குரவை மீன்கள் 869
ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். உடனே ஒரு சிறு குழாயைக் குழந்தையின் குரல்வளையினுள் இரு நாண்களுக்குமிடை யே செலுத்தி அங்கேயே வைப்ப தால் குரல்வளைச் சுருக்கத்தால் ஏற்படும் கடினத்தைத் தவிர்க்க முடியும். குழாயை வெளியே வெளியே எளிதாக எடுக்க அதில் சிறு கயிறு கட்டப்பட்டிருக் கும். குழாயை 24 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக் கக்கூடாது. ஏனெனில் நாண்களில் புண் உண்டாகி விடும். தேவையானால் மூச்சுக்குழலில் கீறல் அறுவை செய்து உடனேயே குழாயை எடுத்துவிடலாம். இருமல் அல்லது வாந்தியின்போது குழாய் வந்துவிட வாய்ப்புண்டு; குழந்தை அறியாமல் கயிற்றைப் பிடித்து இழுத்துவிடும் வாய்ப்பும் உண்டு. ஆசுவே கவனமாக இருக்க வேண்டும். இது மூச்சுக் குழல் கீறல் அறுவைக்கு நேரம் அல்லது வசதி இல்லாதபோது செய்யக்கூடிய அவசர முயற்சி யாகும். குரலின்மை டி.எம். பரமேஸ்வரன் குரல் என்பது தொண்டையினின்று எழும் ஒலி. இந்த ஒலியை உண்டாக்குவது குரல்வளையாகும். நாக்குப் போன்ற வடிவமுடைய குரல் நாண்கள் (Vocal cords) என்னும் இரண்டு சிறிய அமைப்புகள் உள்ளன. குரல் எழுப்ப முயலும் போது இவை அசைந்து பிரிவதால் தொண்டையினின்றும் ஒலி எழுகிறது. மூச்சை உள்வாங்கி இழுக்கும்போது இவை இரண்டும் பிரிகின்றன. இவை இவ்வாறு பிரியாவிட்டால், உள் வாங்கும் மூச்சுத் திண்றல் (inspiratory stridor) ஏற் படும். இந்த இரண்டு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று செயலற்றுப் போனாலும் குரல் கரகரப்பாகவும் குறைவான ஒலியோடும் வெளி வரும். இரண்டுமே முழுமையாகச் செயலற்றுப் போகும்போதுதான் முழுமையான குரலின்மை (aphonia) ஏற்படுகிறது. அப்போது நோயாளிகளால் எதுவுமே பேச முடிவ தில்லை. வாய் அசைந்து சொற்கள் உச்சரிக்கப்படும். ஆனால் குரல் எழாது; நல்ல ஒலியும் கேட்காது. அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது ரகசிய குரலில் பேசுவது போலத் தோன்றும். குரலின்மையை, பழக்கவழக்கத்தால் ஏற்படு பவை, நோயால் ஏற்படுபவை என இரண்டு வகை யாகப் பிரிக்கலாம். பழக்க வழக்கத்தால் ஏற்படுபவை. குரலின்மை இவ் வனகயில் முக்கியமாகத் தற்காலிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக நோய் என்று எதையும் காரணமாகக் குறிப்பிட யலாது. குரவை மீன்கள் 869 குரலை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்குக் குரல்வளை அதிகமாகவே வருந்திச் செயல் படு கிறது. எனவே இந்தத் தேய்வால் குரல் முதலில் அவர்களுக்குக் கரகரப்பாகிப் பின்னர், ஒலி எழுவ தில்லை. ரகசியம் பேசுவது போல் காற்றொலியால் வர்கள் பேசுவர். யாக குரல் வளைக்கு முழு ஓய்வு கொடுத்து அமைதி இருப்பார்களோயானால் சில நாளில் குர் லின்மை சரியாகிவிடும். இந்நிலை மேடைப் பேச் சாளர்களுக்கும், பாடகர்களுக்கும் அடிக்கடி ஏற்படும். சில மனநோய் வகைகளில் (hysteria) குரலின்மை நேரிடலாம். இவர்கள்.பிறர் சுவனம் தம்மீது திரும்ப வேண்டும் என்னும் நோக்கத்தோடு வேண்டுமென்றே குரலின்மை போல நடிப்பர். பிறகு, சாதாரண மன நிலைக்குத் திரும்பியவுடன் குரல் சரியாகிவிடும். நோயால் ஏற்படுபவை. இவ்வகைக் குரலின்மைக் குப் பல காரணங்கள் உண்டு, குரல்வளை பின்வரும் பல நோய்களால் தாக்கப்படும்போது, தற்காலிக மாகவோ, நிலையாகவோ குரலின்மை ஏற்படும். குரல்வளையைப் பாதிப்பவை நுண்ணுயிர்கள். மிகு நுண்ணுயிரிகள் ஆகியனவாகும். தொண்டை அடைப்பான் (diphtheria) நோயில் முக்கிய மான பாதிப்பே குரல்வளையில்தான் ஏற்படுகிறது. மேலும் குரல்வளை மூச்சுக்குழல் அழற்சி நோய், குரல்வளையில் சீழ்க்கட்டி, குரல்வளை நரம்புச் செய விழப்பு, இளம்பிள்ளை வாத நோயில் குரல் தசை களின் பாதிப்பு ஆகியவையும் ஏற்படும். . கட்டிகள். புற்றுநோய்க் கட்டிகள், புற்றுநோய் அல்லாத கட்டிகள் இவற்றாலும் தோன்றக்கூடும். குரல்வளையை நேரடியாகப் பாதிக்காமல், சில நேரங்களில் கட்டிகள், மூளையின் பத்தாம் நரம்பு களில் ஏதாவது ஒன்றை அழுத்துமாயின், குரல் வளைப் பாதிப்பு ஏற்பட்டு, குரலினின்றும் எழும்பும் ஒலி மூக்கினால் ஏற்படும் ஒலி போன்று கேட்கும். மூக்கின் பின்புறப் பகுதி சரியாக மூடிக் கொள்ளாமை யால் இவ்வகை ஒலி கேட்கிறது. சு.ராஜலட்சுமி நூலோதி. George Thorn, Harrisons Principles of Internal Medicine, 8th edition, Blakistan publi- cation, 1977. குரவை மீன்கள் இம்மீன்களின் தலை, பாம்பின் தலையொத்த வடிவத்தில் காணப்படுவதால் இவை பாம்புத் தலை