குரோமோசோம் 891
உலோகத் தயாரிப்பில் ஒரு முதன்மையான கட்ட மாகும். குரோமேட்டுகள் சிறந்த ஆக்சிஜனேற்றிகள். பூச்சுப் பொருள்களில் நிறமிகளாகவும் (pigments), தோல் பதனிடுவதிலும் பயன்படுகின்றன. குரோ மேட்டுகள் அரிமானத் தடுப்புப் பொருள்களாம். மே. ரா. பாலசுப்ரமணியன் குரோமைட் இக்கனிமம் S தாதுக்களில் முக்கியமானதாகும். குரோமைட் (chromite) கனசதுரப் படிக இனத்தைச் சார்ந்தது. இது நுண்ணிய மணிகளாகவும் திண்ணிய வடிவாகவும் காணப்படும். இது ஒழுங்கற்ற முறிவு உடையது. கடினத்தன்மை 5.5: அடர்த்தி 4.1-4.9. உலோக மிளிர்வு கொண்டது. இது இரும்புக்கறுப்பு நிறமாகவும், பழுப்புக் கலந்த கறுப்பு நிறமாகவும் காணப்படும். எளிதில் நொறுங்கக் கூடியது. இதன் வேதி இயைபு Fe Cr,0,. இது குரோமியத்தின் முக்கிய தாதுவாகும். குரோமைட்டுக் கனிமம் பொது வாகப் பெரிடோடைட், செர்பன்டினைட்டுப் பாறை களில் காணப்படும். குரோமைட், துருக்கி, தென் ஆஃப்ரிக்கா, சோவியத் நாடுகள், ஃபிலிப்பைன்ஸ், ருடேசியா, இந்தியா ஆகிய இடங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. ந. சந்திரசேகர் நூலோதி. A. N. Winchell and H. Winchell. Elements of Optical Mineralogy, Part II, Wiley Eastern Private Ltd, New Delhi, 1968. குரோமோசோம் 891 அதற் ஒரு குறிப்பிட்ட உயிரியின் செல்லில் கென்றே தனித்தன்மை வாய்ந்த வடிவமும் எண்ணிக் கையும், அமைப்பும் கொண்ட குரோமோசோம்கள் காணப்படும். எடுத்துக்காட்டாக, தவளையின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் செல் பகுப்பின் போது 26 குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும் 'V' வடிவத்தில் பெரிதும் சிறிதுமாக இருக்கும். ஓர் இனத்தைச் சேர்ந்த அனைத்துத் தவளைகளிலும் அதே வடிவத்துடனும், எண்ணிக்கையுடனும் குரோமோசோம்கள் அமைந் திருக்கும். இவ்வாறே, மனித உடலில் 46 குரோமோ சோம்கள் வெவ்வேறு வடிவில் உள்ளன. குரோமோ சோம் ஆய்வு அறிஞர்களுக்கு ஒரு செல்லில் உள்ள குரோமோசோம்களைக் கவனித்தவுடன் இவை எந்த விலங்கு அல்லது தாவரத்தின் குரோமோசோம் கள் எனக் கூறிவிட இயலும். வண்ணங்கள் குரோமோசோம்களின் அமைப்பும், தன்மையும். குரோமோசோம்கள் சிலவகைச் சாயப் பொருள்களை விரைந்து ஏற்றுக்கொள்வன; இப்பொருள்களை அல்லது வண்ணப் பொருள்கள் (stains) என்பர். குரோமோசோம் என்னும் இலத்தீன் சொல்லுக்கு வண்ணத்தை ஏற்கும் வடிவம் என்று பொருள். இரண்டாம் நிலைக்குறுக்கம் குரோமோசோம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் செல்களில் நியூக்ளியஸ் (nucleus) அமைந்திருப்பதை அறியலாம். நியூக்ளியசினுள் மெல்லிய நியூக்ளியவலை உள்ளது. மேற்சொன்ன இழைகளைக் குரோமோநீமா (chromonema) என்றும், குரோமேட்டின் இழை (chromatin thread ) என்றும் சொல்வர். வளர்ந்து பெரிதான, மிக நீண்ட இழைகளாலான், வ்வொரு செல்லும், செல்பகுப்பு (cell division மூலம் இரண்டிரண்டாகும். அப்போது நியூக்ளியசின் உள்ளேயுள்ள இழைகளான குரோமோந்மாக்கள் மாற்றமடைந்து குச்சிகள் போலச் சற்றுத் தடித்த, முன்பிருந்ததைவிடக் குட்டையான, ஆனால் நூல் போல் வளையும் தன்மையுள்ளனவாக ஆகின்றன: இவற்றைக் குரோமோசோம்கள் (chromosomes} என்பர். புயம் முதல்நிலைக் குறுக்கம் படம் 1. குரோமோசோம் குரோமோசோம்களைத் பதற்கும், ஆராய்வதற்கும் தெளிவாகக் காண் மறைமுகப் பகுப்பு