பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/879

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயுரேரி 859

குயுரேரி 859 குயிலலகு எலும்பு முதுகு முள் எலும்பின் இறுதி நான்கு எலும்புகள் காக்சிக்ஸ் எலும்பு அல்லது குயிலகு எலும்பு எனப் படும். விலங்குகளில் காணப்படும் வால் பகுதி மனித னிடம் ஒரு தேவையில்லாப் பகுதியாகக் காணப் படும். இவ்வெலும்பால் பயன் எதுவும் இல்லை. கீழே விழும்போதும் எலும்பில் அடிபடும்போதும் இது உடைய நேரிடும். இதற்குத் தனி மருத்துவம் தேவையில்லை. புற்று நோய்களில் குத அறுவையில் இதை எடுத்துக் களைவதும் உண்டு. குத ஆய்வில் ஓர் அடையாளமாக உள்ள இந்த எலும்பு முறிவை ஆய்வு மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம். மா.ஜெ .ஃபிரடெரிக் ஜோசப் . கும் கருநிறம் காணப்படும். பெண் குயிலின் உடலின் மேற்பகுதியில் பழுப்பு வெண்மை நிறப் புள்ளிகளும், உடலின் கீழ்ப்பகுதியில் வெண்மை நிறமும் காணப் படும். மார்பிலும் வயிற்றிலும் கரும்பட்டைகள் உண்டு. இக்குயில்களின் அலகு வெளிர் பச்சை நிற முடையது. விழிப்படலம் சிவப்பாக இருக்கும். ஆண், பெண் குயில்களின் தோற்ற வேறுபாடு உணராதோர் ஆண் குயிலைக் கருங்குயில் என்றும், பெண் குயிலை வரிக்குயில் என்றும் வெவ்வேறு பெயர்களில் குறிப் பிடுவர். காடு மாந்தோப்பு, சோலை, சாலையோர மரங்கள் ஆகியவற்றிலும் மலைகளில் ஏறத்தாழ 1000 மீட்டர் உயரத்திலும் இலைகள் நிறைந்த மரங்களின் உச்சியிலும் குயில்கள் மறைந்து காணப் படும். இனப்பெருக்க காலமாகிய கோடை தவிர ஏனைய பருவகாலங்களில் அமைதியாக இருப்பதால் இதைக் கண்டறிவது இனப்பெருக்கக் கடினம். காலத்தில் காலையும், மாலையும் தொடர்ந்து கூவும். விடியற்காலத்தில் இதன் குரலே முதன் முதலில் சோலைகளிலிருந்து வெளிப்படும். இக்காலத்தில் மரத்திற்கு மரம் நிலையற்றுப் பறந்து செல்லும். ஆல், அத்தி மரங்களின் பழங்களையும், சந்தன மரம், பொன்னரளிகளின் கொட்டைகளையும் கம் பளிப் பூச்சி, சிறுபுழுக்கள், நத்தை, பிற சிறு பறவை களின் முட்டை ஆகியவற்றையும் உண்ணும். . குக்கூ..., குக்கூ .. குக்கூ....' என்று ஆறு ஏழு முறை தொடர்ந்து விரைவாக ஓர் ஆண் பறவை கூவ அதற்கு அதே குரலில் வேறொரு பறவை சற்றுத் தொலைவிலிருந்து பதில் தரும். பெண் குயில்கள் இனிமையற்ற குரலொலிகளை எழுப்பும். இவை கூடு கட்டுவதில்லை. அண்டங்காக்கை, காக்கைகளின் கூடுகளில் முட்டைகளை இடுவதால் குயிலைக் கூடு ஒட்டுண்ணி என்று குறிப்பிடுவர். கோவி. இராமசுவாமி குயுரேரி இது முற்காலத்தில் தென் அமெரிக்காவில் அம்புமுனை நச்சாக வேடர்களால் பயன்படுத்தப்பட்டது. இவ் வகை அம்பைப் பயன்படுத்திக் கொன்ற விலங்கை உண்பதால் மனிதருக்குத் தீங்கு எதுவும் நேர்வ தில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். தற்போது மருந்தாகப் பயன்படுவது குயுரேரியி விருந்து (curare) பிரித்தெடுக்கப்பட்ட அல்கலாய்டு ஆகிய டியுபோகுயுரேரின் ஆகும். இம்மருந்து ஒரு திறன் வாய்ந்த இயக்குதசைத் தளர்த்தியாகும். பொட்டாசிய இயங்கும் முறை. தசையும், நரம்பும் சந்திக்கும் இடத்தில் தசைச் சவ்வில் இயக்க நரம்பின் முடியும் தட்டு (motor end plate) என்னும் ஒரு சிறப்புப் பகுதி உள்ளது. நரம்பு நுனிகளிலிருந்து அசெட்டைல் கோலின் வெளியிடப்பட்டதும் இது இயக்க நரம்பு முடியும் தட்டின் ஏற்பிகளில் இயங்கி, சோடிய அயனி கள் உட்புகுவதையும், அயணிகள் வெளியேறுவதையும் ஊக்குளிக்கிறது. இப்போது இயக்க நரம்பு முடியும் தட்டு, துருவ நிலை மாற்றப் பட்டதாக (depolarizcd) உள்ளது. அசெட்டைல் கோலின் வெளியிடப்பட்ட ஒரு சில நொடிகளில் கோலினெஸ்ட்டரேஸ் நொதியால் செயலற்ற கோலின் மற்றும் அசெட்டிக் அமிலமாக ஆக்கச் சிதை மாற்றம் அடைகிறது. தசைச் செல் சவ்வு சோடிய அயனிகள் உட்புகுவதைத் தடுக்கும் தன் பழைய நிலையை மீண்டும் அடைகிறது. இது துருவ நிலை முன் நிலை அடைதல் (repolarization) எனப்படும். இதில் டியுபோகுயுரேரின் துருவ நிலையை மாற்றியமைக்காத தடுப்பு (non-depolarizing block)