குரோமியம் 887
வைத்து எடுத்துப் பார்த்தால் தோல் சுருங்கியோ அதன் இயற்கைத் தன்மையை இழந்தோ இருக்கக் கூடாது. இதைச் செய்முறையில் செய்யத் தோலில் ஒரு கனமான பகுதியைத் தேர்ந்தெடுத்து இரண்டு அங்குலப் பரப்பளவை வெட்டி எடுத்து அதன் பரப் பளவை ஒரு தாளில் குறித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கண்ணாடிக் குவளையில் நீரைக் கொதிக்க வைத்து வெட்டி எடுத்த தோலை ஒரு நிமிட நேரம் அமுங்கி இருக்குமாறு கண்ணாடிக் குச்சியைக் கொண்டு துழாவிக் கொண்டே இருக்க வேண்டும். பின்பு அந்த வெட்டுத் துண்டைக் கொதி நீரிலிருந்து எடுத்து ஆறப்போட்டு முன்பு குறித்த பரப்பளவின் மேல் வைத்து ஒத்துப் பார்க்க வேண்டும். தோல் சுருங்கி இருக்கக் கூடாது. மேலும் தோலைத் தொட்டால் மென்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் குரோம் தோல் நன்றாகப் பதனடைந்துள்ளது என அறியலாம். குரோம் பதனிடுதவின் கொள்கை. கோலஜன் அமிலம் போலவும், காரம் போலவும் இரு வேறு பட்ட தன்மையுடையதாகச் செயல்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து வில்சன் எனும் அமெரிக்கர், காரம் போல் செயல்படும் குரோமியம் ஹைட்ராக் சைடோடு (chromium hydroxide) கோலஜன், அமிலம் போல் செயல்பட்டு, நிலையான குரோமியக் கோலஜனேட் (chromium-collagenate) என்னும் கூட்டுப் பொருளைத் தருகிறது என்றார். மேலும் ஆய்வாளர் ஒருவர். கோலஜனில் (cola- gen) இருக்கும் கார்பாக்சைல் பகுதிகள் (carboxyl groups) நீர்மத்தில் இருக்கும் குரோமிய அணுவில் நுழைந்து இணைந்து அங்கிருக்கும் பிற இணைந்த பகுதிகளை (coordination groups) வெளியேற்று கின்றன என்று கண்டறிந்தார். இப்புதிய கூட்டுப் பொருள் புரதப் பொருள்களின் சங்கிலியை (protein chain) இணைக்கும் பாலமாகப் பயன்பட்டு, பதனிட்ட தோல்களின் சுருங்கும் அனற்பதன நிலையை அதிகப் படுத்துவதாகக் கருதுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. சிறிதளவு குரோமியம் ஹைட்ரஜன் இணைப்பிகளோடு (hydrogen bond) அல்லது எஞ்சி ருக்கும் இணைதிறன் (valency) ஆற்றலோடு ணைவதாகத் தோன்றுகிறது. எம்.எஸ்.ஒளிவண்ணன் நூலோதி.J.M. Coulson and J.F. Richardson, Chemical Engineering, Third Edition, Volume 2. Pergame Press, Oxford, 1978. குரோமியம் தனிம வரிசை அட்டவணையில் Vib தொகுதியில் முதல் தனிமம் குரோமியம் (chromium) ஆகும். குரோமியம் 887 இது வெள்ளி போன்ற பளபளப்பான கடினமான உலோகம். 1798 இல் எல், என். வாகுவாலின் (L. N. Vauquclin) என்பாரால் குரோமியம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுலோகத்தைக் சும்பியாகவும் நீட்டலாம். குரோமிய மேற்பூச்சு. உலோகங்களின் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு முலாம் பூசுதலில் பெரும்பாலும் பயன்படுகிறது. இயற்கையில் கிடைத்தல். இயற்கையில் குரோ மியம் தனித்த நிலையில் கிடைப்பது இல்லை. இதன் முக்கிய தாது குரோமைட் (FeO, Cr,O,) ஆகும். இது இயற்கையில் தூய்மையாகக் கிடைப்பதில்லை. குரோமைட் என்பது அடர் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறம் வரை கொண்ட, மக்னீசியம் சிலிக் கேட்டுகள் பெரும்பான்மையாகவும், ஏனைய சிலீக் கேட்டுகள் குறைவாகவும் கலந்துள்ள தாது. இதன் வேதியியல் வாய்பாட்டைப் பின்வருமாறு குறிப் பிடலாம். (Mg, Fe) (Cr, Al, Fe),0, அல்லது MgO. FeO, Cr,0, Al, 03. Fe,0g. 65% வரையில் குரோ மைட் மிக்க உயர்வகைக் குரோமைட் கனிமம் இயற்கையில் அரிதாகக் கிடைக்கிறது. சாதாரணமாக, இத்தாதுவில் குரோமியம், இரும்பு ஆகியவற்றின் விகிதம் 3:1 என்னும் அளவில் உள்ளது. புவிமேல் தோட்டில் மிகச் செறிவான கனிமங்களில் குரோ மியம் கிடைப்பதால் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது. குரோமியம் பெருமளவில் கிடைக்கும் நாடு களில் அமெரிக்கா, கனடா ரஷ்யா, துருக்கி, இந்தியா போன்றவை குறிப்பிடத்தக்கவை. 7 உலோகவியல். குரோமியம் உலோகவியலில் முதற் படி, கனிமத்திலிருந்து தூய குரோமைட் தாதுவைப் பெறுவதாகும். பின்னர் அலுமினியம் அல்லது கார்ப னால் தெர்மைட் முறையால் (thermite process) குரோமியத் தாது ஒடுக்கப்படுகிறது. குரோமியம் கனிமத்தை நன்கு பொடியாக்கிப் புவிஈர்ப்புத் தன்மையால் செறிவூட்ட வேண்டும். இதற்கு நன்கு தூளாக்கப்பட்ட கனிமத்தைப் பெரிய தொட்டி ஒன்றில் எடுத்துக் கொண்டு அதன் வழியே நீரைத் தொடர்ச்சியாகச் செலுத்த வேண்டும். இதனால் அதிக கனமுள்ள கனிமத் துகள்கள் அடியில் தங்கிவிடுகின்றன. தேவையற்ற மாசுகள் நீரால் கழுவப்படுகின்றன. இவ்வாறு செறிவூட்டப்பட்ட குரோமைட் கனிமத்தை மிகையளவு சோடியம் கார்ப னேட் மற்றும் சிறிதளவு சுண்ணாம்புக் கல் ஆகியவற் றுடன் காற்றில் வறுக்க வேண்டும். இரும்பு ஆக்சைடு நீரில் கரையாது. ஆதலால் சோடியம் குரோமேட் கரைசலை வடிகட்டி கந்தக அமிலம் சேர்க்கச் சல் ஃபேட் வீழ்படிவாகிறது. மூலக் கரைசலில் உள்ள சோடியம் குரோமேட்டுடன் சூடான அடர் பொட்டா சியம் குளோரைடு கரைசலைச் சேர்த்தால் சோடியம் குளோரைடு குறைந்தகரைதிறன்பெற்றுள்ளமையால். முதலில் வீழ்படிவாகக் கிடைக்கிறது. இதன் மூலக்