864 குரல்முறைத் தொடுப்பி
864 குரல்முறைத் தொடுப்பி நொடிக்குப் பத்திற்குக் குறையாமல் அவை வேறுபடல் ஆகியவை இதன் காரணிகளாகும். சராசரி மனிதன் பேசும் வேகம் நிமிடத்திற்கு 150 சொற்கள் ஆகும். எளிய முறைகளில் 100 ஹெர்ட்ஸ் அலை வரிசை களில் இது செலுத்தப்பட இயலும். பேச்சு ஒலியை உணர்ந்து கொள்ளும் குரல்முறைத் தொடுப்பி இத்தகைய அலைவெண் வரிசையில் எளிதில் செயல் படும். அலைவெண் வரிசையில் எஞ்சியதைக் கணக்கில் கொண்டாலும் எளிய தொலைபேசிப் பயனீடுகளில் குரல்முறைத் தொடுப்பி சிக்கனமானதன்று. ஏனெ னில் இது விலை மிக்கது. அகல அலை வரிசைகள், குறிப்பாகத் துடிப்புக் குறிப்புச் செலுத்தல் வளர்ச்சி பெற்ற பின்னர் அவ்வலைவரிசையின் செலவு குறைந்து விட்டது. மேலும் குரல்முறைத் தொடுப்பி திரிபுகளை உருவாக்குகிறது. பகுப்பாய்விலிருந்து குரல்முறைத் தொடுப்பியின் பேச்சு நியமம் (standard) காது கேட்கக் கூடிய வேகத்திற்குக் கீழ்ப்பட்டதே ஆகும். கேளாத வேகம் பேச்சு நியமங்களைப் புரியாததாக்குகிறது. பேச்சு உற்பத்தி, தோற்றம், செலுத்தலின் அனைத்துக் காரணிகளையும் இத்தொடுப்பி பிரித்துக் கட்டுப் படுத்துகிறது. ஆற்றல் மூலத்தின் வகைகள், ஆற்றல், அழுத்தம், உச்சம் (pitch), உள்விவகல், காலம் இவற்றின் மாறுபாட்டு விகிதம், பேச்சின் தோற்றம், உருவாக்கியின் விளைவு ஆகியவை இதில் அடங்கும். பேச்சின் அனைத்துக் கூறுகளையும் படிக்கவும் புரிந்து கொள்ளவும் புதிய திறன் வாய்ந்த முறைகள் அளிக்கப்படுகின்றன. இம்முறைகள் ஆய்வு, கல்வி, பொழுதுபோக்கு, உச்சரிப்பு, பேச்சியல், மொழி, உளவியல், உடலியல், மருந்தியல் ஆகிய துறை களிலும் ஏனைய பேச்சுத் துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன. தொடுப்பி, பேச்சைக், பேச்சுக் குறிப் பாக மாற்றவும், பின்னர் அக்குறிப்புகளைப் பேச்சாக மாற்றவும் நடைபெறும் இரு கட்டச் செயல்பாட்டுப் பண்பு கொண்டது. தொடுப்பியின் கோட்பாடு மட்டுமே இந்தப் பகுப்புத் தொகுப்புச் செயல் முறைகளில் தனித்தோ, இணைந்தோ உட்படுகிறது. குரல் தொடுப்பிப் பகுப்பாய்வியுடன் ஒரு சிறந்த கருவி உருவாக்கப்பட்டு இணைந்து செயல்படுத்தப் பட்டால், தொலைபேசியின் எண்வட்டு (dial), குரல் தட்டச்சு மற்றும் அனைத்துக் குரல் கட்டுப்பாட்டுத் தானியங்கும் கருவிகளின் இயக்கத்தையும் அறிய உதவும். ஓடர் என்னும் அக்கருவி 1939 இல் நியூயார்க்கிலும் சான்ஃபிரான்சிஸ்கோவிலும் வாக்கப்பட்டது. பயிற்சி பெற்ற தொலைபேசி இயக்கு நர்கள் சாவிகளை அமுக்கி, கேட்கக்கூடிய பேச்சை உருவாக்கினர். தானியங்கு குரல் கட்டுப்பாட்டி னால், தொழில் நுட்பத்தில் மற்றுமொரு முன் னேற்றத்தை உருவாக்கலாம். உரு குறியீட்டுச் செய்தி முறை (coding). இது செய்தி செலுத்தும் பொறியாளர் மூலச் செய்தியின் குறிப்பு வடிவை மாற்றி, செய்தி செலுத்தலைக் குறிக்கும், ஒரு மனிதனின் பேச்சில் இத்தகைய மாறுதல் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. இது இயல்பாக வருவது. ஒரு பேச்சாளர் ஒரு கருத்தை, கேட்போரின் மனதில் பதிய வைக்க விரும்புவதாகக் கொள்ளலாம். குறியீட்டுச் செய்தி முறையில் மொழி மாற்றம், ஒப்பு மின்னழுத்த அளலியின் சாவிகள் இடப்புறம் ☐ ☐ ☐ ☐ ☐ வலப்புறம் உச்சக்கட்டை A உச்சம் ஆற்றலூட்டும் கட்டுப்பாடுகள் தொகுப்பி A வடிப்பான் மற்றும் காணிகள் தேர்ந்தெடுப்பி இரைச்சல் சீறொலி ஒலி ஓட்டம் வடிப்பான் மற்றும் பண்பேற்றிகள் தொகுக்கப்பட்ட பேச்சு படம் 2. தொடுப்பித் தொகுப்பியுடன் அமைக்கப்பட்ட குரல்முறைத் தொடுப்பியின் திட்டப்படம்