பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/882

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 குரல்‌ நடுக்கம்‌

862 குரல் நடுக்கம் குரல்வளையில் நோயே இல்லாத நிலையில் சில பெண்களுக்கும், விருப்பமற்ற சூழ்நிலையில் பள்ளி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் மனச் சஞ்சலம் காரணமாகத் திடீரென ஒலி முழுமை யாக இல்லாமற் போய்விடும். ஆய்வில் காணும்போது குரல் நாண்கள் சரியாக அசையாதிருக்கலாம். ஆனால், இருமும்போது அனைத்து அசைவுகளும் சரியாக இருக்கும், திடீரெனக் குரல் ஒலி போனது போல், திடீரெனத் திரும்பவும் குரல் ஒலி சரியாகி விடும். இதற்கு மனநோய் மருத்துவரின் அறிவுரை தேவை. குரல் நடுக்கம் டி.எம். பரமேஸ்வரன் குழந்தைகளின் குரல்வளை சிறியது. நிணநீர் அதிக முடையது; தசையும் நரம்பும் எளிதில் தூண்டப்படு வன; ஆகவே சிறிதே குரல்வளை அழற்சி தோன்றி னாலும் தாக்கம் மிகையாகும். வைரஸ் நுண்ணுயிர் நோயால் அழற்சி வரலாம். முதலில் சிறு தொண் டைப் புண்ணாகத் தோன்றிப் பின்னர் இருமல், காய்ச்சலுடன் குரல் கம்மிவிடும். இருமினாலும் சளியை வெளியேற்றக் குழந்தைக்குத் தெரியாது. விரைவில் குரல் நாண்கள் சிவந்து, வீங்கி, சுவாசிப் பதில் மிகவும் கடினம் தோன்றும். குரல் நாண்களில் இசிவு ஏற்பட்டுக் காற்று உள்ளே வரவும் வெளியே றவும் முடியாமல் குழந்தை துன்பப்படும். சுவாசிக்கும் போதெல்லாம் கழுத்திலும் மார்பிலும் குழியாகத் தோன்றும். தொண்டை அடைப்பான் நோயா அல்லது குரல் வளையில் வேற்றுப்பொருள் சிக்கி யுள்ளதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். குரல் நடுக்கம் (laryngismus stridulosa) காய்ச்சலில்லாமலேயே ஏறத்தாழ 4-10 குழந்தையிடம் தோன்றும். வயதுக் சத்துணவில்லாத, உடல் நலம் குன்றிய. வைட்டமின் சத்துக் குறைந்த குழந்தைகளிடம் இதைப் பெரும்பான்மையாகக் காணலாம். இரத் தத்தில் கால்சியம் குறைந்திருப்பதால் குரல் நாண்கள் இசிவு அடைகின்றன. இதற்குக் கால்சியமும் வைட்டமின் D யும் குறைவே காரணம். குரல்வளை விறைப்பின்றித் தொய்வாக இருந்தாலும் குரல் நாண்கள் உள்ளே உறிஞ்சப்படுவதாலும் குரல் நடுக்கம் வரலாம். நன்றாகத் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று காகம் கத்துவதைப் போன்ற ஒலியுடன் மூச்சுத்திணறலுடன் எழுந்து உட்கார்ந்து துன்பப்படும். உடல் நீலமாக மாறும்; கை,கால், விரல்கள் விறைத்து நிற்கும். முதல் உதவியாக முகத்தில் குளிர்ந்த நீரை நன்கு தெளித்து நாக்கை வெளியே இழுத்து உடலெங்கும் நன்றாகத் விட வேண்டும். குரல் நாண் தடவி 3 டி.எம். பரமேஸ்வரன் . குரல்வளையின் உட்பகுதியைக் குரல்வளை அறை எனலாம். அதன் இரு பக்கச் சுவர்களிலும் படுக்கைத் தளத்தில் இரண்டு மடிப்புகள் உள்ளன. இவை தைராய்டு குருத்தெலும்பின் உள்ளே இருப்பவை. இரண்டு மடிப்புகளுள் மேல் மடிப்பு போலி நாண். கீழ்மடிப்பு குரல் நாண். குரல்வளையை மேலிருந்து உள்ளே பார்க்கும்போது ஒரு வட்டக்குழாயின் இரு பக்கங்களிலிருந்து இரண்டு மடிப்புகள் ஒன்றின் கீழ் ஒன்றாக இருப்பதைக் காணலாம். கீழ் மடிப்பான குரல் நாண் போலி நாணை விட அதிகமாக உள்ளே புடைத்திருக்கும். ஆகவே, குரல்வளையின் உள்ளே வலம். இடம் என இரு போலி நாண்களும் அவற்றின் கீழே வலம். டம் என இரு குரல்நாண்களும் உள்ளன. குரல் நாண்கள் தைராய்டு குருத்தெலும்பின் நடுப்பகுதியில் உள்ளன. குருத்தெலும்பின் முன் மடிப்பின் உட்பகுதியில் குரல் நாண் முனை ள்ளது. இரு குரல் நாண்களின் முன் முனை இதில் ணைந்திருக்கும். குரல் நாண்களின் பின் முனைகள் தனியாகப் பிரிந்திருக்கும். அரிட்னாய்டு குருத் தெலும்புத் தசைகளின் செயலால் குரல்நாண்களின் பின் முனைகள் ஒன்றை ஒன்று நெருங்கவும் விலக வும் முடியும். சுவாசம் இருக்கும்போது இரு நாண் களுக்கும் இடையே;\போன்ற இடைவெளி இருக்கும். இரு நாண்களும் நெருங்கி விறைப்புடன் அதிரும் போது குரல் எழுகிறது. பேசும்போது வெளிவிடும் மூச்சுக் காற்றின் அழுத்தம் இதற்கு உதவுகிறது. கடின வேலை செய்ய அல்லது பளு தூக்க மூச்சை அடக்குவது இயல்பு. அப்போது குரல் நாண்கள் நெருங்கி ணைந்து காற்று வெளியே செல்லாமல் இருக்க உதவுகின்றன. குரல் நாண்களின் இருப்பிடத்தை வைத்துக் குரல்வளை அறையை நாண்மேற்பகுதி, நாண் பகுதி. நாண் கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக் கலாம். போலி நாண்களுக்குக் குரல் எழுப்புவதில் பங்கு இல்லை. ஆனால் பழக்கத்தால் குரலை மாற்ற முயன்று, நடிகர், வணிகர் ஆகியோர் போலி நாண்கள் மூலமும் குரல் எழுப்புவர். அந்த ஒலி கடினமாகவும் கரகரப்பாகவும் இருக்கும். உண்டாகும். இனியகுரல், குரல்நாண்களில்தான் குரல்நாண்கள் நெருங்கிக்