பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/896

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 குருத்தெலும்பு

876 குருத்தெலும்பு நுண்கதிர் நிழற்படங்களில் நீண்ட எலும்புகள் குறுகியும் அகன்றும் அவற்றின் வளரும் தட்டுகள் epiphyseal plate) தாறுமாறாகவும் காணப்படும். மேலும் கீழ்க்காலில் உள்ள இரண்டு எலும்பு களில் வெளிப்புறத்தில் உள்ள ஃபிபுலா (fibula) என்னும் எலும்பு, உள்புறத்தில் உள்ள டிபியா (tibia) என்னும் எலும்பை விட நீளமாகக் காணப்படும். கை, கால் விரல்களின் சிற்றெலும்பு களில் வளரும் தட்டுகளும் தாறுமாறாக இருக்கும். முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் ஓர் எலும்புக்கும் மற்றோர் எலும்புக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்திருக்கும். மருத்துவம் மூலம் இவற்றைச் சரி செய்ய எவ் வழியும் இல்லை. வளைந்த கால்களைச் சரி செய்ய எலும்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கலாம். நூலோதி சுவயம் ஜோதி John Macleod, Davidson's Principles and Practice of Medicine, 14th Edition, E. L. B. S, Churchill Livingstone, 1984. நாருடன் கூடிய குருத்தெலும்பு. இது சில மூட்டு களுக்குள் அமைந்துள்ள தட்டுப் போன்ற அமைப் பிலும் சில அசையா மூட்டுகளிலும் காணப்படும். இது மூட்டில் பங்குபெறும் எலும்பின் பரப்பை அதிகப்படுத்துவதற்கு உதவுவதோடு, உராய்வையும் குறைக்கிறது. இது நாளடைவில் எலும்பாக மாறு வதில்லை. இதில் வெள்ளை நார்கள் (collagen) கட்டுக்கட்டாகக் காணப்படும். அவற்றிற்கிடையில் இணையாகச் சில குருத்தெலும்புத் திசுக்கள் காணப்படும். நெகிழ் தன்மையுள்ள குருத்தெலும்பு. இவ்வகைக் குருத்தெலும்பு வெளிக்காது. குரல்வளை மூடி. (epiglottis) ஆகிய இடங்களில் காணப்படும். வும் நாருடன் கூடிய குருத்தெலும்பைப் போல நாள் டைவில் எலும்பாக மாறுவதில்லை. இதில் அடித் தளத்தில் வெள்ளை நார்களோடு நெகிழ் நார்களும் சேர்ந்து காணப்படுகின்றன. இதனால் இது நெகிழ் தன்மையுடன் கூடியதாகக் காணப்படுகிறது. நார் களுக்கிடையில் குருத்தெலும்புத் திசுக்கள் காணப் படுகின்றன. சுவயம் ஜோதி குருத்தெலும்பு இந்த எலும்பு அடர்த்தியான இணைப்புத் திசுக்களில் ஒருவகைப்படும். குருத்தெலும்பு (cartilage) வலிமை யும், வளையும் தன்மையும் பெற்றது. . திசுக்கள், காணப்படு குருத்தெலும்பு, குருத்தெலும்பு உறையால் மூடப் பட்டுள்ளது. இதில் குருத்தெலும்புத் அடித்தளத்தில் (matrix) பரவலாகக் கின்றன. இக் குருத்தெலும்புத் திசுக்கள் அமைந் துள்ள விதத்தைப் பொறுத்தும், அடித்தளத்தின் தன்மையைப் பொறுத்தும் இதை மூவகைப்படுத்த லாம். அவை; தெளிவான (பளிங்கு போன்ற) குருத் தெலும்பு (hyaline cartilage), நாருடன் கூடிய குருத் தெலும்பு (fibrous cartilage), நெகிழ் தன்மையுள்ள குருத்தெலும்பு (elastic cartilage) எனப்படும். தெளிவான குருத்தெலும்பு. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் எலும்புகள் கூடுமிடங்களில் (மூட்டுகளில்) காணப்படுகிறது. இது எலும்பின் முனைகளில் இருப்பதோடு, உராய்வையும் து நாளடைவில் எலும்பாக மாறி வளர் குறைக்கிறது. விடும் தன்மையுடையது. குருத்தெலும்புத் திசுக்கள் இதில் மிகுதியாக உள்ளன. வை இரண்டாகவோ. நான்காகவோ இணைந்து காணப்படும். இவற்றைச் சுற்றி ஒரு குறுகிய இடைவெளி (lacuna) இருக்கும். இதன் அடித்தளம் தெளிவாகக் காணப்படும். குருத்தெலும்பு மீன்கள் குருத்தெலும்பு மீன்களின் உடல் பக்கவாட்டில் அழுத் தப்பட்டுக் கதிர் வடிவமாகவோ முதுகுப்புற வயிற் றுப்புறம் பக்கவாட்டில் அழுத்தப்பட்டுத் தட்டு வடிவ மாசுவோ காணப்படுகிறது, இம்மீன்களுக்கு அமைந் துள்ள மத்திய ய இணை உறுப்புகள் துடுப்புகள் எனப்படும். நீந்தும்போது இவ்விரு மார்புத் துடுப்பு களும் மீனின் உடலை நீரில் உயர்த்துவதற்குப் பயன் படுகின்றன. ஆண் மீனின் இடுப்புத் துடுப்புக்களுக் கிடையில் பற்றிப் பிடிக்கும் இணை உறுப்புகள் (claspers) உள்ளன. பற்றிப்பிடிக்கும் உறுப்புகளால் ஆண்மீன் பெண் மீனை உடலுறவின்போது நன்கு பற்றிக் கொள்ளும். இம்மீன்களின் தோல் பிளெகாய்டு செதில்களைக் கொண்டுள்ளது. பிளெகாய்டு செதில்களின் சொர சொரப்பான முள்களாலும் கோழைச் சுரப்பிகளின் வழவழப்பான தன்மையாலும் இம்மீன்கள் எதிரிகளிட மிருந்து தப்புவதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற் றுள்ளன. குருத்தெலும்பு மீன்களின் உள் சட்டகம் முழுதும் குருத்தெலும்பாலேயே ஆனது. இதில் சுண்ணச் சத்தால் கடினப்படுத்தப்பட்ட பகுதிகள் இங்கும் அங்குமாகக் காணப்படினும் எலும்புப் பகுதி களே இல்லை. முள்ளெலும்புகள் முழுமையானவை யாகவும் தனிப்பட்டவையாகவும் காணப்படுகின் றன. முதுகு நாண் (notochord) நிலையானதாகவும்