பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/901

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருந்தம்‌ 881

ரூபி அல்லது ஓரியண்டல் ரூபி எனப்படும். மஞ்சள் நிறமானவை ஓரியண்டல் டோபாஸ் எனவும், பச்சை நிறமுடையவை ஓரியண்டல் மரகதம் (emerald) எனவும் வழங்கப்படுகின்றன. விண்மீன்களைப்போல் கதிர்களையுடைய அழகிய குருந்தமும் உண்டு. குருந்தம். இது இரண்டாம் வகைக் குருந்தம். இருண்ட பளபளப்பற்ற வெளிறிய நீலம், சாம்பல், சருகு அல்லது சுறுப்பு நிறமுடன் இருக்கும். இந்தியா ல் கிடைக்கும் கருமை அல்லது சாம்பல் அல்லது புகை நிறத்திலுள்ள குருந்தம்"அடமன்ட்டைன்ஸ்பார் எனப்படும். சாம்பல் எமரி. - இவ்வகை, சுறுப்பு அல்லது கலந்த கறுப்பு நிறத்தில் துகள்களாகக் கிடைக்கும். மேக்னடைட். ஹெமடைட் எனும் இரும்புக் கனிமங் கள் எமரியுடன் கலந்திருக்கும். சிலவற்றில் இரும்பு- ஸ்பினல், ஹெர்சினைட் ஆகியவையும் கலந்திருக்கும். வை எப்போதும் துகள்களாகவே இருக்கும். குருந்தத்தில் மிகக் சிறிய அளவில் இரும்பு (Fe), டைட்டேனியம் (Ti), குரோமியம் (Cr) ஆகியவை கலந்திருக்கும். குருந்தத்தின் நிறத்திற்கு இவை காரணமாகின்றன. கெம்பு எனப்படும் குருந்தத்தின் சிவப்பு நிறத்திற்குக் குரோமியமே காரணமாகும். இரும்பு அல்லது டைட்டேனியத்தின் கலப்பால் சஃபயர் நீலநிறமுடையது. இரும்பு, கார்னட் ஸ்பினல், இல்மனைட், ரூட்டைல் ஆகியவற்றைக் கனிம நுழைவுகளாகக் கொண்ட குருந்தம் 'எமரியா கும். குருந்தம் மாற்றமடைவதால் சாய்சைட், மார்கரைட், அபிரகம் (வெள்ளை). ஸ்பினல், கயனைட் முதலிய கனிமங்கள் தோன்றுகின்றன. சில சமயங்களில் டையோஸ்பார், ஆண்டாலுசைட், டூர்மலின் ஆகியவையும் தோன்றுகின்றன. பெக் குருந்தம் பலவகையான பாறைகளில் காணப் படுகிறது. மாற்றுருப் பாறைகள் மற்றும் மடைட்டுகளில் மிகுதியாகவும் நெஃபிலீன்-சயனைட்டு களிலும், சில சமயம் பசால்ட்டுகளிலும் கிடைக்கிறது. படிகச் சுண்ணாம்புப் பாறை, டோலோமைட், நைஸ், குளோரைட் - படலப்பாறை (schist), அபிரக - படலப் பாறை கிரானைட் ஆகிய பாறைகளில் பெருவாரி யாகக் கிடைக்கிறது. ஆற்றின் வண்டல் படிவுகளி லிருந்து அணிகலக்கல் வகையைச் சார்ந்த குருந்தம் கிடை க்கிறது. குருந்தம் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா, யோகோ, குல்ச், மோன்டனா, கொலராடோ பென்சில்வேனியா, நியூயார்க், நியூஜெர்சி முதலிய இடங்களிலும், சுனடா, நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, பர்மா. லாந்து, ஆப்கானிஸ்தான், ஜப்பான், டிரான்ஸ்வால் தாய் தென்னாஃபீரிக்கா, மடகாஸ்கர், கிய நாடுகளிலும் கிடைக்கிறது. குருந்தம் 88/ ஆஸ்திரேலியா சிறந்த தரமான கெம்பு பர்மாவிலுள்ள