பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/893

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருசிஃபர்‌ 873

குரில் தீவுகள் குரில் தீவுகள் (kuril islands) ஒக்காட்ஸ் கடலைப் பசுபிக் பெருங்கடலிலிருந்து பிரிக்கின்றன. கம்சட்கா முந்நீரகத்தின் (kamchatka) தென்முனை முதல் ஹெகைடோவின் (ஐப்பான்) வடகிழக்குமுனை வரை 1,200 கி.மீ. இவை பரவியுள்ளன. தீவுத் தொடராகவுள்ள குரில் தீவுகள் கிழக்கு ரஷ்யாவிற்குத் தொலைவில் உள்ள சாக்காலின் பகுதியில் அமைந்துள்ளன. 56 தீவுகளின் பரப்பளவு ஏறத்தாழ 15,600 சதுரகிலோமீட்டர் ஆகும். இந்தத் தீவுத்தொடர் பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட புவிப் பொறியியல் மாற்றத்தால் உருவானதாகும். இத் தீவுகளில் ஏறத்தாழ 180 எரிமலைகள் (volcanoes) உள்ளன. அவற்றில் 38 எரிமலைகள் ன்றும் செயல் திறமுடையவையாக உள்ளன. நிலநடுக்கங்களும், ஒத அலைகளும் இத்தீவுகளில் அடிக்கடி ஏற்படுகின்றன. இத்தீவுத் தொடர்களுக்கு இணையாகப் பசுபிக் பெருங்கடலில் குரில் கம்சாட்கா அகழிகள் (kuril-kamchatka trench) உள்ளன. இந்த அகழிகளின் ஆழம் 10,542 மீட்டராகும். இத்தீவு களில் நிலவும் தட்பவெப்பநிலை குளிர்காலத்தில் பனி படர்ந்து மிகக்குளிராகவும், கோடைக்காலத்தில் ஓரளவு குளிர்ந்தும் காணப்படும். இத்தீவுகளின் தென்பகுதியில் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. மீன், நண்டு பிடித்தல் முக்கிய தொழிலாகக் கருதப் படுகிறது. பெரும் தீவான இட்டுருப்பிலுள்ள குரில்ஸ்க் (kurilsk) நகரமும், பரமசிரிலுள்ள செவெரோ குரில்ஸ்க் நகரமும் முக்கியமான சுற்றுலா மையங்களாகும். தென் தீவுகளில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. ஜப்பானியர்களுக்குச் சொந்த மான குரில்தீவுகள் 1945 ஆம் ஆண்டில் சோவியத் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்தீவுகளில் வாழ்ந்த ஜப்பானியர்கள் குடிபெயர்ந்த பின்னர் ரஷ்ய மக்கள் அங்குக்குடியேறினர். இத்தீவு அமைந் துள்ள இடம் 46°10′ வட அகலாங்கு, 152°00' கிழக்கு நெட்டாங்கு ஆகும். குருசிஃபர் ள B ம.அ. மோகன் பிராசிகேஸி (brassicaceae) அல்லது குருசிஃபரே (cruciferae) என்னும் இருவித்திலைத்தாவரக் குடும் பத்தைச் சேர்ந்த கடுகு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், டர்னிப் போன்ற தாவரங்கள் பொது து வாகக் குருசிஃபர் எனப்படுகின்றன, இக்குடும்பம் ஏறக்குறைய 350 பேரினங்களையும் 2500 சிற்றினங் களையும் கொண்டது. பரவலாக இக்குடும்பத் தாவரங்கள் உலகெங்கும் பரவியுள்ளன. இருப்பினும் குருசிஃபர் 873 