பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/913

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரோமோசோம்‌ 893

சில குரோமோசோம்களில், மேலும் ஒரு குறுக்கம் இருப்பதுண்டு; இதை இரண்டாம் நிலைக் குறுக்கம் என்பர். பெரும்பாலும் இக்குறுக்கத்தில் நியூக்ளி யோலஸ் ஒட்டி இருக்கும். நியூக்ளியோலஸ் தோன்று வதும் மறைவதும் இத்தகையை இரண்டாம் நிலைக் குறுக்கத்தோடு தொடர்பு கொண்டவை. ஒவ்வொரு குரோமோசோமின் இரு இறுதிப் பகுதிகளிலும் கடைமணி (telomere) எனும் ஓர் அமைப்பு உள்ளது. அதாவது ஒருகுரோமோசோமுக்கு இரண்டு நுனிப் பகுதிகளிலும் பக்கத்திற்கொன்றாக இரண்டு கடைமணிகள் உண்டு. இவை இருப்ப தாலேயே குரோமோசோம்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைந்துவிடாமல் உள்ளன. குரோமோசோம்கள் ஒவ்வொன்றும் குன்றல் பகுப்பின் இடைநிலையின் போது நீளவாக்கில் இரண்டாகப் பிளந்தது போன்ற தோற்றம் கொண் டிருப்பதைக் காணலாம். இதைக் குரோமேட்டிட் என்பர். ஒவ்வொரு குரோமோசோமும் இடை நிலையின்போது ஒரே அமைப்புடைய இரண்டு குரோ மேட்டிட்களால் ஆனதாகக் காணப்படும். இரண்டு சூரோமேட்டிட்களும் மைய மணியினால் ஒன்றாக ணைக்கப்பட்டிருக்கும். (படம்-2). மிக நீளமான குரோமோநீமா இழை சுருள்வில் போல் சுருட்டிக் கொள்வதாலேயே குரோமோ சோம்கள் தடித்தும், குறுகியும் காணப்படுகின்றன. குரோமோநீமாவில் நூற்றுக்கணக்கான ஜீன்கள் அடங்கியுள்ளன. எனவே, குரோமோசோம்கள் ஜீன்களால் ஆனவை. 1= குரோமோசோமின் அடிப்படை இழையான 3 நா.மீ. (nanometer = 10~& மில்லிமீட்டர்) கன முடைய டி.என்.ஏ (DNA) இழையை முன்னும் பின்னும் மாறி மாறி மடித்த அமைப்பே குரோமோ சோம் என்று டூப்ரா (Dupraw) என்பார் தெரி வித்தார். குரோமோசோம் செல்லியலின் தந்தை எனப்போற்றப்படும் எம். ஜே. டி.ஒயிட் (M.J.D.White) என்னும் அறிஞர் 1973 இல் இது ஒப்புக்கொள்ளத் தக்கதன்று என்பதைத் தம் ஆணித்தரமான வாதத்தால் மெய்ப்பித்துள்ளார். மேற்கூறிய 3நா.மீ. இழைச் சுருள் சுருளாகவே குரோமோ சோமில் அடக்கி வைக்கப்பட்டுள்ளதென கருதினார். ஒயிட் குரோமோசோம்களின் வகைகள், சில குரோமோ சோம்கள் நீண்ட குச்சிகளாக இல்லாமல் புள்ளி போல மிகவும் குட்டையாக இருப்பதுண்டு; இவற்றில் மைய மணி எங்கு உள்ளது என அறிவது எளிதன்று. எண்ணிக்கை மிகுந்துள்ள குரோமோசோம்கள் இவ் விதம் புள்ளிபோல் இருப்பதுண்டு. தவிர சில வகை உயிரினங்களில் (ஹெமிப்டீரா என்னும் பூச்சியினம் போன்றவற்றில்) எண்ணிக்கையில் குரோமோசோம் குரோமோசோம் 893 கள் குறைவாக இருப்பினும் அவை புள்ளி வடிவ முடையவையாக இருக்கும். கடைமணி டைமணி- கடைமணி- நீள் புயம் குறும் புயம் படம் 4, (அ) ஒரு நீள் கொம்புள்ள வெட்டுக்கிளியின் குரோமோசோம்கள். (ஆ) அக்ரோசென்ட்ரிக் குரோமோசோம் M: மெட்டா சென்ட்ரிக், S: சப் மெட்டா சென்ட்ரிக், A: அக்ரோ சென்ட்ரிக், Dயுள்ளி வடிவக் குரோமோசோம். நீளமான குரோமோசோம்களில் பல வடிவங்கள் உண்டு. அவை I. V- வடிவில் உள்ள மெட்டா சென்ட்ரிக் குரோமோசோம்: இவ்வகைக் குரோமோ சோமில் இரு புயங்களும் ஏறக்குறைய ஒரே நீளம் உடையவை. 2.J - வடிவம் உள்ள ப்மெட்டா சென்ட்ரிக் குரோமோசோம். இதில் ஒரு புயம் நீளமாகவும் மற்றொன்று குட்டையாகவும் இருக்கும். 3. மூன்றாம் வகை அக்ரோசென்ட்ரிக் குரோமோசோம்: இதில் ஒரே ஒரு புயம் உள்ளது. போலத் தோன்றினாலும் உண்மையில் இதற்கு மிகச் சிறிய குறும்புயம் ஒன்று உண்டு. 4. நான்காம்