852 குப்பைமேனி
852 குப்பைமேனி யாகவே காணப்படுகின்றன. குறுஞ்செடி அமைப்பு, தனியிலைகள். ஸ்பைக் வகை மலர்கள், பூவடிச் செதில்கள், குப்பை கின்றன. மற்றொரு குப்பைத் தாவரமான மேனி மஞ்சரி, காம்பற்ற சிறந்த மூலிகையாகும். மூச்சு அழற்சி, இருபால் மலர்கள், மலச்சிக்கல். சொறி சிரங்கு, நச்சுக்கடி முதலிய நோய்களைப் போக்க வல்லது. கீழாநெல்லி மஞ்சட் ஒற்றைத் தாவர வரிசையில் அமைந்த பூவிதழ்கள். பூவிதழ்களுக்கு எதிராக அமைந்திருக்கும் மகரந்தக் காமாலைக்குச் சிறந்த மருந்து. காண்க, கீழாநெல்லி. கேசரங்கள், அடிச் சூலொட்டு (basal placentation ) ஆகிய பண்புகள் அமராந்தேசி குடும்பத்தைச் சேர்ந் தவை. அமராந்தேசி குடும்பத்தைச் சேர்ந்த பல குப்பை வாழ் சிற்றினங்கள் அவற்றின் உணவுப் பயன் காரணமாகத் தோட்டங்களில் பயிர் செய்யப்படு கின்றன. தாதுப் பொருள்களையும், வைட்டமின் களையும் தரும் காப்பு உணவாகவே ( protective food) கீரைகளைக் கொள்ள முடியும். வெறுமைப்பசியைப் hollow hunger) போக்கக் கீரை உணவு பயன்படும். செரிமானத்திற்குத் தேவையான நார்ப்பொருள் கீரையுணவில் உண்டு. கிழங்குகளைவிடக் கீரையில் இரும்புச்சத்து எளிதில் பயன்படும் அளவில் உள்ளது. கீரைகளில் பாதிக்கு மேல் பச்சையம் இருப்பதால் அவற்றிலிருந்து மக்னீசியம் கிடைக்கிறது. மேலும் மாங்கனீஸ், செம்பு. போரான் ஆகியவையும் நுட்ப மான அளவில் உள்ளன. உணவில் உள்ள கரோட்டின் (carotene) சாந்தோஃபில் (xanthophyll) ஆகிய நிறமிகள் கல்லீரலில் A வைட்டமினாக மாற்றம் பெறுகின்றன. B வைட்டமின் தொகுதியைச் சேர்ந்த ரிபோபிளோவினும் (Riboflavin) C வைட்டமினாகிய ஆஸ்கார்பிக் அமிலமும் கீரைகளில் மிகுதியும் உண்டு. குப்பைமேடுகளிலும், காடு முரடான பகுதி களிலும் காணப்படும் கீரை வகைகளில் பல சிற்றினங்கள் சிறந்த மருத்துவப் பண்புகளைக் கொண்டவை. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி முதலிய முறைகளில் குடல் தொடர்பான பல நோய்களுக்குக் கீரைகள் பயன்படுகின்றன. முள்ளுக் கீரை எனப்படும். தாவரத்தின் இலைகளையும் வேரையும் கொதிக்க வைத்துக் குழந்தைகளுக்கு மலமிளக்கியாகத் தரலாம். வாய்ப்புண், தொண்டைப் புண் முதலியவற்றிற்குத் தாவரச் சாறு, பூசு மருந் தாகவும் வாய்க் கொப்பளிக்கவும் பயன்படுகிறது. இச்சிற்றினத்தில் கொழுப்பு எண்ணெய்கள் உள்ளன. சதைப்பற்றுள்ள கீரைத் தண்டின் முதிர்ந்த நிலையில் தேக்கி வைக்கப்படும் உணவுப்பொருளில் நார்ப்பொருள் சற்று மிகுதியாக இருக்கும். புல்வெளி களில், குப்பை கூளங்களில் வளர்ந்திருக்கும் வேறு பல தாவரச் சிற்றினங்கள் மூலிகைகளாகப் பயனா கின்றன. அகிராந்தஸ் ஆஸ்பரா (Achyranthes aspera) எனப்படும் நாயுருவி, தேள்கடிக்கு மருந்தாகப் பயன் படுவதோடு மூலம், கட்டி, தோலரிப்பு முதலிய நோய் களுக்கும் பயனளிக்கிறது. பூளை, சிறுபூளைத் தாவரங்களின் வேர்கள் தலைவலியைப் போக்கும் மருந்தாகப் பயன்படு அம்மான் பச்சரிசி என்னும் சிற்றினமும் மருத்துவப் பண்பு கொண்டது. இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குப்பைத் தாவரங்கள் பெரும் பாலும் ஒருபருவ அல்லது ஓராண்டுத் தாவரங்களாக உள்ளன. குப்பைச் சத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிறிதளவு நீர்ப்பசையுடன் கூடிய சூழலி லேயே இவை நன்கு வளர்கின்றன. குப்பைத் தாவரங்கள் பொதுவாக ஓராண்டு அல்லது ஒரு பருவத் தாவரங்கள் ஆகும். மேலும் இவை ஓராண்டில் குறிப்பிட்ட பருவத்திலேயே வளரக்கூடியவை, அதனால் ஓரிடத்தில் வாழும் குப்பைத் தாவரங்களை நோக்கினால், அவற்றின் தோற்றத்தில் ஒரு சுழல்முறை { (weed succession) இருப்பதைக் காணலாம். மேலும் இத்தாவரங்கள் மிகச்சிறிய அளவில் மண் அரிப்பைத் தடுக்கவும். நிலநீர் நீராவியாகாமல் தடுக்கவும் பயன்படுகின்றன. இவ்வாறு சுற்றுப்புறச்சூழ்நிலைப் பாதுகாப்பில் பெரும்பங்கு கொள்கின்றன. சி.முருகேசன் நூலோதி.K.N. Rao & K. V. Krishnamurthy. Angiosperms. S. Viswanathan Pvt., Ltd., Madras, 1984. குப்பைமேனி இதன் தாவரவியல் பெயர் அகாலிஃபா இண்டிகா (Acalypha inidca) என்பதாகும். குப்பைமேனி, இரு வித்திலைத் தாவர வகுப்பிலுள்ள. மோனோ கிளேமிடே (Monochlamydeae) என்னும் குழுவில், யூஃபோர்பியேசி (Euphorbiaceae) என்னும் ஆம் ணக்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெப்ப மண்டலப் பகுதிகளிலும், துணை வெப்ப மண்டலப் பகுதிகளிலும் காணப்படும் இத்தாவரம், ஏறத்தாழ 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய நிமிர்ந்த, கிளைத்த, மென்மையான. பசுமையான ஒரு பருவச் செடியாகும். வேர், ஆணிவேர் தொகுப் பாகும். வேர்கள் நன்கு கிளைத்து நிலமட்டத்திற்கு அருகில் மண்ணுள் படர்ந்திருக்கும். உருை உருளைவடிவ மான பசுமையான தண்டின் மீது மென்மையான குட்டையான தூவிகள் நிறைந்திருக்கும். நீண்ட .