பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கன்று வீச்சு நோய்‌

70 கன்று வீச்சு நோய் கால் வெண்படலம் ஆகிய உறுப்புகளின் மூலம் நடைகளின் உடலில் புகுந்து முதலில் அருகிலுள்ள நிணநீர்ச் சுரப்பியை அடைகின்றன. பின்புமண்ணீரல் மற்றும் பால் மடியின் அருகிலுள்ள பால் மடி நிணநீர்ச் சுரப்பிகளை அடைகின்றன. இவ்விடத்திலிருந்து இந்நுண்ணுயிரிகள் ஏனைய இடங்களுக்கும் பரவுகின் றன. வயது வந்த சினையடையாத கால்நடைக களில் இந்நுண்ணுயிரிகள் பால் மடியில் சிலகாலம் தங்கி யிருந்து பின் சினையுற்றவுடன் கருப்பையைச் சென்று அடைகின்றன. எரிதிரிட்டால் என்னும் ஒரு வகைச் சர்க்கரைப்பொருள் கருவுற்ற கருப்பையில் மிகுதியாக உள்ளது. இந்தச் சர்க்கரைப் பொருள் பெருமளவில் உள்ளமையால் புருசல்லா உயிரிகள் மிகவும் அதிக அளவில் பெருக்கமடைகின்றன. மிகுதியாகப் பெருகிவிட்ட புருசல்லா நுண்ணுயிரிகள் கருப்பையில் வளரும் கருவையும் கருப்பையையும் இணைக்கும் தொடர்பைத் துண்டித்துக் வீச்சைச் சினைப் பருவத்தின் இறுதி மாதங்களில் ஏற்படுத்திவிடுகின்றன. இதுவே வீச்சு நோயை உண்டாக்கும் புருசல்லா நுண்ணுயிரி களின் வாழ்க்கைச் சுழற்சியாகும். கன்று மூன்று கன்று கால்நடைகளில் நோயின் அறிகுறிகள். இந்நோ யால் பாதிக்கப்பட்ட நோய்த்தடுப்பு ஆற்றல் இல்லாக் கால்நடைகள் கருவுற்ற ஐந்தாம் மாதத்திலேயே கன்றினை இழந்து விடும். இதைத் தொடர்ந்து கன்று வீசப்பட்ட பசுக்களின் நச்சுக்கொடி உதிராமல் தங்கிக் கருப்பையைப் பாதிக்கும். இதன் விளைவாகக் கருப்பை சீழ்பிடித்து மலட்டுத்தன்மை, பலமுறை கருவூட்டல் செய்தும் சினைபிடியாமை போன்ற விரும்பத்தகாத பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அத்துடன் பால் தரும் பசுக்களில் பால் மடி நோய் (mastitis) ஏற்பட்டுப் பால் உற்பத்தி பாதிக்கப் படுவதுடன் பல மாதங்களுக்கு இம்மடியிலிருந்து புருசல்லா நுண்ணுயிரி வெளியேறி, பிற கால்நடை களையும் மனிதர்களையும் துன்பமுறச் செய்து விடும். இந்நோயால் பாதிக்கப்பட்ட பொலிகாளைகளின் விதைப்பைப் பாதிக்கப்படுவதுடன் நிலையான மலட்டுத் தன்மையும் ஏற்படும். இத்துடன் இந்நுண்ணுயிரிகள் மூட்டுகளில் மூட்டுக்கட்டி(hygroma) ஏற்படுத்திவிடும். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட பொலி காளைகளை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தும் போது அவை பிற கால்நடைகளுக்கும் இந்நோயைப் பரப்பிப் பேரழிவை ஏற்படுத்திவிடுகின்றன. இந்நோயால் ஏற்படும் பொருளாதார இழப்புகள். கன்று வீச்சு நோயால் கன்றுகளின் பிறப்பு எண்ணிக்கை பெரிதும் குறைவதுடன் அப்பண்ணையில் இளங்கன்று இல்லாத நிலையையும் ஏற்படுத்தி விடுகிறது. மலட்டுத் தன்மையால் பல முறை செலவு செய்து இனப்பெருக்கம் செய்வதால் உயர்வகை விந்து வீணா வதுடன் பண இழப்பும் ஏற்படும். இவற்றை மீறியும் சினையுற்ற கன்றின் பிறப்பு இடைவெளி மிகவும் அதிகமாகிவிடுகிறது. இதனால் ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் திட்டம் பயன் இல்லாமல் போய் விடு கிறது. இந்நோயின் கொடுமையினால் ஏற்படும் பால் மடி மாற்றத்தால் பாலின் அளவு மிகவும் குறைந்து பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நிலை யான மலட்டுத் தன்மை ஏற்படுவதால் கால்நடை பேணல் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் மிக விலையுயர்ந்த கால்நடைகளையும் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கொடிய கருப்பை நோயால் பல பசுக்கள் இறந்து விடுகின்றன. இந்நோய்ப் பாதிப்பால் பொலி காளை களின் இனப்பெருக்கத்திறன் குறைவதுடன், மலட்டுத் தன்மையும் மூட்டுகள் பாதிப்பால் வேலைத்திறனும் குறைந்து அப்பண்ணையில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். மனிதர்களுக்கு இந்நோய் பரவும் விதங்கள் புருசல்லா மெலிட்டன்சிஸ். இவ்வகை நுண்ணு யிர்கள் வெள்ளாட்டுப் பாலின் மூலமாக மனிதர் களைத் தாக்குகின்றன. இவ்வகைப் புருசல்லா நுண்ணுயிரி வெள்ளாட்டுப் பாலில் மிகுதியாக உள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஆட்டுப்பாலைக்காய்ச்சாமல் விரும்பிச் சாப்பிடுவதால் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் நோயுற்ற ஆடுகளைப் பராமரிப்போரும், ஆட்டு மந்தை மேய்ப்போரும், இறைச்சிக்கூடத் தொழி லாளர்களும் இந்நோயால் பீடிக்கப்பட்டுத் துன்ப மடைகின்றனர். புருசல்லா அபார்ட்டஸ். இவ்வகை நுண்ணுயிரிகள் காய்ச்சாத பாலின் மூலம் மனிதர்களுக்குப் பரவிப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நோயால் பாதிக்கப் பட்ட பசுக்களையும், கன்றுகளையும் இறைச்சிக் காகப் பயன்படுத்தும்போதும், கருச்சிதைவுப் பொருள் களைக் கையாளும் போதும் இந்நோய் மனிதரைத் தாக்கும். அவ்வாறே புருசல்லா சூயிஸ் மற்றும் புருசல்லா கேனிஸ் நுண்ணுயிரிகள் நோயுற்ற பன்றி மற்றும் நாயைக் கையாளும்போது மனிதர்களைத் தொற்றிக் கொள்கின்றன. நோயினைக் கண்டறியும் முறைகள். நோய் கண்ட கால்நடைகளில் தோன்றும் மேற்கூறிய நோய் அறி குறிகள் மூலமாக இந்நோயைக் கண்டறியலாம். வீசப்பட்ட கன்றின் மண் ஈரல், வயிற்றுப் பொருள் கள், நச்சுக்கொடி, கருச்சிதைவின் கழிவுப்பொருள் களிலுள்ள நுண்ணுயிரிகளை நுண்ணோக்கி முறை யிலும் ஆய்வுக்கூடத்திலும் பிரித்தெடுத்துக் கண்டறி யலாம். பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பாலைச் சோதித்து இந்நோயினைக் கண்டறியலாம். இந்நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள், மனிதர்