856 குமட்டலும் வாந்தியும்
856 குமட்டலும் வாந்தியும் 20 சூரியன் தோற்றப் பாதை -10° 23'h 2 நடுவரை 1 22h 21h வல் ஏற்றம் படம். கும்பம் விண்மீன்குழு முடிச்சுகளும் {globular clusters) உள்ளன. -10% .0° W -10% வானக் கோளத்தில் 980 சதுரப் பாகைகள் இவ்விண்மீன் குழுவால் நிரப்பப்பட்டுள்ளன. குமட்டலும் வாந்தியும் பெ. வடிவேல் இரைப்பை-குடல் கோளாறுகளில் மட்டுமன்றி, மார்பு, மத்திய நரம்பு மண்டலம். நாளமில்லாச் சுரப்பிகள், ஆக்கச்சிதை மாற்றம்,மனோலயம் ஆகிய வற்றின் பாதிப்புகளிலும் குமட்டலும், வாந்தியும் உண்டாகலாம். வயிற்றில் தோன்றும் விரும்பத் தகாத ஓர் உணர்வைக் குமட்டல் என்பர். இதில் வாந்தி எடுக்க வேண்டும் என்னும் உணர்வும் காணப்படு க கிறது குமட்டலின் நரம்புத் தூண்டல் பற்றி எது வும் தெரியவில்லை. வாந்தி என்பது இரைப்பையிலிருந்து வாய் வழி யாக வலிய வெளிப்படுவதாகும். வாந்திக்கு முன்பு ஏப்பம் வரலாம். இரண்டு முக்கிய காரணங்களால், வாந்தி மிக முக்கியமான அறிகுறியாகக் கருதப்படு கிறது. பலவகையான நோய் நிலைகளில் சான்றாக மாரடைப்பு நோய், சூல் நிலை, குடல் வால் அழற்சி, அடிசன் நோய்களில் வாந்தியும் குமட்டலும் தொடக்க அறிகுறியாக உள்ளன. மேலும் காரணம் எதுவாக இருந்தாலும், வாந்தியால் உயிருக்கே ஆபத்தான சிக்கல்கள் தோன்றலாம். ஊக்கு வாந்தியை உண்டாக்கும் தூண்டல் இரு வழி களில் செயல்படலாம். வாந்தித் தூண்டல், நடு நோக்கிச் செல்லும் நரம்புப் பாதைகளை விக்கிறது. இதனால் முகுளத்தின் பின்பகுதியில் உள்ள வாந்தி மையம் தூண்டப்படுகிறது. இதற்குச் சான் றாக, வாய் வழியாக ஏற்கப்படும் தாமிர சல்பேட் டால் வாந்தி உண்டாவதைக் கூறலாம். வாந்தி மையம் நேரடியாகவும் தூண்டப்படலாம். வேதியிய ஏற்பி விசைப்பகுதி (chemoreceptor trigger zone) தூண்டப்படுவதாலும் வாந்தி உண்டாகலாம். வாந்தித் தூண்டல். t வாந்தி மையம் வாந்தி வேதியிய ஏற்பி விசைப் பகுதி (C.T.Z.) இந்த வேதியிய ஏற்பி விசைப்பகுதி மூளையின் 4ஆம் வெண்டிரிக்கிளின் அடித்தளத்தில் முகுளப் பகுதியில் அமைந்துள்ளது. வாந்தி ஏற்படுத்தும் மருந்துகளான கஞ்சா. டிஜிடாலிஸ் ஆகியவை இந்த வழியிலேயே செயல்படுகின்றன. காண்க: வாந்தி ஊக்கிகள். வாந்தி உண்டாகும் விதம். குமட்டலின்போது. ரைப்பையின் திண்மம் (tone) குறைந்து முன் சிறு குடலின் திண்மம் அதிகரிப்பதால், முன் சிறுகுடலில் உள்ள பொருள்கள் இரைப்பைக்குள் எதிர்க்களிக் கின்றன. ஏப்பத்தின்போது இரைப்பையிலுள்ளவை விரிவடைந்த உணவுக் குழலினுட் செல்லும். இரைப் பையின் இறுதிப் பகுதியான பைலோரஸ் சுருங்கும் போது, உணவுக்குழலின் சுருக்குத்தசை விரிவடை கிறது. வயிற்றுப்புற உணவுக் குழலும், இரைப்பையின் தொடக்கப் பகுதியும் மார்பினுள் பிதுக்கமடை கின்றன. வயிற்றுத் தசைகள் உதரவிதானம் ஆகிய வற்றின் பலமான சுருக்கத்தால் வாந்தி உண்டா கலாம். அப்போது, இரைப்பையின் தொடக்கப் பகுதி திறந்திருக்கும்; இறுதிப் பகுதி மூடியிருக்கும். இரைப்பை - குடல் கோளாறுகள், உண்ணப் பட்ட நச்சு மருந்துகள், தீவிர அழற்சி நிலைகள் (குடல் வால் அழற்சி), சூல் நிலை, இரைப்பைப் புண். சுணைய அழற்சி, பித்த நீர்ப்பை அழற்சி, மாரடைப்பு நோய் ஆகியவற்றில் தோன்றும் குமட்டல், வாந்தி சில மணி நேரம் அல்லது நாள் நீடிக்கும். சில