பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/900

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880 குருநீதம்‌

880 குருந்தம் மத்தளங்களைப் போன்று இடையில் பருத்தும் முனை களில் சிறுத்தும் குத்து (c) அச்சுக்கு இணையாக நீண்டும்காணப்படுகின்றன. சிலபடிகங்களின் பட்டகக் கூம்பு மற்றும் பட்டக முகங்களில் கிடைக்கீறல்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் (1120) பக்கவாட்டத் காணப்படுகின்றன. தில் அமைந்துள்ள கோடுகள் இக்கோடுகள் அடியிணைவடிவினை ஆறு பகுதி களாகப் பிரிக்கக் காணலாம். . குருந்தத்தின் படிகங்கள் பொதுவாக (1011) மீது படல இரட்டுறல் அடைந்துள்ளன. சில அடியிணை வடிவின் (0001) மேல் ஊடுருவிய அல்லது அம்பு போன்ற உருவத்தில் படிக இரட்டுறல் பெற்றுள்ளன. குருந்தம் உருண்டையான துகள்களாகவும் கெட்டி யான திண்மங்களாகவும், படலங்களாகவும் காணப் படும். குருந்தத்தில் கனிமப்பிளவுகள் இல்லை.(0001) தளத்தில் கனிமப் பிரிவுகள் பெரிதும் காணப்படு கின்றன. இவை இடைவிட்டுக் காணப்படும்.(1051) தளத்தில்கனிமப்பிரிவுகளும் தெளிவாகக் காணப்படும். இக்கனிமங்கள் வளைமுறிவு (குழி முறிவு) அல்லது சீரற்ற முறிவை உடையன. படல-இரட்டுறல் பெற் றவை; எளிதில் நொறுங்கக்கூடியவை. பொதுவாக குருந்தம் மிகவும் வலிவானது; முறியாதது. கடினத்தன்மை 9 ஆகும். வைரத்திற்கு அடுத்தபடி யாக கடினத்தன்மை மிக்க கனிமம் இதுவே, இதன் ஒப்படர்த்தி 4.0-4.1. து வைர - மிளிர்வு அல்லது பளிங்கு மிளிர்வு உடையது. சில நேரங்களில் முத்து மிளிர்வையும் காட்டும். அடியிணைவடிவின் பக்கங் கள் சில சமயங்களில் முத்து-மிளிர்வு உடையவை. தன் பொன் குருந்தம் பல வண்ணங்களில் கிடைக்கிறது. பெரும்பாலும் சாம்பல் நிறமாயிருக்கும். நிறமற்றும் பலவகை நீலநிறத்திலும் மஞ்சள் மற்றும் நிறத்திலும், ஊதா நிறத்திலும் பச்சை, இளஞ்சிவப்பு. இரத்தச் சிவப்பு, பசுமை கலந்த சாம்பல் நிறத்திலும் நீல - சாம்பல் மற்றும் சருகு நிறத்திலும் காணப்படும். நீலம் அல்லது சிவப்பு நிறங்களிலுள்ள குருந்தம் அணிகலக் கற்களாக உள்ளது. இவை "நீலம்" அல்லது கெம்பு' என்று வழங்கப்படுகின்றன. சில படிகங்களில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நிறங்களைக் காண லாம். கெம்பு (ரூபி) எனப்படும் சிவப்புக் குருந்தம் சூடாக்கப்பட்டால் முதலில் பச்சையாகவும், பின்னர் நிறமற்றதாகவும் மாறுகிறது. குளிர வைத்தால் மீண் டும் பச்சை நிறமாகவும் பின் சிவப்பு நிறமாகவும் ஆகிறது.