896 குரோமோசோம்
896 குரோமோசோம் வகைப்படுத்த முடியும். ஜீம்ஸா பட்டையிடல் {Giemsa banding or G. banding),மைய மணிப்பட்டை யிடல் (centromeric banding or C. banding), குவினாக்ரின் பட்டையிடல் (Quinacrine banding or Q- banding), எதிர்மாறான பட்டையிடல் (reverse banding or R-banding) என நான்கு வகையில் பட்டைகள் ஏற்படுத்திக் காணமுடியும். 0- பட்டையிட்ட குரோமோசோம்களை ஃப்ளூரசன்ட் நுண்ணோக்கி மூலமே காணமுடியும். G-பட்டை களும்,Q பட்டைகளும் ஒரே மாதிரியானவை. R- பட்டைகள் இதற்கு நேர்மாறானவை; இடைவெளி கள் நிறமேற்கும். ஆழ்ந்து நிறமேற்க வேண்டியவை இடைவெளியாகத் தோன்றும். C-பட்டையிடும் போது, மைய மணிக்கு இருபுறமும் உள்ள குரோமோ சோம் பகுதிகள் சிறு பட்டைகளாக, நிறமேற்றுத் தெரியும். இம்முறைகளைப் பயன்படுத்திக் குரோமோ சோம்களை அடையாளம் காண்பதில் . இன் மிகுந்த G - பட்டையிடப் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பட்ட மனிதக் குரோமோசோம்கள் சிலவற்றைப் படம் 6இல் காணலாம். 8 & இல் G பட்டையிடப் பட்ட மனிதக் குரோமோசோம்கள் 1,2,3 தோற்றமும். 6 b இல் Q பட்டையிடப்பட்ட அம் மூன்றின் தோற்றமும் காட்டப்பட்டுள்ளன. என்பது ஒரு தாவரத்தின் (vicia faba) Q பட்டை யிடப்பட்ட குரோமோசோமின் பெரிதாக்கப்பட்ட தோற்றமாகும். 6 c வேறு ஓர் இனத்தைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும், தாவரங்களும் பெரும்பாலும் ஒரே எண்ணிக்கை யுள்ள குரோமோசோம்கள் உடையவை. சில சமயங்களில் கூடுதல் எண்ணிக்கையாகச் சிறு குரோ மோசோம்கள் சிலவும் இருப்பதுண்டு. இவற்றை B- குரோமோசோம்கள் அல்லது கூடுதல் எண்ணிக்கைக் குரோமோசோம்கள் (supernumerary chromosomes } என்பர். இத்தகைய குரோமோசோம்கள், செல்லில் உள்ள ஏனைய குரோமோசோம்களினின்றும் பட்டவை. பெரும்பாலும் இவற்றில் பாரம்பரியத்துக் குக் காரணமாக ஜீன்கள் எதுவும் இருப்ப தில்லை. கூடுதல் எண்ணிக்கைக் குரோமோசோம்கள் சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு இருக்கும். ஆனால் சோளத்தில் இவற்றின் எண்ணிக்கை 30 வரை இருப்பதைக் கண்டுள்ளனர். மிக அதிகமான எண்ணிக்கையில் இருந்தால் வை தீமை செய் கின்றன. பெரிய அளவுள்ள chromosomes). பொதுவாக, குரோமோசோம்கள் உருவில் சிறியவை; குறைந்தது ஆயிரம் மடங் காவது நுண்ணோக்கியில் உருப்பெருக்கினால்தான் வற்றைத் தெளிவாகக் காணமுடியும். ஆனால், சிலவகைச் செல்களில் மிகப்பெரிய அளவுடைய குரோமோசோம்கள் காணப்படுகின்றன. இவை இரு வகைப்படும். அவை: குரோமோசோம்கள் (giant பல இழைகளால் ஆன (polytene) குரோமோ சோம்கள்; இவற்றைப் பல்லிழைக் குரோமோசோம் கள் எனலாம். இவை ட்ரோஸோஃபிலா (drosophila), கைரோனோமஸ் (chironomus) போன்ற ஈக்கள் இனப் பூச்சிகளின் இளவுயிரிகளில் உள்ள சில வகையான திசுக்களில் தெரிகின்றன. குறிப்பாக. உமிழ்நீர்ச் சுரப்பியின் செல்களில் மிக நன்றாகத் தெரியும். பல்லிழைக் குரோமோசோம்கள் வேறு பல உயிரி களிலும் உள்ளன என்பதை ஆராய்ந்து வெளி யிட்டுள்ளனர். இவை நாடா போன்ற அமைப்புடன் மிக நீளமாகவும், அகலமாகவும் இருக்கும். குரோ மோசோமின் குறுக்கே நிறமேற்கும் பட்டைகளுடனும் நிறமேற்காத இடைவெளிப் பட்டைகளுடனும் ை அமைந்திருக்கும். லாம்ப்- பிரஷ் குரோமோசோம்கள் (lamp brush chromosomes) குப்பிகள் ஆய்வுக் குழாய்கள் போன்றவற்றைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப் படும் தூரிகை போன்ற வடிவம் உடையவை. மிக மிக நீண்ட இழைகள், ஆனால் மெல்லிய குறுக்களவு உள்ளவை. மீன்கள், நிலநீர்வாழ்வன, ஊர்வன போன்ற சில விலங்குகளின் முட்டை உண்டாகும் போது இவை காணப்படும். கீழினங்களின் குரோமோசோம்கள். வைரஸ்களில் பெரும்பாலானவை R.N.A யால் ஆன குரோமோ சோம்களை உடையவை. சில வைரஸ்கள் மட்டுமே D.N.A யால் ஆன குரோமோசோம்களைப் பெற் றுள்ளன. பாக்டீரியா விழுங்கிகள் (bacteriophage) பின்னர்க் கூறப்பட்ட வகையைச் சேர்ந்தவை. வைரஸ் களிலும், பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி ஆகிய வற்றிலும் குரோமோசோமில் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உண்டு. புரதம் எதுவும் இல்லை. பிளாஸ்மா சவ்வு குரோமோசோம் பிளாஸ்மிட் சைட்டோபிளாசம் செல்சுவர் படம் 7. பாக்டீரியத்தின் அமைப்பு