பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/897

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்தெலும்பு மீன்‌கள் 877

உறுதியானதாகவும் காணப்படினும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. சிறுகுடலில் இம்மீன்களின் செரிமானமண்டலம் வயிற்றுப்புறப் பக்கமாக அமைந்துள்ள வாய்ப்பகுதியில் தொடங்கிப் பொதுப்புழையில் முடிகிறது. சுருள் வால்வுகள் உள்ளன. குருத்தெலும்பு மீன்களின் முச்சுமண்டலத்தில் 5-7 இணைச் செவுள்கள் உள்ளன. இச்செவுள்களுக்கு மூடிகளோ, உறைகளோ இல்லை, ம் இல்லை. இதயத்தில் என காற்றுப் பைகளு மேலறை, கீழறை இரண்டு அறைகளே உள்ளன. இதயத்துடன் சிரைக்குடா ஒருபுறமும், கூம்புத்தமனி மறுபுறமும் இணைந்துள்ளன. இதயத் தில் தூய்மையற்ற இரத்தம் காணப்படுகிறது. 5-7 தமனி வளைவுகள் உள்ளன. இரத்தச் சிவப்புச் செல்கள் நீள் உருளை வடிவமாகவும் நியூக்லியசுட னும் காணப்படுகின்றன. சிரைமண்டலத்தில் கல்லீரல் போர்ட்டல் மண்டலமும் சிறுநீரகப் போர்ட்டல் மண்டலமும் காணப்படுகின்றன. வளர்ச்சி மூளைப் பகுதியில் நுகர் இதழ்களும் சிறு மூளைப்பகுதியும் மிகப்பெரிய அளவில் யுற்றுக் காணப்படுகின்றன. பத்து இணை நரம்புகள் உள்ளன. மருங்குக் கோட்டு உறுப்புகள் நன்முறையில் வளர்ச்சியுற்றுள்ளன. சிறு நீரகங்கள் இடைநிலை வகையைச் சார்ந்தன. மூளை உணர்ச்சி ஆண் பெண் இனங்கள் தனித்தனியே காணப் படுகின்றன. இனப்பெருக்க உறுப்புகள் இணையாக உள்ளன. அவற்றின் நாளங்கள் பொதுப்புரை ழயில் திறக்கின்றன. அகக்கருவுறுதல் நடைபெறுகிறது. சில முட்டையிடும் தன்மை உடையவை, சில குட்டிப் போடும் வகையைச் சார்ந்தவை. குட்டிப்போடும் இனங்களில் தாய்சேய் இணைத்திசு வளர்ச்சியுற்று குட்டியைப் பேண உதவும். உடலின் வெப்பம் சூழ் நிலைக்கேற்ப மாறும் தன்மையுடையதால் இவை குளிர் இரத்த உயிரிகளாகும். பெரும்பாலான குருத்தெலும்பு மீன்கள் கடல் நீரில் வசிக்கின்றன. ஒரு சில இனங்கள் வெப்ப குருத்தெலும்பு மீன்கள் 877 மண்டல ஆறுகளில் வசிக்கின்றன. இவை ஏனைய சிறு உயிரிகளைப் பிடித்து உட்கொள்கின்றன. காற்றுப் பட்டைகள் இல்லாமையால் உடல் மிகவும் பளுவாக உள்ளது. திமிங்கலங்களை அடுத்துச் சுறா மீன்கள் ஏறத்தாழ 12-15 மீட்டர் நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன. ஏறத்தாழ 9 மீட்டர் நீளமுள்ள கார்க்காரோடன் (carcharodon) என்னும் சுறாமீன் கடலில் மனிதர்களையும் பெரிய கப்பல்களையும் ஈர தாக்கும் தன்மையுடையது. இச்சுறாமீனின் மொத்த உடல் எடையில் ஏறத்தாழ 20% அதனுடைய லின் எடையாகும். இவ்வகைக் குருத்தெலும்பு மீன் களில் ஏறக்குறைய 3000 சிறப்பினங்கள் உள்ளன. எ.டு: ஹெப்டிராங்கியாஸ் (heptranchias), சைலியோ ரைனஸ்கேனிகுலஸ் (scylliorhinous caniculus), ஸ்பைர் னாபிளாக்கி (sphyrna blochii), பிரிஸ்ட்டிஸ் (pristis). ரைனோபேட்டஸ் (rhinobatus). டார்பிடோ (tor- pido), டிரைகான் (trygon), மைலியோ பேட்டிஸ் (myliobatis). ஹெப்டிராங்கியாஸ். இதைப் பொதுவாக ஏழு செவுள் அல்லது சீப்புப்பல் சுறாமீன் என்பர். அட் லாண்டிக் பெருங்கடல் மத்திய கடல் ஆகிய பகுதி களில் இம்மீன் காணப்படுகிறது. ஏறக்குறைய 2 மீட்டர் நீளம் வளரக்கூடியது. தாய்சேய் இணைத்திசு வளர்ச்சியுறாமல் குட்டிப்போடும் மீனினம் ஆகும். சைலியோரைனஸ் கேனிகுலஸ். இது ஐரோப்பியப் புள்ளிச் சுறாமீன் எனப்படும். ஐரோப்பாவின் கடற் கரைப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாகச் காணப் படும். கூர்மைத்திறனுள்ள நுகர்ச்சி உறுப்புகளால் இரையைத் தேடிப் பிடிக்கும் இம்மீன்களை நாய் மீன்கள் (dog fish) என்றும் குறிப்பிடுவர். இம் மீன்கள் முட்டையிடும் தன்மையுடையலை. இவற் றின் இறைச்சி மலைசால்மன் (rock solmon) எனப் படும். ஸ்பைனாபிளாக்கி. இதன் தலைப்பகுதி சுத்தி இருப்பதால் இதைச் சுத்தித்தலைச் hammer - headed shark) என்பர். வடிவத்தில் சுறாமீன் வகைப்பாடு குருத்தெலும்பு மீன்கள் துணைவகை 1. செலாச்சி (selachii) வரிசை 1. புளுரோடிரிமேட்டா உடல் பக்கவாட்டில் அழுத்தப்பட்டுக் கதிர் வடிவமாக உள்ளது. துணைவகை 2. ஹாலோசெஃபாலி (Holocephali) எ.கா. கைமேரா வரிசை 2. ஹைப்போடிரிமேட்டா உடல் முதுகுப்புற வயிற்றுப்புறப் பக்கவாட்டில் அழுத்தப்பட்டுத் தட்டு வடிவமாகவுள்ளது.