பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/906

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

886 குரோம்‌ பதனிடுதல்‌

886 குரோம் பதனிடுதல் குரோம் பதனிடுதல் இம் முறை கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. 1858 இல் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரடலிக் நாப், குரோம் கொண்டு தோல்களைப் பதனிடலாம் என்று கூறினார். அதே நாட்டைச் டென்னிஸ் என்பார் அதை சேர்ந்த மார்ட்டின் மேலும் செம்மைப்படுத்தி வணிக ரீதியாகச் செய் முறை செய்து காட்டினார். இவ்வாறு குரோம் பதனிடும் முறை வழக்கத்திற்கு வந்தது. முன்பு பெரும்பான்மையான தோல்களைத் தாவரப் பதனிடும் முறையில் பதனிட்டுப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் குரோம் பதனிடும் முறை வழக் கத்திற்கு வந்த பின்பு இன்று உலககெங்கும் குரோமை முதன்மையான பதனிடும் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இம்முறையில் சிவ குறைபாடுகள் (மெல்லிய தோல்கள் மற்றும் சுற்றுப் புறச் சூழலில் மிக்க மாசுபடும்) இருந்தும் தோல் பதனிடுவோரால் இது விரும்பப்படுகிறது. சோடியம் டைகுரோமேட்டிலிருந்து குரோமிய நீர்மம் தயாரித்தல். பத்துப் பங்கு சோடியம் டைகுரோமேட் 9 பங்கு செறிந்த கந்தக அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும். சோடியம் டைகுரோமேட்டை ஒரு பங்கு நீரில் கரைக்க வேண்டும். இதில் சுந்தக அமிலத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். இதை ஈயத்தகடு வேய்ந்த மரத்தொட்டிகளில் செய்யலாம். வெல்லப் பாகை (molasses) 2) - 3 பங்கு சிறிது சிறிதாக மேலே கூறிய கலவையில் சேர்க்க வேண்டும். சுருக்கம் (reduction) முழுமை அடைந்ததும் நீர்மத்தைப் போதுமான நீர் சேர்த்து அதில் உள்ள குரோம்- ஆக்சைடுக்குத் (Cr,0,) தகுந்த கணக்கில் வை வத்து முதிரவிட்டுப் பதனிடுவதற்குப் பயன்படுத்தலாம். மேலே கூறிய முறையைச் சாதாரணமாக அனைத்துத் தோல் பதனிடும் தொழிற்சாலைகளி லும் பயன்படுத்தலாம். மேலும் சல்ஃபர் டைஆக்சைடு (SO,), சோடியம் பை சல்ஃபைட்டைக் கொண்டும் சோடியம் டைகுரோமேட்டைச் சுருக்கியும் பயன் படுத்தலாம். வெல்லப்பாகு கொண்டு சுருக்கப்பட்ட நிறமியத் தில் கரிம அமிலங்கள் (organic acid) உண்டாக்கப் படுகின்றன. இவை குரோமியக் கூட்டுக்குள் (chro mium complex) புகுந்து அவற்றின் பதனிடு தன்மையை மாற்றும். இந்தக் குரோம் நீர்மத்தைக் கெட்டியாக்கித் தெளிக்கும் முறையில் உலர வைத்தால் பால் துள் போல் கிடைக்கும். இக்குரோம் சாரம் வணிக முறை யில் தோல் பதனிடுவோருக்குக் கிடைக்கிறது. குரோம் நீர்மம் முழுமையும் சுருக்கப்பட்டுள்ளது என்பதைச் சில சொட்டு குரோமிய நீர்மத்தை ஓர் ஆய்வுக் குழாயில் போட்டு