மிதவெப்ப மண்டலத்திலும் குளிர் பகுதிகளிலும் இவை பயிர் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் சிற்றினங்கள் குறுஞ்செடிகளே. வை ஒரு பருவ அல்லது பல்பருவத் தாவரங்களாகக் காணப்படு கின்றன. வேர்கள் பொதுவாக ஆணிவேர்த் தொகுப்பு என்றாலும் முள்ளங்கி ( Caphanus sativus) டர்னிப் (Brassica rapa) முதலியவற்றில் ஆணிவேர் நன்கு பருத்துக் கிழங்கு போலிருக்கும். லைகள் மென் தூவிகளுடன் கொத்தாகவும், மாற்று இலையடுக் காகவும், இலையடிச் செதில்கள் இல்லாமலும், தனி யிலைகளாகவும் உள்ளன. எண்ணெய் தோன்றக் காரணமாக உள்ள நொதியான மைரோஸின் (myrosin) நிரம்பியுள்ள சுரப்பிச் செல்கள் இவற்றில் காணப்படுகின்றன. இக்குடும்பத் தாவரங்களில் உள்ள மலர்கள் ரெசீம் (raceme) அல்லது காரிம்ப் (corymb) வகையைச் சேர்ந்த மஞ்சரியில் அமைந்துள்ளன. மலர்கள் காம்புடையவை, பெரும்பாலும் பூவடிச் செதில் அற்றவை, ஆரச்சமச்சீரானவை. இருபால் பூக்களாக இருப்பதோடு உயர்மட்டச் சூலகத்துடன் நான்கங்கப் பூங்களாகவும் உள்ளன. புல்லிகள் நான்காகப் பிரிந்திருப்பதோடு இரு வட்டங்களில் அமைந்திருக்கும். உள்வட்டப் புல்லிகளிரண்டும் பெரும்பாலும் தேன் நிறைந்த பைகளை அடியில் பெற்றிருக்கும். புல்லிகள் அடுக்கிதழ் (imbricate) அமைலில் உள்ளன. அல்விகள் நான்கும் எதி ரெதிராகச் சிலுவை வடிவில் அமைந்திருப்பதாலேயே இவ்வினத்திற்குக் எனச் குருசிஃபெர் என்னும் பெயர் வந்தது. ஐபெரிஸ் அமாரா (Tberis amara) என்னும் காண்டிடஃப்ட் (candy tuft) தாவரத்தில் இரு அல்லி கள் மட்டும் பெரியவையாக இருப்பதால் மலர்கள் இருபக்கச் சமச்சீர் (zygomorphic) கொண்டவை சொல்லப்படுகிறது. ஆலிவிதை (lepidium) போன்றவற்றில் அல்லிகள் முழுமையாகக் படுவதில்லை. காப்ஸெல்லா பர்ஸா பாஸ்டோரிஸ் Rapsella bursapastoris) என்னும் சிற்றினத்தில் அல்லி களிடத்தில் மகரந்தக்கேசரங்கள் அமைந்துள்ளன. அல்லிகள் தொடு இதழ் ஒழுங்கிலோ அடுக்கிதழ் ஒழுங்கிலோ அமைந்திருக்கும். காணப் ஆறு மகரந்தக் கேசரங்கள் உண்டு. அவற்றில் உள் வட்டத்தைச் சேர்ந்த இரு கேசரங்கள் சிறியவை. வெளிவட்டத்தைச் சேர்ந்த நான்கு கேசரங்கள் நீண்டவை. மகரந்தப்பை இரண்டு அறைகளைக் கொண்டது (dithecous). சூலக வட்டம் இணைந்த இரு சூலிலைகளால் ஆனது. உயர்மட்டச் சூலகப் பை ஒரே ஒரு சூலக அறையைக் கொண்டது. சூல்கள் சுவர் ஒட்டிய சூலொட்டுடன் கூடியவை (parietal placentation). தொடக்க நிலையில் ஒரே அறையை மட்டுமே கொண்டிருக்கும். சூலகப் பையுள் போலிக் குறுக்குச் சுவர் (replum) உருவாவதால் முதிர்ந்த நிலையில் இரண்டு அறைகளுடன் சூலகப்பை காணப் படும்.