பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/903

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரூயிஃபார்மிஸ்‌ 883

ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல அறிவியலறிஞர் களால் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் குருக்ஸ் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் மனோ தத்துவக்கொள்கையை ஆராய்ந்தார். 1900 ஆம் ஆண்டில் கதிர்வீச்சுப் பற்றி ஆராயும்போது ஸ்பின் தாரிஸ்கோப் என்னும் ஆல்ஃபாத்துக்கள் கண்டுபிடிப் பானை உருவாக்கினார். குரூயி ஃபார்மிஸ் த. தெய்வீகன் நெட்டைக் கொக்குகள், நீர்க் கோழிகள் ஆகிய பறவைகள் குரூயிஃபார்மிஸ் (gruiformes) பிரிவில் அடங்கும். இவை பெரும்பாலும் நீர் நிலைகளிலும் அவற்றின் கரையோரங்களிலும் வசிக்கின்றன. இப் பறவைகள் பக்கவாட்டில் அழுத்தம் பெற்றுள்ள உடல்வாகுடையன. எனவே அடர்ந்த நீர்த் தாவரங் களிடையே எளிதில் நகர்ந்து செல்கின்றன. கால் களும், விரல்களும் நீண்டிருக்கும். கால் விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டு நீந்துவதற்கு ஏற்றவாறு உள்ளன. நன்கு ஓடவும், மூழ்கவும் செய்யும். இவற்றின் மார்பெலும்பின் கீல் (keel) வளர்ச்சி குன்றியுள்ளது. எனவே இப்பறவைகள் குறைந்த பறக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. அலகுகள் பல் குரூயிஃபார்மிஸ் 883 வேறு அமைப்புடையன. மீன், மெல்லுடலிகள், சிறிய நீர் வாழ் உயிரினங்கள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. சில பறவைகள் தாவர உணவையும் உட்கொள்ளும். செரிமானத் தொகுப்பில் இரைப்பை இல்லை. இப்பறவைகள் நீர்வாழ் தாவரங்களைக் கொண்டு எளிய கூடுகளை அமைத்து அவற்றில் மிகுதியான முட்டைகளை இடுகின்றன. நெட்டைக் கொக்கு (Anthropoides Virgo). இப் பறவைகள் சாம்பல் நிறமுடைய பருமனான பெரிய நாரை போன்றவை. இவை குளிர்காலத்தில் இந்தி யாவிற்கு வலசை வருபவை. கர்நாடக மாநிலத்தின் வடபகுதியிலும், திருநெல்வேலியிலும் காணப்படு கின்றன. கூட்டமாக வாழும் வழக்கமுடையன. பெரும்பாலும் இப்பறவைகள் தங்கள் நீண்ட கழுத்தை வளைத்து, தலையை இறக்கைக்குள் செருகியபடி ஒற்றைக் காலில் கூட்டமாக நிற்கும். தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை விரும்பி உண்ணும்.இவை பயிர்களுக்குப் பேரழிவை விளை விக்கின்றன. வடநாட்டில் ஆயிரக்கணக்கில் காணப் டுகின்றன. வடக்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இனப்பெருக்கம் செய்யும். நீலமார்புக் கானாங் கோழி (Indian blue breasted banded rail). இப்பறவைகள் நீர்வளம் மிகுந்த தென் னிந்தியப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் மிக நீண்ட கால் விரல்கள் குளங்களில் களின் மீது நடந்து செல்ல உதவுகின்றன. தனித்தோ, இணையாகவோ காணப்படும். விதை, லை இவை நாமக்கோழி நெட்டைக் கொக்கு அ.க. 8-56 அ