அதனுடன் போதிய அளவு நீர் சேர்த்து, அமோனியா ஆவியையும் சேர்த்து அந்தக் கூட்டு நீர்மத்தைக் கொதிக்க வைத்துப் பிறகு வடி கட்ட வேண்டும். சுருக்கம் முழுமையாகி இருந்தால் வடிகட்டிய நீர்மம் நிறமற்று இருக்கும். குரோம் ஆக்சைடு (Cr,0, நீர்மத்தில், உள்ள குரோமிய pH அளவு, நீர் மத்தின் கார-உப்புத்தர (basicity) அளவு, சோடியம் சல்பேட் (Na, SO,) அளவு இவற்றைக் கண்டறிந்து தோலுக்குப் பயன்படுத்துகின்றனர். ஒரு மாற்றிகளின் (masking agent) செயல்கள். தொட்டி நீர்மம் (one bath chrome tanning) தயாரிக் கும்போது, சுருக்கியாகப் பயன்படுத்தும் பொருளுக்கு ஏற்ப அந்த நீர்மத்தில் மாற்றிகளின் அளவு இருக்கும். குறிப்பாக வெல்லப்பாகு கொண்டு சுருக்கியாசுப் பயன்படுத்தும் குரோம் நீர்மத்தைக் கூறலாம். சில நீர்மங்களில் மாற்றிகள் இரா. அப்போது தகுந்த மாற்றிகளைப் போதுமான அளவு நிறமிய நீர்மத் துடன் சேர்க்க வேண்டும். இந்த மாற்றிகளை நிறமிய நீர்மத்தில் சேர்த்து முதிர்வு அடைய விடுவதால், நிறமிய நீர்மத்தின் கூட்டுப்பொருள் மாறுபட்டிருக்கும். இதன் விளை வாகப் பதனிடும் தோவில் நிலைப்படுத்தப்படும் நிற மிய அளவு மிகுதியாகும். நீர்மத்தில் இருக்கும் நிலை யான சல்ஃபேட்டின் அளவு குறையும். தோலின் கார-உப்புத் தர அளவும் (basicity) மிகுதியாகும். குரோம் பதனிடும் முறை. இதில் பயன்படும். முக்கிய நிறமியப் பதனிடு பொருள் கார நிறமிய சல்ஃபேட்டாகும். இதற்குப் "பச்சைத் தோல்களைச் சுண்ணாம்பு நீக்கி வேரி (pickling) ஊற வைத்துப் (pH 2.8 அதற்குக் கீழும்) பின்பு பதனிட வேண்டும். இதைப் பீப்பாய்களில் பதனிடுவது சிறந்ததாகும். பீப் பாயில்வேரி ஊற வைத்த தோல்களை மட்டும் நிறுத்தி வேரி நீரை இறைத்து விட வேண்டும். பின்பு குரோம் சாரத்தை (10%) நேராகப் பீப்பாய்களில் இட்டுப் பீப்பாயை ஒரு மணி நேரம் உருட்ட வேண்டும். அடுத்து, தோலில் குரோம் நன்றாக ஊடுருவிய பின்பு 100% நீரைச் சேர்த்து மேலும் ஒரு மணி 30 நிமிடம் பீப்பாயை உருட்டிப் பின்பு pH அளவைக் கணித்துக் காரமாக்குவதைச் (basification) செய்ய வேண்டும். காரமாக்குதலைச் சோடியம் பை கார்பனேட் கொண்டு செய்யலாம். pH அளவு 3.8க்கு கொண்டு வந்து குரோம் பதனிடும் முறையை முடிக்கலாம். நீண்ட நாள் பதனிட்ட தோல்களைப் பாதுகாக்கப் பயன்படும் பொருளைக் கொண்டு பாதுகாக்கலாம். அதற்கு அந்தப் பீப்பாயில் 0.05-01% குளோரின் ஏற்றப்பட்ட ஃபீனாலைப் பயன்படுத்தலாம். தோல் களைப் பீப்பாய்களிலிருந்து எடுத்துப் பட்டறையில் வைக்க வேண்டும். நீர் வற்றாமல் இருக்கப் பாலித்தீன் தாள்களைக் கொண்டு தோல்களைப் போர்த்தி வைக்க வேண்டும். கொதி நீர் ஆய்வு (boiling test). குரோம் பதனிட்ட தோல்களைக் கொதி நீரில் ஒரு நிமிட நேரம் அமுக்கி