குப்பைத் தாவரம் 851
கோவணம் அல்லது கொண்டு கட்டுப் போடலாம் அல்லது கட்டிக் கொள்வதால் பஞ்சுத்துணி காயத்திலேயே இருக்கும். மா.ஜெ.ஃபிரெடெரிக்ஜோசப் குப்பைக்கீரை இக்கீரை குப்பைமேடுகளிலும் தரிசு நிலங்களிலும் தன்னிச்சையாக வளரும். இதன் இலைகளைப் பறித்துச் சமைத்துண்ணலாம். இது இந்தியாவில் எப்பகுதியிலும் சாதாரணமாகக் கிடை டக்கும் கீரை யாகும். இது 30-60செ.மீ. உயரம் வளரக் கூடியது. பக்கக்கிளை விட்டு வளரும் தன்மையைக் கொண்டது. இதன் தண்டு பச்சை அல்லது சிவப்பு நிறமாயிருக்கும். ஒரு செடியில், விதைகள் எண்ண முடியாத அளவிற்குத் தோன்றும். இதன் தாவரப் பெயர் அமராந்தஸ் விரிடின் (Amaronthus viridin) ஆகும். கீரை முளைத்த ஒரு மாதத்திலேயே களைப் பறித்துச் சமைக்கலாம். லை உயரம் நன்கு செடி. இது நேராக 30-60 செ. மீ. வளரும் ஒரு பருவக் களைச் செடியாகும். கிளைத்து வளரும் இச் செடியைக் கரிசல் நிலத்தில் கூட்டம் கூட்டமாகக் காணலாம். இச்செடியின் தண்டு உருண்டையாகவும் மிகச்சிறிய பள்ளங்களைக் கொண்டும் பச்சை நிறத்தில் இருக்கும். தண்டின் மீது பெரும்பாலும் ஊதா நிறப்பகுதிகள் படிந்திருக் கும். இலைகள் தண்டில் தனித்தனியாக மாற்றடுக் கத்தில் நீண்ட காம்புடன் உண்டாகியிருக்கும். இதில் இலையடிச் செதில்கள் இருப்பதில்லை. இலைகள் முட்டை வடிவத்திலும் 2.5-5.0 செ. மீ. நீளத்திலும் இருக்கும். இலையடிப் பகுதி ஆப்பு வடிவத்தில் லை ஓரம் வளைந்தோ பற்கள் இல்லாமலோ நேராக இருக்கும். இலையின் இரு புறங்களும் வழ வழப்பாக இருக்கும். சில சமயங்களில் இலையின் மேற்பரப்பு மையத்தில் சாம்பல் நிறப் பகுதியைக் காணலாம். பூக்கள் நீண்ட மஞ்சரித்தண்டில் கதிராக (panicle) உண்டாகியிருக்கும். மஞ்சரி இலைக் சுக்கங் களிலோ செடியின் நுனிப் பகுதியிலோ தோன்றும். பெண் பூக்களும் பூக்களில் ஆண் பூக்களும் காணப்படுகின்றன. இரண்டு வகைப் பூக்களிலும் பூவடிச் செதில்கள் உண்டு. பூவடிச் செதில்கள் முட்டை வடிவிலோ, நீள்சதுர வடிவிலோ கூர்மை யான நுனியைப் பெற்றுள்ளன. ஆண் பூக்களில் பெரும்பாலும் 3 புல்லி இதழ்களும் கில சமயங்களில் 5 புல்லி இதழ்களும் இருக்கும். ஆனால் மகரந்தக் கேசரங்கள் 3 மட்டுமே இருக்கும். பெண்பூவில் மூன்று புல்லி இதழ்கள் இருக்கும். சூல்பை மேல்மட்டச் சூல்பை வகையைச் சேர்ந்தது. சூல்முடி இரண்டு அ.க.8-54 அ குப்பைத் தாவரம் 85/ மூன்றாகப் பிரிந்திருக்கும். இச்செடியில் பூக்கள். கனிகள் ஆண்டு முழுதும் உற்பத்தி யாகின்றன. கனி தட்டையான வெடிக்காத சுருங்கிய அர்ட்டிக்கிள் (urticle) ஆகும். ஒவ்வொரு கனியிலும் பளபளப்பான ஒரு கரிய நிற விதை இருக்கும். விதைகள் இருபுறக் குவிவில்லை வடிவில் வழவழப் பாக இருக்கும். இச்செடி விதை மூலம் இனப் பெருக்கமடைகிறது. ஒரு செடியில் விதைகள் 10,000க்குக் குறையாமல் உண்டாகின்றன. சத்துகள். நூறு கிராம் கீரையில் புரதம் 5.2 கிராம், கொழுப்பு 0.3 கிராம், நார்ப்பொருள் 6.1 கால்சியம் கிராம், மாவுப் பொருள்கள் 3.8 கிராம். 330 மி.கிராம், பாஸ்ஃபரஸ் 52 மி. கிராம், இரும்பு 18.7 மி.கிராம், வைட்டமின் C 178 மி.கிராம், 38 கிலோ கலோரி ஆற்றல் ஆகியவை உள்ளன. மருத்துவப் பண்புகள். இக்கீரை உடலுக்கு வலி மையும் அழகும் தரும். இக்கீரையுடன் பருப்பைச் சேர்த்துக் கடைந்துண்ணச் சுவையாக இருக்கும். பசி உண்டாகும். சிறுநீர் பெருகும். இக்கீரையை அரைத்து வீக்கம். கட்டி ஆகியவற்றின் மீது கட்ட அலை கரைந்து விடும். கீரை சூட்டைத் தணிக்கும், கை, கால் நடுக்கம், பாதநோய் ஆகியவற்றிற்கும் உதவும். இச்செடியின் வேரை உலர்த்திச் சாம்பலாக்கி, கட்டி வெளியாகிப் புண் களுக்கு வைத்துக் கட்ட, சீழ் ஆறும். குப்பைத் தாவரம் கோ.அர்ச்சுணன் கற்கள், மண், குப்பை கூளங்கள் நிறைந்த இடங் களில் காணப்படும் தாவரங்கள் குப்பைத் தாவரங் கள் எனப்படுகின்றன. அமராந்தேசி (Amaran thaceae) யுஃபோர்பியேஸி (Euphorbiaceae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த பல சிற்றினங்கள் இத்தகைய வாழிடங்களில் காணப்படுகின்றன. சிறு பூளை ( Aerva- Ianata), நாயுருவி (Achyranthus aspra) குப்பைக்கீரை {Amaranthus viridis). சிறுகீரை (Amaranthus polyge- noides). காட்டுச் சிறுகீரை (Amaranthus graecizans) முள்ளுக்கீரை (Anarauthus spinosus) முதலானவை அமராந்தேசி குடும்பத்தைச் சேர்ந்தவை. குப்பைமேனி (Acalypha indica), கீழாநெல்லி (Phyllanthus fruternus) அம்மான்பச்சரிசி (Euphorbia hirta) முதலானவை யுஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றைத் தவிர வறள் நிலத் தாவரங் களாக வளரக்கூடிய பல தாவரச் சிற்றினங்களும், குறிப்பாகச் சில கள்ளி வகைத் தாவரங்களும் கற்களும், குப்பையும் நிறைந்த இடங்களில் இயற்கை