பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/878

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 குயில்‌

858 குயில் வதன் மூலம் துகளின் கலாம். காந்தப்புலம். கொண்டு துகள்களை பாதையை ஒளிப்படமெடுக் மின்புலம் ஆகியவற்றைக் விலக்கி அவற்றின் மின் னூட்டம், திசைவேகம் ஆகியவற்றை மதிப்பிட லாம். நடை மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் குமிழ்க் கலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முறையில் தக்க வடிவிலமைந்த கண்ணாடிக் குமிழ் ஒன்றில் நீர்மம் மிகு அழுத்தத்தில் சூடேற்றப்பட்டு, தக்க தானியங்கி அமைப்புகளின் மூலம் தத்தைக் குறைத்து அதை மீச்சூடேற்றி, வழியே ஆய்வுக்குரிய துகளைச் செலுத்தி, தக்க கால இடைவெளிக்குப் பின்னர் ஒளியூட்டிப்படங் கள் எடுக்கப்படுகின்றன. மேற்கூறிய நிகழ்ச்சிகள் ஒருசில அழுத் அதன் நொடிகளிலேயே முடிந்து விடுகின்றன. எனவே, விரைந்து செல்லும் துகள்களின் பாதை களையும் அணுக்கரு நிகழ்ச்சிகளையும் விரைந்து படமெடுக்க இயலும். மேலும், குமிழ்க்கலத்தில் பெறப்பட்ட சுவடுகள் முகிற்கலத்தில் பெறப்பட்ட மிகச் சிறந்த சுவடுகளைப் போல் அமைவதோடு அவற்றைவிடப் பன் மடங்கு தெளிவாகவும் நுட்ப மாகவும் அமைகின்றன. குமிழ்க்கலத்தில் பயன்படுத்தப்படும் நீர்மம் தெளிவான பாதைகளைப் பெறுவதற்கேற்றவாறு குறைந்த பரப்பு இழுவிசை, மிகு ஆவியழுத்தம் ஆகியவற்றைக் கொண்ட மின்கடத்தா நீர்மமாக அமையவேண்டும். கிளேசர் தம் முதல் ஆய்வில் ஈதரைப் பயன்படுத்தியபோதும் பின்னர் நீர்ம நைட்ரஜன், நீர்ம ஹைட்ரஜன், நீர்ம டியூட் டிரியம், நீர்ம ஹீலியம், நீர்ம செனான் (xenon) நீர்ம ஐசோபென்டேன், நீர்மப் புரொபேன் போன்ற நீர்மங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குமிழ்க்கலம், முகிற்கலம், ஒளிப்படப்பூச்சு ஆகியவற்றைவிடப் பின்வரும் காரணங்களால் சிறந்து விளங்குகிறது. குமிழ்க்கலத்தில் பயன்படும் நீர்மங்களின் அடர்த்தி முகிற்கலத்தில் பயன்படுத்தப்படும் ஆவி களின் அடர்த்தியைப் போல் சில நூறு மடங்கு உள்ளதாக அமைகிறது. எனவே. மீமிகு ஆற்றல் வாய்ந்த துகள்களின் சுவடுகளையும் பெற முடியும். ஏறத்தாழ 40 மீட்டர் நீளமுள்ள முகிற்கலம் தேவைப் படும் துகள்களையும் ஏறத்தாழ 15 செ.மீ. அளவே யுள்ள குமிழ்க்கலத்தைக் கொண்டு பதிவு செய்துண்ட முடியும். மேலும், ஒளிப்படப் பூச்சு முறையில் மிக அரிதாகவே பதிவு செய்யப்படக்கூடியதும் முகிற்கலத் தில் அறவே பதிவு செய்ய முடியாததுமான பல நிகழ்ச்சிகளையும் குமிழ்க்கலத்தில் பதிவு செய்ய முடியும். காட்டாக F மெசான் ஒன்று - மெசா னாகவும் அதையடுத்து எலெக்ட்ரானாகவும் சிதை வுறும் நிகழ்ச்சியை ஒளிப்படப்பூச்சில் மிக அரிதாகவே வ பெற முடியும். முகிற்கலத்திலோ ஒரே பதிவில் பெற முடியாது. அதில் ந மெசானின் சுவடு ஏனெனில். ஏறத்தாழ மூன்று மீட்டருக்குமேல் அமையும். மாறாக, குமிழ்க்கலத்தில் அது ஏறத்தாழ மூன்று மி.மீட்டர் அளவே இருக்கும். வெவ்வேறு புள்ளிகளில் குமிழ்களின் அளவுகளை மதிப்பிடுவதன் மூலம் வெவ்வேறு பாதைகள் அது தோன்றிய ஒப்பு நேரத்தையும் கணக்கிடலாம். ஏறக்குறைய 100 மைக்ரோ நொடி அளவு இருப்ப தாக அறியப்பட்டுள்ளது. குமிழ்கள் மிக விரைவில் தோன்றுவதால் சுவடுகள் தொடர்ச்சியாகவும் தெளி வாகவும் அமையும். ஆய்வுக்குரிய துகள் விளைவிக்கும் அயனியாக்கம் குறைவாக இருந்தாலும் குமிழ்க்கலம் உணர்வு நுட்பம் கொண்டுள்ளது. மேலும், வெவ்வேறு ஆய்வுகளின் தன்மைக்கேற்றவாறு குமிழ்க்கலத்தை எளிதில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். காட்டாக, முகிற்கலத்தைப் போலக் காந்தப்புல ஆய்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் துகள்களைப் பெரிதும் விலக்காத அடர்த்தி குறைந்த நீர்மத்தையும், ஒளிப்படப் பூச்சு முறையில் உள்ளதுபோல் மிகு சிதறலை விளைவிக்கக்கூடிய அடர்த்தி மிகுந்த நீர்மத்தையும் பயன்படுத்தலாம். முகிற்கலத்தில் சுவடுகள் வெப்பச்சலனத்தால் உருக்குலைக்கப்படுவதைப்போல் குமிழ்க்கலத்தில் வலைகளின் நிகழ்வதில்லை. முகிற்கலத்தில் அடர்த்தி சுவட்டை உருவாக்கிய துகள்களின் ஆற்றலை உணர்த்துகிறது. குமிழ்க்கலத்திலோ குமிழ் களின் அடர்த்தியைவிடச் சிறந்த முறையில் அதை உணர்த்துகிறது. புதிய துகள்களைப் பற்றியும் புதிய அணுக்கரு விசைகளைப் பற்றியும் விரைந்து தகவல் களைப் பெறுவதில் குமிழ்க் கலம் பெரிதும் துணை புரிந்துள்ளது. நூலோதி. J. B. Rajam, S. Chand & Co, New Delhi. குயில் காக்கை அ. திருவள்ளுவர். Atomic physics, அளவுள்ள இப்பறவை. குக்குலிபார்ம்ஸ் (cuculiformes) எனும் வரிசையிலுள்ள, குக்குலிடே (cuculidae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் அக்காக்குருவி எனப்படும் குக்கூ.க் களும் (cuckooS) குயில்களும் (koels) செம்போத்துப் பறவை எனப்படும் குரோஃபெசன்ட்டுகளும் (crow - phaesants) இடம் பெற்றுள்ளன. இந்தியக் குயிலுக்குக் காகத்தைவிட நீண்ட வாலுண்டு. ஆண்குயிலின் உடல் முழுதும் பளபளக்