மோகக் மாவட்டத்திலும். ஐராவதி ஆற்றின் வண்டல் படிவு களிலும் மலையடிவாரங்களிலும் காணப்படுகிறது. சில அப்பகுதியிலுள்ள படிகச் சுண்ணப்பாறைகளில் உள்ளன. பர்மாவில் கிடைத்த ஏறத்தாழ 700 கிராம் எடையுள்ள கெம்பு பிரிட்டனிலுள்ள கண்காட்சிச் சாலையில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் ரத்ன புரி (காரணப்பெயர்) மற்றும் ரக் வானா மாவட்டங் களில் பல நிறங்களில் கூழாங்கற்களாக ஆற்றின் வண்டல் படிவுகளில் கிடைக்கிறது. நீலம், கெம்பு ஆகியவை கம்போடியா, தாய்லாந்து ஆகிய இடங் களில் கிடைக்கின் ன்றன. ஆப்கானிஸ்தானிலுள்ள சுண்ணாம்புப் பாறைகளிலிருந்து கெம்பும், ஜப்பானி லிருந்து நீலம் மற்றும் சாம்பல் நிறப் படிகங்களும் கிடைக்கின்றன. . - படிகங் மடகாஸ்கரில் அபிரசு படலப்பாறைகளிலும் ஆற்றுப்படிவுகளிலும் குருந்தம் பெரிய களாகக் கிடைக்கிறது. தென் ஆஃபிரிக்காவிலும், டிரான்ஸ்வாலிலும் பெக்மடைட்டுகளில் படிகங் களாகக் கிடைக்கிறது. டிரான்ஸ்வாலில் 150 கிலோ எடையுள்ள மிகப்பெரிய படிகம் கிடைத்துள்ளது ரஷ்யாவிலுள்ள யூரல் பகுதியில் சர்ப்பைன்டைன் நைஸ் இரண்டிற்குமிடையேயுள்ள பகுதியில் பெரிய நுழைவுப்பாறைகளாகக் குருந்தமும். அனார்த் தைட்டும் கிடைக்கின்றன. ஸ்விட்சர்லாந்தில் படி கங்கள் நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் டோலோ மைட்டிலிருந்து கிடை டக்கின் றன. இத்தாலியில் ஃபெல்ஸ்பாரிலிருந்தும்,பிரான்சில் பசால்ட்டிலிருந்தும் கிடைக்கின்றன. ஸ்வீட டனில் பெருமளவு பட்டகப் படிகங்களாகவும், நார்வேயில் நெஃபிலின் - குருந்தம் பெக்மடைட்டாகவும் காணப்படுகின், ன்றன. வில் குருந்தம் சயனைட் பாறைகளிலிருந்து கிடைக்கும். கண்டா இந்தியாவில் பல டங்களில் குருந்தம் காணப் படுகிறது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, சேலம். கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பெருமளவில் கிடைக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் 1.5 கி.மீ.-8 கி.மீ. அகலமும், 65 கி.மீ. நீளமுமுள்ள பகுதியில் குருந்தம் உள்ளது. நாமக்கல்லுக்கு அருகேயுள்ள சித்தம் பூண்டிப் பகுதியில் 1.5கி. IA. அகலமும் 16 கி.மீ. நீளமுமுள்ள பகுதியில் குருந்தம் கடந்த இருநூறு ஆண்டுகளாக வெட்டியெடுக்கப்படுகிறது. காங்கேயத்திற்கு அருகிலுள்ள சிவன்மலையில் னைட்டுப் பாறைகளில் குருந்தம், கிரைசோபெரில், ஸ்பீனல், சிர்க்கான், நெஃபிலின் ஆகிய களுடன் காணப்படுகிறது. கர்நாடகா சிருங்கேரி ஜாகிரில் தரமான சிவப்பு நிறக் குருந்தம் கிடைக்கிறது. இதன் தெற்கிலுள்ள மலைப்பகுதி களில் பழுப்பு நிறத்தில் படிகங்களாகக் கிடைக்கிறது. சய கனிமங் மாநிலத்தில் அ.சு.8.56