குரல் அடைப்பு 861
கின்றன. இவற்றின் சைவ உணவிற்கு ஏற்றவாறு பல் அமைப்பு உள்ளது. தாடைப்பற்களும், கடை வாய்ப் பற்களும் கடினமான காய்கறிகளை உண்ண வாய்ப்பாக அமைந்துள்ளன. குரங்குகள் பொதுவாக உணவைக் கைகளால் எடுத்தே உண்கின்றன. மிகுதி யான உணவை இவை உட்கொள்கின்றன. மக்காக்கா, பாபூன் போன்ற குரங்குகளின் தாடைப்பகுதியில் ஒரு பை போன்ற அமைப்பு உள்ளது. இது கிடைக்கும் உணவைக் சேமித்துப் பின்னர் அசைபோட உதவு கிறது. லங்கூர்கள் தாவரத்தை உண்டும், பாபூன் மக்காக்கா வகைக் குரங்கினங்கள் அனைத்து வகை உணவுகளைத் தின்றும் வாழ்கின்றன. லெமூர்கள் இருட்டில் இருந்து கொண்டே இரையைத் தேடு கின்றன. ஆனால் குரங்குகளும் வாலில்லாக் குரங்கு களும் பகலில் மட்டுமே இரை தேடுகின்றன. இவை பொதுவாக மரங்களில் அமர்ந்து கொண்டே உணவை உட்கொள்கின்றன. மலைப் பொதுவாக. குரங்குகள் அனைத்து வனவிலங்கு களுடனும் ஒத்துப்போகின்றன. அவற்றின் முதல்எதிரி மனிதனே ஆவான். ஆனால் சிறுத்தை சில நேரங்களில் மறைந்திருந்து குரங்குகளின்மேல் திடீர்த் தாக்குதல் நடத்திக் குரங்குகளைக் கொல்கிறது. திடீரென்று சிறுத்தை எழுப்பும் ஒலியே குரங்குகளை மரக்கிளை களில் இருந்து விழ வைத்து விடும். சில குரங்குகள் இடி ஓசையிலும் இறந்து விடும்; சில பாம்புகளாலும் மரணமடைகின்றன. நீர் அருந்தச் செல்கையில் முதலைகள் சிலகுரங்குகளை விழுங்கிவிடு கின்றன. ஆனால் இவற்றில் இருந்து பிழைக்க. குரங்குகள் சில தகவமைப்புகளையும் பெற்றுள்ளன. நுட்பமான செவி, பழுதில்லாப் பார்வை இவற்றின் உதவியால் எதிரிகளிடமிருந்து இவை தப்புகின்றன. மரக்கிளைகளிலும், இலைகளின் அடர்த்தியிலும் மறைந்திருந்து எதிரிகளின் கண்களுக்கு எட்டாமல் வாழ்கின்றன. பிற பொதுவாக வாலில்லாக் குரங்குகள், கூட்ட மாகச் சேர்ந்தே வாழ்கின்றன. ஒரு குரங்கு தாக்கப் படும்போது குரங்கு அனைத்தும் கூட்டமாகச் சேர்ந்து எதிர்க்கின்றன. தாக்கப்பட்ட குரங்குக்குப் குரங்குகள் முதலுதவி செய்கின்றன. சிறுத்தை, புலி போன்ற விலங்குகளைக் குரங்குகள் பார்க்கும்போது. குறிப்பாக லங்கூர் மற்றும் மக்காக்காக்களைப் பார்க்கும்போது எச்சரிக்கை ஒலி எழுப்புகின்றன. இவ்வகை ஒலியைக் கொண்டு வேடர்கள் புலியின் இருப்பிடத்தை எளிதில் கண்டு கொள்வர். பல குரங்கு களிலும், மனிதக்குரங்குகளிலும் கோரைப்பற்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. இப்பற்கள் ஆண் குரங்குகளில் மிகை வளர்ச்சி பெற்றுக் காணப்படு கின்றன. ஒரு பெண் குரங்கோடு ஆண் குரங்கு இனப் பெருக்கத்திற்காக இணையும்போது, ஆண் குரங்கு களுக்கிடையே போட்டி வரும். அப்போது வரும் சண்டையில் வெற்றி பெற இப்பல் தேவைப்படுகிறது. குரல் அடைப்பு 861 வை ஈனு குரங்குகள் ஒலி எழுப்பியே செய்தியைப் பரப்பு கின்றன. அவை எழுப்பும் ஒலி சினம், மகிழ்ச்சி, அச்சம் போன்றவற்றை வெளிப்படுத்தும். முகமே சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆண்டின் எந்தக் காலத்திலும் இனப்பெருக்கம் நடக்கலாம். பொதுவாக வாலில்லாக் குரங்குகளும், குரங்குகளும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குரங்கு களோடு உறவு கொண்டே வாழ்கின்றன. பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியைத்தான் கின்றன; ஆனால் சிலநேரத்தில் இரட்டைக் குட்டி களையும் ஈனுகின்றன. பிறந்தது முதல் குட்டிகள் தாயின் உடலோடு ஒட்டிக் கொண்டும் தாயின் மார்பகத்தையும் அடிவயிற்றையும் தம்முடைய கை, கால்களால் பிடித்துக் கொண்டும் பாதுகாப்பாக உள்ளன. நீண்ட வால் லெமூர் தன்னுடைய வாலின் உதவியால் குட்டியைத் தன்னுடைய அடிவயிற்றில் கட்டிக்கொள்கிறது. எனவே குட்டிகள் தாயை விட்டுப் பிரிந்து இருப்பதே இல்லை. கிப்பன் எனப் படும் குரங்குகள் தம்முடைய குட்டியை ரண்டு வயது ஆகும் வரை தன் உடலோடு இணைத்தே வைத்துள்ளன. இக்குட்டிகள் இரண்டு வயதுவரை தாய்ப்பால் தவிர எதையுமே உண்பதில்லை. நன்கு வளர்ச்சியடைந்த குரங்குகள், கூட்டமாக இரை தேடுகின்றன. காண்க. திப்பன். குரங்கு மனிதன் காண்க; மனிதக் குரங்கு குரல் அடைப்பு வ.சந்திரமோகன் குரல்வளையிலிருந்து தோன்றுகிற ஒலி, முழுதும் ஒலியின்றியோ ஒளியில் மாற்றம் ஏற்பட்டு மிக மென்மையாகவோ கரசுரப்பாகவோ தோன்றலாம். இதற்கு, குரல் நாண்களின் ஒழுங்கான விறைப்புத் தன்மையும் அவற்றின் அசையும் தன்மையும் பாதிக்கப் பட்டுள்ளமையே முக்கிய காரணம். தீவிரக் குரல் வளை அழற்சி, குரல்வளைக் காசநோய், குரல் நாண் களிடையே எலும்பு, பொத்தான், ஊக்குப் போன்ற வேற்றுப் பொருள் சிக்கியிருத்தல் ஆகியவை குழந்தை களிடையே காணப்படும் குரல் அடைப்புக்கு (aphonia) முக்கிய காரணங்கள் ஆகும். . . மிகுதியும் உணர்ச்சி வயப்படும் பெண்களுக்குக் குரல்வளை அழற்சியின்போது முதலில் குரல் ஒலி கரகரப்பாக மாறி, பிறகு ஒலியே முழுதும் குறைந்து விடும். இது ஒரு வகை மனநோய். .