நீலநிறக் குருந்தம் 1300°C வெப்பத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது. குளிர வைத் தால் பசுமையான நீலநிறத்தைப் பெறுகின்றது. அணிகலக் கல் தரமுடைய நீலம் மற்றும் கெம்பு எனப்படும் குருந்தம் நின்று-ஒளிர்வும், புற-ஊதா ஒளி யில் கிளர்-ஒளிர்வும் பெறுகிறது. குருந்தத்தின் தூள் நிறமற்றது. அணிகலக்கல் தரமுடைய குருந்தம் ஒளி புகுந்தன்மை உடையது. சில குருந்தத்துணுக்குகளின் (0001) தளங்களில் குத்து -(C) அச்சைச் சுற்றிலும் அறுகோண வடிவுடைய வண்ணத் தாரைகள் காணப் படுகின்றன. இந்தியாவில் கிடைக்கும் சில சருகு நிறக் குருந்தத்தில் நுண்ணிய தட்டையான (ஹெமடைட் கனிமங்கள் (0001) தளத்திற்கு இணையாக இருக்கும். தாய்லாந்து முதலிய இடங்களில் கிடைக் கும் கறுப்புக் குருந்தங்களில் (0001) தளத்தில் பிற கனிமங்கள் உள்நுழைவுகளாக உள்ளமையால், குருந்தத்தில் காணப்படும் கனிமப்பிரிவுக்கு அவை காரணமாகின்றன. இந்த உள்நுழைவுகளையுடைய கறுப்புக் குருந்தம் மெருகேற்றப்பட்டால் ஆறு அல்லது பன்னிரண்டு கதிர்களோடு கதிர்த் தோற்றம் பெற்று விளங்கும். இந்தக் கதிர்த்தோற்றமுடையவை அணிகலன்களில் இடம் பெறுகின்றன. குருந்தம் 2035°C வெப்பத்தில் உருகுகிறது. து அமிலத்தில் கரைவதில்லை. குருந்தத்தின் ஒளிவிலகல் 1.7760;8=1.7573-1.7677. நிறமுடைய எண்கள் = 1.7653- இதன் ஒளிவிலகல் எண்களுக்கிடையேயான வேறுபாடு மிகவும் குறைவு. இருண்ட குருந்தங்களின் ஒளிவிலகல் எண் மதிப்பு மிகுவதைக் காணலாம். குருந்தம் ஓரொளி அச்சையும், எதிரொளி(-)சுழற்றும் பண்பை யும் உடைய கனிமமாகும். பெரும்பாலும் இது இரு ஒளி அச்சுகளைக் கொண்டு காணப்படுகிறது. இவற்றின் ஒளி அச்சுக்கோணம் 10-12° ஆகும். ஒரு குருந்தம் 58 ஒளி அச்சுக் கோணத்தில் இருந்த தாகக் கூறப்படுகிறது. நுண்ணோக்கியில் காணும்போது குருந்தம் இருண்ட நிறமுடையது. அதிர் நிறமாற்றம (dichroic) உடையது. இதில் அசாதாரண கதிர்த் திசையை விடச் சாதாரண கதிர்த் திசையில் ஒளி உட்கவர்வு மிகுதி. இலங்கையில் கிடைக்கும் குருந்தத்தின் அதிர்திசை நிறமாற்றம் அவுரிநீலத்திலிருந்து வெண்மை கலந்த நீலமாகவும் இருக்கும். ஆஸ்திரேலி யாவில் கிடைக்கும் குருந்தம், நீல நிறத் திலிருந்து வெளிர்பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சையாகவும், இந்தியா யாவில் கிடைக்கும் கெம்பு வகைக் குருந்தம் இருண்ட ஊதாகருஞ்சிவப்பிலிருந்து வெளிறிய மஞ்சளாகவும் இருக்கக் காணலாம். மஞ்சள் குருந்தத்தில் அதிர்திசை நிறமாற்றம் காணப்படுவ தில்லை. வகைகள். குருந்தத்தில் முக்கியமாக இரு வகைகள் உண்டு. அவை நீலம் (sapphire), கெம்பு (ruby); இவை அணிகலக் கற்கள். இவை அழகிய வண்ணங்களில் ஒளிபுகும் அல்லது ஒளி கசியும் தன்மையுடன் கிடைக்கின்றன. வண்ணத்தின் அடிப் படையில் வெவ்வேறு பெயர்களுடையன. நீலம் என்பலை நீல நிறமானவை. சிவப்பு நிறமுடையவை