிள்ளிவிடுவதன் மூலம் கன்றுகளை நன்கு எழுந்து நடக்கச் செய்யலாம். நலமுள்ள கன்றுகள் பிறந்த அரை மணி நேரத்திற்குள் எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கச் செல்லும். பிறந்த கன்றுகளின் பார்வை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறந்த கன்றுகளின் கொப்பூழ்க் கொடியை நுண்ணுயிர் எதிர் மருந்தைக் கொண்டு கழுவிய பின் 2.5 செ.மீ இடைவெளி விட்டு நுால்கொண்டு இறுக்கமாகக் கட்டி முடிச்சிட்டு அதிலிருந்து 1 செ.மீ இடைவெளி விட்டு வெட்டிவிட வேண்டும். பின் அந்த இடத்தில் நுண்ணுயிர் எதிர் மருந்தைத் தடவி அ.க.8 5 அ கன்று வளர்ப்பு 61 விட வேண்டும். இதனால் கொப்பூழ்க் கட்டி முதலான நோய்களைத் தவிர்க்கலாம். கன்றுகளை நன்கு தேய்த்து வைக்கோல் படுக்கையில் விடவேண்டும். கன்று பிறந்தவுடன் தாய்ப்பசுவிடம் சுரக்கும் சீம்பால் புரதமிகு உணவாகும். இது புரதம், வைட்டமின், தாது உப்புப் போன்ற பல உயிர்ச் சத்துகளைக் கொண்டது. மேலும் இதில் உள்ள எதிர் உயிர்ப்பொருள்கள் பிறந்த கன்றுகளை நோயி னின்றும் பாதுகாக்கின்றன. மேலும் பிறந்த கன்று களின் குடலில் அடைத்துக் கொண்டிருக்கும் யேற்றும் மலமிளக்கியாகவும் சீம்பால் பயன்படு கிறது. எனவே முதல் மூன்று அல்லது நான்கு நாள் களுக்குக் கன்றுகளுக்குச் சீம்பாலை அளிப்பதனால் இளம் கன்றுகளில் ஏற்படும் உயிரிழப்பைப் பெரு மளவு தவிர்க்கலாம். மீகோனியம் என்னும் கழிவுப் பொருளை வெளி கன்றுகளுக்கான கொட்டில்கள். கன்றுகள் அடைத்துவைக்கப்படும் கொட்டில்கள் நல்ல ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ளனவாகவும், உயர்ந்த ஈரமில்லாத வைக்கோல் படுக்கை கொண்ட தரை யாகவும் இருக்க வேண்டும். கன்றுகள் ஒன்றை ஒன்று நக்காமல் தடுக்க வாய்க்கூடு போடலாம் அல்லது தாது உப்புக் கற்களைத் தொங்கவிடலாம். தீவனத் தொட்டிகள் 25 செமீ. அகலமும் 15 செ.மீ. ஆழமும் கொண்டிருக்கவேண்டும். கொம்பு நீக்கம் செய்தல். மூன்று முதல் பத்து நாள் வயதுள்ள இளம் கன்றுகளில் எரிசோடா போன்ற வேதிப் பொருள்களைக் கொண்டோ மின் கொம்பு நீக்கிகள் (electric dehorner) கொண்டோ கொம்பு நீக்கம் செய்யப்படவேண்டும். இதன் மூலம் மாடுகள் சண்டையிடுவதால் ஏற்படும் காயங்கள், கொம்பு முறிவு ஆகியவற்றைத் தவிர்க்க லாம். கன்றுகளை அடையாளம் காணுதல். அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு கன்றும் ஒருவித மையால் (ink) வெவ்வேறு எண்கள் மற்றும் எழுத்துக்கள் மூலம் குறியிடப்படுகின்றன. வெவ்வேறு எண் குறி யிடப்பட்ட உலோகத் தாது வளையங்களைக் கொண்டும் அடையாளம் காணலாம். கன்று கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல். களைப் பிறந்த அன்றே சீம்பால் குடித்த பின்பு தாயிட மிருந்து பிரித்துத் தனியாக வளர்ப்பது சிறந்த முறையாகும். இதன் முலம் சுன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான பாலை அதாவது அதன் மொத்த உடல் எடையில் 8 அல்லது 10 இல் ஒரு பங்கு அளவு பாலைக் கணக்கிட்டுத் தரலாம். பால் மிகுதி யாகக் குடிப்பதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, பால் குறைவாகக் குடிப்பதால் ஏற்படும் வளர்ச்சிக் குறைவு, மலச்சிக்கல் போன்றவற்றை தன் மூலம்