854 குப்பைமேனி
854 குப்பைமேனி இலையையும்.உப்பையும் சேர்த்து அரைத்துச் சொறி சிரங்குகளுக்குத் தேய்த்துக் குளித்துவர, அவை குணமாகும். இலைச்சாற்றை எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி வலிக்குத் தேய்த்து வரலாம். இலையை அரைத்து, புண், நச்சுக்கடி இவற்றிற்குப் போடலாம். அல்லது லையை மஞ்சளுடன் கூட்டி அரைத்துப் பூசலாம். சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கீல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசலாம். இதையே காது வலிக்குக் காதைச் சுற்றிப் பூச நோய் தணியும். இலையுடன் உப்புச் சேர்த்துச் சாறு பிழிந்து நாள் தோறும் காலையில் இரு மூக்குகளிலும் விட்டு, குளிர்ந்த நீரில் தலை மூழ்கிவர வெளிநோய் நீங்கும். இலையை அரைத்துக் கழற்சிப் பிரமாணம் உருண்டை செய்து, எருவாய் வழியாய் உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும். சாறு பிழிந்து இத்துடன் சிறிது வேப்பெண்ணெய் தோய்த்துத் கலந்து, இறகில் தொண்டை அல்லது உள்நாக்கில் தடவ, சிறு குழந்தை களுக்கு வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியாக வெளிப்படும். இச்சாற்றையே வலிக்கும் தடவலாம். இலைப் பொடியைப் படுக்கைப் புண்களுக்கு வைத்துக் கட்ட, புழுக்கள் சாகும். தலை இலைச்சாற்றைச் சுண்டக் காய்ச்சி மெழுகு பதத்தில் எடுத்து 260-520 மி.கி. வரை கொடுக்க, குழந்தைகளுக்குக் காணும் இருமல் போகும். இதன் இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டலாம். இலையை குடிநீரிட்டு, சிறிது உப்புச் சேர்த்துக் குடிக்க மலத்தைக் கழிக்கும். குப்பைமேனியின் கீரையை ஆமணக்கு எண்ணெ யில் தாளித்து ஒரு மண்டலம் கற்ப முறையாக உண்ணவேண்டும். அது வாயுவுடன் சேர்ந்த தீங் களிக்கும் சேற்றும நோய் அனைத்தையும் போக்கி. உடல் நலம் தரும். இதன் வேரைக் குடிநீர் அல்லது வெந்நீர் விட்டு இடித்துச் சாறு பிழிந்து தக்க அளவில் கொடுக்க, கழியச் செய்யும். வேரை அரைத்து ஏறக்குறைய ஒரு கொட்டைப் பாக்களவு நீரில் கலந்து 3 நாள் கொடுத்து உப்பில்லா பத்தியம் வைக்க, நச்சுத்தீரும். ஆனால் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். குப்பைமேனி சமூலம் 105 கிராம் எடுத்து இடித்து, ஓர் ஆழாக்குத் திராட்சைச் சாற்றில் ஏழுநாள் ஊறவைத்து, இடையிடையே கிளறிவிட்டு நன்றாகப் பிழிந்து சாறெடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு 20 துளி முதல் ஒரு தேக்கரண்டி வரை தேனில் கொடுக்க, எலிநச்சுத் தீரும். வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். குப்பைமேனித் தைலத்தை 7.5-30 மி.லி. எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க நுண்ணுயிர் வெளிப் படும். இத்தைலத்தையே வாத நோய்களுக்கு மேலுக்குப் பூசலாம். காதில் ஈ புகுந்தால் குப்பை மேனியிலையில் சிறிது நீர் தெளித்துக் கசக்கிக் காதில் இரண்டு மூன்று துளி சாறு பிழிந்தால் ஈ செத்து விழுந்துவிடும். குப்பைமேனிச்சாறும், கோழியவரைச் சாறும் சமமாகக் கலந்து காதில் பிழிந்தால் ஈ சாகும். குப்பைமேனி, ஆடுதின்னாப்பாளை, அழிஞ்சில் முள்ளி இவற்றின் சாறு வகைக்கு 1.3 விட்டர்; நல்லெண்ணெய் 4.12 லிட்டர் இவற்றைக் கலக்கி மெழுகு பதமாகக் காய்ச்சி வடித்துத் தலைமுழுகி வந்தால் சிராப்பீனிசம் தீரும். குப்பைமேனி; சிறு புள்ளடி பொன்னாவாரை இவற்றை ஓரளவா யெடுத்து வேப்பம் இலையில் உப்புப் போட்டு இடித்துப் பிழிந்த சாறுவிட்டு. அரைத்து ஒரு வேளைக்குப் பின்னைக் காயளவு ஒரு நாளைக்கு மூன்றுவேளை கொடுக்க உட்குத்தும் புறவீச்சும் தீரும். குப்பைமேனிச் சூரணமும், திப்பிலிச் சூரணமும் சமமாகக் கலந்து வெருகடிப் பிரமாணம் பசு நெய்யில் மண்டலங் கொள்ள, பவுத்திரம் தீரும். கண் குருடுக்குக்குப்பைமேனி இலையைக் கசக்கிச் சாற்றைக் கையில் பிழிந்து இரண்டு கையையும் தேய்க்கக் குழம்பாக வரும். போது வழித்து வைத்துக் கண்ணி லிட்டுக் குளிக்கவேண்டும். மாத முழுக்கில்லாத பெண்களுக்குத் தூது வளை, குப்பைமேனி, குளத்துப்பாசி இவற்றை வகைக்குச் கொட்டைப்பாக்குப் பிரமாணம் எடுத்து அரைத்து நாட்டுச் சர்க்கரை சிறிது சேர்த்துப் பிசைந்து மூன்று நாள் அருந்தினால் முழுக்குண்டா கும். குப்பைமேனியிலையை உப்பில்லாமல் அவித்து மிளகும் அரிசியும் பொரித்துப் பொடித்துத் தூவி ஒரு மாங்காயளவு காலையில் 3 நாள் சாப்பிட சீவெள்ளைத் தீரும். கரிசலாங்கண்ணி, சிறு குப்பைமேனி - மஞ்சள் செருப்படை, நிலவாகைவேர் இவற்றை உலர்த்தி இடித்து வகைக்கு 70 கிராம் சூரணம் ஒன்றாகச் சேர்த்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு வெருகடி பிரமாணம் எடுத்துத் தேனில் மத்தித்து இருவேளையும் 2 நாள் கொடுக்கச் சூதக நோய் தீரும். முறையான மாத முழுக்குண்டா கும். பூண்டு, வசம்பு, குப்பைமேனிவேர் இவற்றைச் சமனெடை எடுத்து, தாய்ப்பால் விட்டுச் சிதைத்து 2-3 துளி வீதம் மூக்கில் விட ஒற்றைத் தலைவலி தீரும். இதன் இலைச்சாறும். சுண்ணாம்பும் கூட்டி மத்தித்துப் பூரான், வண்டு முதலியவை கொட்டிய அல்லது கடிவிடங்களுக்குத் தடவக் குணமாகும். இதன் இலைச் சூரணத்தைத் தீச்சுட்ட புண் படுக்கைப்புண் போன்றவற்றிற்குத் தூவ ஆறும். செருப்படை, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி இம்