894 குரோமோசோம்
894 குரோமோசோம் வகை டீலோ சென்ட்ரிக் குரோமோசோம்: இதில் குறும் புயம் இல்லை எனவும், மைய மணி ஒரு குரோமோசோமின் நுனியில் அமைந்திருப்பதாகவும் சில செல்லியலார் கருதுகின்றனர். ஆனால் கடை மணி இல்லாத இறுதிப் பகுதியில் மையமணி உள்ள குரோமோசோம்கள் இல்லை என்பது ஒயிட்டின் கருத்தாகும். பெரும்பாலான குரோமோசோம்களில், ஒரு குரோமோசோமுக்கு ஒரேயொரு மையமணியே இருக்கும். ஆனால் லூஸுலா (iuzula) போன்ற தாவரங்களிலும். வீடுகளில் காணப்படும் தேள் களிலும் காணப்படும் காக்ஸிடீ இனத்தைச் சேர்ந்த உயிரிகளிலும் குரோமோசோம் முழுதும் பல மையமணிகள் உள்ளன. இவற்றைத் தவிர அஸ் காரிஸ் யூனிவாலன்ஸ் போன்ற உருண்டைப் புழுக் களின் கரு வளர்ச்சியின்போது பல மையமணிகள் கொண்ட, மிகப் பெரிய குரோமோசோம்கள் தோன்றும். பின்னர், இவை பிரிந்து சிறு சிறு துண்டுகளாகி, ஒவ்வொரு துண்டும் ஒரு மைய மணி யுடைய குரோமோசோமாக மாறும். கேரியோடைப். ஒரு செல்லில் அமைந்துள்ள. குரோமோசோம்களின் தொகுதியைக் கேரியோ டைப் என்பர். குறிப்பிட்ட எண்ணிக்கையும், குறிப் பிட்ட (ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை களால் ஆன) குரோமோசோம்களும் ஒரு கேரியோ டைப்பில் இருக்கும். ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு கேரியோடைப் உண்டு. படம் - 4 இல் பார்ப்பது எலிமியாசெகூரிஜெரா (Elimaca securigera) என்னும் நீள் உணாகொம்பு உடைய வெட்டுக்கிளியின் (longhorned grasshopper) கேரியோடைப் ஆகும். இதில் மெட்டா சென்ட்ரிக் ஸப்மெட்டா சென்ட்ரிக், அக்ரோ சென்ட்ரிக், புள்ளி போன்றவை ஆகிய குரோமோசோம்களைக் காணலாம். ஒத்த பொதுவாக. ஒரு கேரியோடைப்பில் வடிவுடைய (identical) குரோமோசோம்கள் இரண் டிரண்டாக இருக்கும். இவை இணை குரோமோ சோம்கள் (homologous pair of chromosomes) ஆகும். இவற்றில் ஒன்று தாயிடமிருந்தும், ஏனையது தந்தையிடமிருந்தும் பெறப்படும். ஆணாக அல்லது பெண்ணாக காரணமான இருப்பதற்குக் பால்குரோமோசோம்கள் (sex chromosomes) மட்டும் சிலவகை உயிரினங்களில் வெவ்வேறு வடிவில் இருக்கும் அல்லது இணையாக ல்லாமல் ஒன்றே ஒன்று மட்டும் இருக்கும், படம் - 5 உள்ள வடிவமுள்ளதே எலிமியாவின் பால்- குரோமோசோம். இது ஓர் ஆணின் செல். இதில் ஒரே ஒரு பால் குரோமோசோம்; பெண்ணில் இரண்டு - வடிவக் குரோமோசோம்கள் (sex chromo- somes) இருக்கும். 5 bஇல் மனிதனின் குரோமோ சோம்கள் 46 ஐயும் கொண்ட கேரியோடைப்பைக் காணலாம். படம் 5. (அ) எலிமியா செக்கூரிஜெரா என்னும் வெட்டுக்கிளியின் குரோமோசோம்களாஜான கேரியோடைப் (ஆ) 46 மனிதக் குரோமோசோம்களும் சேர்ந்த கேரியோடைப் உட பால் குரோமோசோம்கள். ஓர் உயிரியின் லமைப்பு அதன் செல்கள் ஆகிய அனைத்துப் பண்பு களுக்கும் காரணமான ஜீன்கள் அதன் குரோமோ சோம்களில் அமைந்துள்ளன. ஆணாகவோ பெண் ணாகவோ இருப்பதற்குக் காரணமான ஜீன்கள் குறிப்பிட்ட ஓர் இணைக் குரோமோசோம்களிலோ ஒரே ஒரு குரோமோசோமிலோ இடம் பெற்றுள் ளன. இக் குரோமோசோம்களைப் பால் குரோமோ சோம்கள் என்பர். பிற எல்லாக் குரோமோசோம் சுளும் ஒருங்கே உடல் குரோமோசோம்கள் க வழங்கப்படுகின்றன. என