68 கன்று வீச்சு நோய்
68 கன்று வீச்சு நோய் தவிர்க்கலாம். மேலும் கன்றுகளை இளம் வயதிலேயே தாயிடமிருந்து பிரித்து வளர்ப்பதால் பிறப்பின் போதோ வேறு ஏதேனும் நோய்கண்டோ தாய்ப்பசு இறந்து போதல் தாய்ப்பசு நோய்வாய்பட்டிருத்தல் போன்ற சமயங்களில் எழும் சிக்கல்களைத் தவிர்க் கலாம். இவ்வாறு கன்றுகளைப் பிரித்துப் பால் தரும் போது அவை முதலில் பாலைக் குடிக்க மறுக்கும். எனவே தூய்மையான கையைப் பால் பாத்திரத்தில் வைத்து அதைக் கன்றுகள் சுவைக்குமாறு செய்ய வேண்டும். ஓரிரு நாளில் கன்றுகள் தாமாகவே பாலைக் குடிக்கப் பழகிக் கொள்ளும். இம் முறைக்குப் பெயில் ஃபீடிங் (pail feeding) என்று பெயர். கன்றுகள் வளர்க்கும் முறை. இளம் கன்றுகளில் ரூமன் (rumen) வளர்ந்து வேலை செய்யத் தொடங்க நீண்ட நாளாகும். எனவே கன்றுகளுக்குத் தேவை யான புரதம், வைட்டமின் போன்ற உயிர்ச் சத்துகளைத் தீவனத்தில் கொடுக்க வேண்டும். பிறந்த கன்றுகளில் முதல் மூன்று நாள்களுக்குச் சீம்பால் அளிக்கப்பட்ட பின் பால் பதிலிகளையோ (milk replacer) பால் மற்றும் சுன்றுத் தீவனத்தையோ அளிக்கவேண்டும். பசும்புல் பத்து நாள் ஆன இளம் கன்றுகள் மற்றும் உலர்தீவனப் புற்களைச் சிறிது சிறிதாகச் சாப்பிடத் தொடங்கும். இத்தகைய கன்றுகளுக்கு ஆறு முதல் ஏழு வாரங்கள் வரை கன்றுத் தீவனத் தைப் பாலுடன் சேர்த்து அளிக்கலாம். வளரும் கன்று களுக்குப் பாலுடன் பின்வரும் தானியக் கலவை களைத் தீவனமாக அளிக்கலாம். 40 பகுதி அரைக்கப் பட்ட கேழ்வரகு, 40 பகுதி அரைக்கப்பட்ட ஓட்ஸ், 18 பகுதி கோதுமைத் தவிடு, 1 பகுதி உப்பு, 1 பகுதி எலும்புத்தூள், 1 பகுதி நுண்ணுயிர் எதிர் மருந்துக் கலவை, 100-200 கிராம் சைலேஜ் கொண்ட தீவனத்தைத் தரலாம். புரதச்சத்து மிகுந்த அடர் தீவனக் கலவையை உடல் எடைக்குத் தகுந்தாற்போல் சுணக்கிட்டு அளிக்கவேண்டும். கன்றுகளுக்குத் தக்க உட பயிற்சியும் அளிக்கவேண்டும். ற் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு உலர் சக்கைத் தீவனம் மற்றும் பசுந்தீவனம் பெருமளவில் அளிக்கவேண்டும். தீவனக் இவற்றுடன் அடர் கலவையும் சைலேஜ் உலர்புல் ஆகியவையும் அளிக்கப்பட வேண்டும். பசுந்தீவனங்கள் முதிர்ச்சி இளம் தீவனமாக இருக்கவேண்டும். அடையாத கன்றுகளைத் தாக்கும் நோய்கள். சரியான பரா மரிப்பு இன்மையால் கீழ்க்காணும் நோய்கள் கன்று களைத் தாக்கும். அவை கொப்பூழ்க் கட்டி, குருட்டுத் தன்மை, வெள்ளைக்கழிச்சல், மலச்சிக்கல், இரத்தக் கழிச்சல், குடல் பூச்சிகள், தோல் நோய்கள், நிமோனியா போன்றவை. நோய்த் தடுப்பு முறைகள். கன்று பிறந்த ஏழாம் நாளில் குடல்பூச்சி மருந்து கொடுத்துக் குடல்புழு நீக்கம் செய்யவேண்டும். அதன்பின் ஆறாம் மாதம் வரை 21 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். 6 மாதத்திற்கு மேற்பட்ட சுன்றுகளில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்யவேண்டும். குடற்புழு நீக்கம் சாணத்தை அடிக்கடி ஆய்வுக்கு அனுப்பி, கால்நடை மருத்துவரின் உதவியுடன் தக்க மருந்துகள் தரவேண்டும். குளிர்காலத்தில் தரைகளில் ஈரமின்றிப் பார்த்துக் கொள்ளுதல், கொட்டில்களில் குளிர் காற்று வாராமல் தடுத்து இளம் சூடான சூழ்நிலையை உருவாக்குதல், ளம் சூடான நீரில் நுண்ணுயிர் எதிர் மருந்தைக் கலந்தளித்தல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் கன்றுகளில் நிமோனியா போன்றவற்றைத் தடுத்து இறப்புச் சதவீதத்தைக் குறைக்கலாம். இளம் கன்றுகளுக்கு. 1-3 மாத வயதிற்குள் கோமாரி நோய்த் தடுப்பூசி (F.M.D. vaccine) போட வேண்டும். ஊசிபோட்ட 21 நாளில் மறு தடுப்பூசி (booster dose) போடவேண்டும். ஆறு மாதமான கன்றுகளில் அடைப்பான் (anthrax), தொண்டை அடைப்பான், சப்பைநோய், வெக்கைநோய்த் தடுப் பூசிகள் போடுவதன் மூலம் இந்நோய்களிலிருந்து கன்றுகளைப் பாதுகாக்கலாம். கன்று வீச்சு நோய் ஆர். திருமூலன் இது புருசல்லா என்னும் நுண்ணுயிரியால் உண்டாகும் ஒரு கொடிய நோயாகும். கன்று வீச்சு நோய் (brucellosis) கால்நடைகளை மட்டுமல்லாமல் மனிதர்களையும் பாதிப்பதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்நுண்ணுயிரியை டேவிட் புருஸ் என்னும் அறிவியல் வல்லுநர் 1887 ஆம் ஆண்டு இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனித னுடைய மண்ணீரலிலிருந்து கண்டறிந்தார். எனவே, இவ்வகை நுண்ணுயிர்ப் பிரிவுக்குப் புருசல்லா என்ற பெயர் வழங்கலாயிற்று. அதன் பின்பு பசு வினங்களைத் தாக்கும் நுண்ணுயிரி புரு சல்லா அபார்ட்டஸ் என்றும், பன்றிகளைத் தாக்கும் இந்நுண்ணுயிரிக்குப் புருசல்லா சூயிஸ் என்றும், ஆட்டினத்தைத் தாக்கும் நுண்ணுயிரிக்குப் புருசல்லா ஒலிஸ் என்றும், நாய்களைத் தாக்கும் நுண்ணுயிரிக்குப் புருசல்லா கேனிஸ் என்றும் நுண்ணுயிர் ஆராய்ச்சி .