பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/910

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 குரோமேட்‌

890 குரோமேட் குரோம் அலூம். சல்ஃப்யூரிக் அமிலத்தின் முன்னி லையில் பொட்டாசியம் டைகுரோமேட்டைச் சல்ஃ பர் டை ஆக்சைடால் ஒடுக்குவதால் பொட்டாசியம் குரோமியம் சல்ஃபேட் (குரோம் அலூம்) உண்டா கிறது. இதன் வேதி வாய்பாடு K,S0,, Cr,(SO,),. 24 H,O இதன் படிகங்கள் செந்நீல நிறமுடையவை. ஏனைய அலூம்களுடன் ஒத்த அமைப்புடையவை. குளிர்ந்த நீரில் செந்நீல நிறமாகவும், 70°C வெப்பப் படுத்திய பின் பச்சை நிறமாகவும் மாற்றமடைகின் றன. இது நிறம் நிறுத்தியாகச் (mordant) சாயத் தொழிலிலும், காலிக்கோ அச்சுத் தொழிலிலும், பதனிடுதலிலும் பயன்படுகிறது. குரோமியம் ஆக்சைடு. இது குரோமியம் செஸ்க்வி ஆக்சைடு என்றும் (Cr,O) குறிப்பிடப்படுகிறது. பொட்டாசியம் டை குரோமேட் மற்றும் கார்பனைச் சேர்த்து வெப்பப்படுத்திப் பின்னர் அதை நீருடன் சேர்த்தால் இது கிடைக்கும். மேலும் அம்மோனியம் டைகுரோமேட்டை வெப்பப்படுத்தியும் இதைப் பெற லாம். இது பச்சை நிறமுடைய படிக உருவமில்லாத அதிக உருகு நிலையுடைய பொடி. இது உருகிய போராக்ஸ் அல்லது கண்ணாடியில் கரைந்து பச்சை நிறத்தைக் கொடுக்கிறது. எனவே இது கண்ணாடி, பீங்கான் தயாரிப்புகளில் பயன்படுகிறது. இது வெப் பத்தால் சிதைவடைவதில்லை. ஹைட்ரஜனாலும் ஒடுக்கமடைவதில்லை கார்பனுடன் சேர்த்து ஒடுக்கும் போது இது குரோமியம் உலோகமாக ஒடுக்கமடை கிறது. இது ஓர் ஈரியல்பு ஆக்சைடு. . குரோமியம் ஹைட்ராக்சைடு. தகுந்த அளவு சோடி யம் ஹைட்ராக்சைடு கரைசலை ஏதாவது ஒரு குரோமிக் உப்புக் கரைசலுடன் சேர்ப்பதால் குரோ மியம் ஹைட்ராக்சைடு (Cr (OH) ) உண்டாகிறது. இது வலிமை குன்றிய காரம். வெப்பப்படுத்தும்போது நீரை இழந்து கிடைக்கிறது. +2 சேர்மங்கள் என இவை குரோமஸ் உப்புகள் (chromous salts) வழங்கப்படுகின்றன. +2 ஆக்சிஜனேற்ற குரோமியச் சேர்மங்கள் சிறந்த ஒடுக்கிகளாக விளங்குகின்றன. 2 குரோமியம் உவோகத்தை அமிலங்களால் கரைத்தோ Crs+ அல்லது Cr,0,2 அயனிகளைத் துத்தநாகம் கரைந்த அமிலங்களில் ஒடுக்கியோ இவ் வகைச் சேர்மங்கள் பெறப்படுகின்றன. மிக எளிதாக இதன் நீர்க் கரைசல்கள் காற்றால் ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. சோடியம் ஹைட்ராக்சைடை Cr+ கரைசல்களில் சேர்த்தால் குரோமஸ் ஹைட்ராக்சைடு (Cr(OH),) வீழ்படிவாகக் கிடைக்கிறது. பின்னர் அது ஆக்சிஜனால் Cr(OH), ஆக ஆக்சிஜனேற்றம் அடைகிறது. (r* + அயனி நீரில் அழகிய செந்நீல நிறமுடையது. Cr+, Mn' +, Fe+ அயனிகள் பண்பு களில் ஒத்துள்ளன. Crh + சேர்மங்கள் நீரில் கரையாத உப்புகளாகவே நிலைத்து இருக்கும். குரோமியம் (II) சல்ஃபேட், ஃபெரஸ் சல்ஃ பேட்டை ஒத்த படிக வடிவுடையது. குரோமியத்தை நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலத்தால் கரைத்து இது தயாரிக்கப்படுகிறது. இதன் நீர்க்கரைசல், ஆக்சிஜன். நைட்ரிக் ஆக்சைடு ஆகியவற்றை உறிஞ்சுகிறது. அம்மோனியம் ஹைட்ராக்சைடு கலந்த கரைசல் எத்திலீன் வளிமத்தை உறிஞ்சுகிறது. மோர் உப்பு களைப் போன்று இதுவும் இரட்டை உப்புகளைத் தருகிறது. குரோமியம் (II) அசெட்டேட் நீரில் கரையாத செங்கல் சிவப்பு நிறச் சேர்மம். இதைத் தயாரிக்கும் போதும் பயன்படுத்தும்போதும் நைட்ரஜன், ஹைட்ரஜன் உள்ள சூழ்நிலை இருக்க வேண்டும். குரோமியத்தை ஹைட்ரஜன் ஹாலைடு அமிலங் களுடன் சேர்த்துச் சூடுபடுத்தினால் குரோமஸ் ஹாலைடுகள் உண்டாகின்றன. குரோமஸ் குளோ ரடு வெண்பட்டு நிறமுடையது. நீரில் கரைவதால் நீல நிறக் கரைசல் உண்டாகிறது. குரோமேட் த.தெய்வீகன் (ro- எனும் வாய்பாடு கொண்ட நேர்மின் அயனி குரோமேட் ஆகும். இது HCrO, எனும் வாய்பாடு கொண்ட, ஆனால் நிலையற்ற அமிலமான குரோமிக் அமிலத்தின் தொடர்பு அயனியாகும். குரோமிக் ஆக்சைடை (CrO,) நீரில் கரைத்தால் எதிர்பார்க்கப் படும் குரோமிக் அமிலத்திற்குப் பதிலாக H,C,O,, H,CO எனும் பாலி அமிலங்கள் விளைகின்றன. எனினும், திண்மநிலையில் குரோமேட்டுகள் நிலைத் தன்மைமிக்கவை. 10 குரோமேட்டுகள் அமிலம் சேர்க்கப்படும்போது டைகுரோமேட்டுகளாக (dichromatcs) மாறுகின்றன. 2Cro - + 2H + = C[,O, + H,O மஞ்சள் வண்ணம் ஆரஞ்சு வண்ணம் பெரும்பான்மையான குரோமேட் உப்புகள் மஞ்சள் நிறமுடையவை வெள்ளி குரோமேட் மட்டும் சிவப்புநிறம் கொண்டதாகவும், அமிலம், காரம் இரண் டிலுமே கரையக்கூடியதாகவும் உள்ளது. கால்சியம், பேரியம், ஸ்ட்ரான்சியம், பாதரசம் (I), காரீயம் ஆகியவற்றின் குரோமேட்டுகள் நீரில் கரையா. குரோமேட் அயனியைக் கண்டறிவதற்குண்டான முறையில் இவ்வீழ்படிவுகள் பயன்படுகின்றன. இவ் வுப்புகள் அமிலத்தில் கரைந்து டைகுரோமேட்டு களாக மாற்றம் அடைகின்றன. இவ்வினை குரோமிய